
(Maniam Shanmugam)
கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1956இல் தெரிவான தோழர் பொன்.கந்தையா அன்றைய இலங்கை அரசு கொண்டு வந்த ‘தனிச் சிங்கள’ சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை எனது முன்னைய பதிவில் பிரசுரித்திருந்தேன். அதைப் பலரும் வரவேற்றுப் பாரட்டியிருந்ததோடு பங்கிட்டும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.