(விஜிதாலோகநாதன், ஜெர்மனி)
இன்றையஉலகம் விளம்பரயுக்திகளுக்குள் கட்டுண்டுகிடக்கிறது. உணவுமுதல் வைத்தியம்,அழகுமுதல் ஆடைகள்,அநாவசியதேவைகள்-சேவைகள் எனஅனைத்திலுமேவிளம்பர இருட்டையேவெள்ளொளியாகக் கருதவைத்துவிட்டார்கள். சுவாசக்காற்றும் பைகளில் அடைத்துவிற்பனைக்குவந்தாற் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இலகுவாக இலவசமாகக் கிடைக்வுள்ளமனிதவளம் அனைத்தையும் வர்த்தக்குழுமங்கள் தம் லாபத்தேவைக்காகக் காவுகொண்டுவிட்டன. அதிலும் ஆண்களைவிடவிசேடமாகப் பெண்கள் விளம்பரவலைக்கண்களுக்குள் வேடன் வலையின்மான்களாகச் சிக்கிக்கொண்டனர்.அழகுஎன்பதுபெண்களுக்குஉணவை,நீரைவிடவும் முக்கியமாகப் பார்க்குமளவுக்குகற்பிதப்படுத்தியகலை-கலாச்சாரப் பாங்குகளும் இன்றையவிளம்பரவர்த்தகர்களுக்குபெரிதும் துணைநிற்கின்றன.
இந்தவகையில் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் மட்டுமல்லதாய்,பேத்தியரும் கூட அழகுபடுத்துகிறோம் என்றபெயரில் தம் ஆயுள்நீட்சியையும்,ஆரோக்கியத்தையும் அழிப்பதோடுபணத்தையும்,நேரத்தையும் வீண்விரயம் செய்கிறார்கள்.
அழகுநிலைய(Beauty Parlor)ங்கள் சந்திக்குசந்திதெருவுக்குபத்துஎனப் பெருகிவருகின்றன.குறைந்தநாட்கள் பயிற்சி,குறைந்தமுதலீடுஎன்பதால் வேலையற்றிருக்கும் பெண்களும் இதைத் தொழிலாக்கிக்கொள்ளமுனைவதால் கிராமங்களிலும் குடிசைக் கைதொழிலாகவியாபித்துவிட்டிருக்கிறது.
இதைதொட்டுஒப்பனைப்பொருட்கள்(Cosmetic)உற்பத்திஅதுதொடர்பானவிற்பனைகளும் லாபமீட்டும் அதிகவழிகளாகஅறியப்பட்டுவிட்டன.
ஓப்பனைபொருட்களினதும் அவைகள் அகற்றி(Remover)களினதும் தரமென்பதுதாக்கமான இரசாயனங்களின் பங்களிப்புடனேதான் தயாராகின்றன. இந்த இரசாயனங்களின் தாக்கம் என்ன? எவ்வளவுகாலத்தில் இவைவெளிப்படும் என்பதுபற்றியஆய்வுகளோ,மனிதஉடல் உறுப்புகள் அமைப்புகள் பற்றியஅறிவோ இத் தொழில் செய்பவரிடமோ,இதற்காகப் போகும் பெண்களிடமோ இதுவரைதெரிந்திருக்கவாய்ப்பேயில்லை.
பிளாஸ்டிக் யன்னல் சட்டங்கள்,பொருட்களின் மேற்தளங்களில் அகற்றமுடியாதகறை,புகைப்படிவுகளிருந்தால்நகங்களில் மைஅகற்றும் சுநஅழஎநசஐசிறியபஞ்சிலெடுத்துப் போட்டுப்பாருங்கள் ஒற்றைப் பாவனையோடுபளிச்சென்றிருக்கும். காரணம் நுண்ணியமேற்படையோடுசேர்த்தேஅழுக்கைக் அகற்றுகிறதுஎன்பதுதான் உண்மை.
நகங்கள்,முடிகள் இறந்தகலப்படைகள்என்றாலும் அவை அடியிலிருந்துதள்ளப்படுவதால் தலை,விரல் நுனிகளில் உள்ளஉயிர்க்கலங்களுடன் இணைப்பிலுள்ளவை. தலைச்சாயம்,நகப்பூச்சுகளின் இராசாயனங்கள் சிறுநீரகங்கள் வரைசெறியவும் தாக்கவும் செய்வதாகஅண்மையில் அறியப்பட்டிருக்கிறது. மீசைக்குமையடித்தாற் சிலருக்கு மூச்சுத்திணறல்,சொண்டுவீக்கம் என்பனஎற்படுவதுண்டு. இது மென் பகுதிஎன்பதால் உடனேவெளிபடுகிறது. தலைஓட்டிலுள்ளதசை,தோல் கலங்களிலும் இதன் தாக்கம் இருக்கவேசெய்யும். காலப்போக்கில் வெளிப்படும்.
நாற்பதாயிரம்கோடிமயிரில்நாலுமயிர்வெள்ளையானால் மையடிக்கத் தொடங்கிவிடுகிறோமேஅப்படியொருபொய் அழகுஅவசியம் தானா? இயற்கையின் அவ்வப்போதையமாற்றங்களுக்கும் அழகுண்டு,அதுதவிரக் காரணங்களும் உண்டு. இரத்தஅழுத்தம் வயதாகஅதிகரிக்கும் போதுதலையில் கறுப்புமுடிகளைவிடவெண்முடிகளின் பாதுகாப்புசாதகமானது! மூக்குமயிர்உட்படஅனைத்தும் பலகோடிஆண்டுகளின்பரிணாமத்தால் உடலுக்குத் அவசியம் தேவையெனக் கண்டு இயற்கையால்சேர்க்கப்பட்டவை.இவற்றில் எதைநீக்கினாலும் பாதிப்புண்டு.எனவேஉடலிலிருந்துஎதையாவதுஅகற்றிஅழகுபடுத்தல் மரணத்தைவிரைவுபடுத்தலுக்குசமமானது!
கண்மயிர்பிடுங்குதல்,முக-மார்பகபிளாஸ்டிக் சத்திரசிகிச்சை,அளவுமீறியஎடைக்குறைப்பு இவை இத்தகையஆபத்தானவை. மறைந்தசிலகலையுலகப்பிரபலங்கள் இதற்குஉதாரணங்கள்.
புருவமயிர்பிடுங்குதல்-திருத்தல்(Threading) இப்போஅனேகமானஇளம் பெண்கள் தினசரிசெய்கிறார்கள். இதற்கான இடுக்கிகளைதமதுஒப்பனை(Cosmetic)மடுப்பெட்டியில் போக்கு-வரத்திலும் தம்மோடுஎடுத்துத் திரிகிறார்கள்.இந்தப் புருவமயிர்கள் தோன்றும் வலயம் உடலிலும் குறிப்பாகக் கண்ணிலும் சக்திக்குரியவலயம்.நாம் சக்தியிழந்து இறப்பைநெருங்கும் போது இவையும் தாமாகக் கொட்டும் நிலைக்குவந்துவிடுவன. இவைஉயிர்ப்புள்ளபுருவக்கலங்களின் இணைப்பில்கண்ணைப் பாதுகாத்துசக்திவழங்குவன! உயிர்ப்போடுதொடர்புடையன!
பொருட்களில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் விழுந்துகாட்சியாவதுபார்வைஎன்பதுஎம் பௌதீகஅறிவு. இருந்தும் வெறும் புகைப்படக் கருவிபோலன்றிஇதற்கப்பாலும் கண்ணில் காட்சியாகும் பொருட்களைஒருவகைஅதிர்வலைகள் சென்றடைவதாகஅறியப்பட்டிருக்கிறது.
• எதிரெதிராவரும் இரு நபர்களின் இடைவெளிஅதிகமிருந்தாலும் ஒருவர்மற்றவரைப்பார்த்தால் அவரும் திரும்பிப்பார்ப்பார்.அனேகரிடம் நடப்பது!
• நுண்ணுணர்வின் துணையின்றிஎண்ணங்களைச் செயலாக்கும் ரெலிப்பதி (Telepathy) அடிப்படையில் ஒத்தகருத்துள்ளஒருவரின்கண்மூடியிருக்கஅவரதுஎண்ணம் மற்றவரின் பார்வையில் செயலாவதைபலர்நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.
• ஓரிருவர்பார்வையில் பட்டஎடைகுறைந்தகண்ணாடிப் பொருட்கள் நடுங்கிவிழுந்துநொறுங்கியசெய்திகள் அறிந்தவை. . . . . .
• வெளவால்,பூனை,சிலவகைமீன்கள் கண்களிலுள்ளஒளிவிசேடங்கள்!
இந்தவகையில் உடலில் ஓர் அரியவகைஉறுப்புவிழிஎன்பதாலல்லவாஅரியஎதையும் கண்போல் என்கிறோம்.சிரசில் கண்ணின் சுற்றுவட்டப் பரப்பைச் சூழ காமபூரி,திலர்தம்,பொட்டு,மின்,நேமம்,அடக்கம்,பட்சி,கண்ணாடி,பாலஎனப் யோகிகளால் பெயரிடப்பட்டவர்மப் புள்ளிகள் இருப்பதாகஅண்மையில் வாசித்தறிந்தேன். இவற்றின் வெப்பத் தணிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவுமேஅடர்ந்தபுருவமயிர்பிரதேசமுள்ளது. எனச் சொல்லப்படுகிறது. இதுவரை இதைஅறிந்திருக்கநமக்குவாய்ப்பில்லை. ஆனால்அறிந்தபின்அவற்றைஅகற்றுவதைக்கைவிடவாய்பிருக்கிறது.மற்றவைபிளாஸ்டிக் சத்திரசிகிச்சைமிகஅரிதாகவே இடம்பெறுவது. அதுபோல்எடைக் குறைப்பினவசியத்தைஇல்லாமலாக்கநேர்-சீரானஉணவுப்பழக்கம்,உடலுழைப்பு,உடற்பயிற்சிகள் கைகொடுப்பன.அவையேசரியானமார்க்கமுமாகும்.