பொய்கள்

அப்போது நான் குறுக்கிட்டேன்.யார்சொன்னது அங்கே சாதி இல்லை என்று? நான் சாதி உரிமைகளுக்காக போராடிய வரலாற்றுப் பின்னணி கொண்டவன்.பொய்யான பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றேன்.அங்கே வேறு சில புலி ஆதரவுத் தமிழர்களும் வந்தார்கள்.என்னைப் பார்த்து விலகிப் போய்விட்டனர்.

இப்படியான போலிப் பிரச்சாரங்கள் இந்திய மக்கள் மத்தியில் புலிகள் செய்தார்கள்.இதை குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் நம்பினர்.அதற்கான காரணம் பிரபாகரன் என்ற மீனவசமூகத்தைச் சேர்ந்த ஒருவர் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்ததே காரணம்.அந்த சமூகம் இந்தியாவில் பல சாதிகளாலும் வெறுக்கப்பட்ட சமூகம்.ஒடுக்கபட்ட சமூகம்.இதனாலேயே தமிழக மக்கள் நம்பினார்கள்.

பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையில் சைவ ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் மேலோங்கி கரையார் என அழைப்பதில் பெருமை கொண்ட சமூகம்.அவர்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வுகள் கடைப்பிடிக்கும் பின்னணி இலங்கையில் உள்ளவர்களே அறியாத கதைகள்.

1966 தீண்டாமைக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாண சாதி அமைப்பின் கொடுமைகளை உடைத்தது.அதை பலவீனப்படுத்தியது.புலிகள் வரவின்பின் புலிகள் துணையோடு பலம் கொண்டு எழுந்துவிட்டது.துப்பாக்கி முனையில் உரிமைகளை கேட்க முனைந்தவர்கள் அடக்கப்பட்டனர்.இதற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களும் சிலர் ஒத்தூதினார்கள்.தமிழ்செல்வன் கடாபிபோன்ற சில முக்கிய புலிகளால் பேசமுடியவில்லை.

இந்த உண்மைகளை புரியாமலே திருமாவளவன் போன்றவர்கள் புலி ஆதரவாளர்களானார்கள்.அவரை வன்னிக்கு அழைத்து புலிகளோடு விருந்து கொடுத்ததும் அங்கே சாதியில்லை என்ற எண்ணம் அவரிடம் குடிகொண்டுவிட்டது.இதை அடிப்படையாக வைத்தே தமிழ் நாட்டில் அவரும் தமிழ் தேசியத்தை முயற்சித்தார்.பாவம் திருமாவளவன் இப்போதுதான் உண்மைகளை புரிந்துகொள்வார்.

சந்திரிகா அதிகாரத்துக்கு வந்தபோது ரூபவாகினி கூட்டுத்தாபனத்துக்கு வசந்தராசா என்ற தமிழர் தலைவராக நியமிக்கப்பட்டார்.இவர் பின்னர் புலிகளோடு உறவாட புலிகளும் பிரச்சார்ரீதியாக உயர்த்த அவரும் மயங்கி புலி ஆதரவை வெளிபடுத்தினார்்.புலிகளின் தேவை எதிர்பார்ப்பு முடிந்தபின் கை கழுவி விடப்பட்டார்.ரணசிங்க பிரேமதாசா அவர்களும் இந்த தந்திர வலையில் வீழ்ந்து புலிகளுக்கே பலியானார்

தேவைக்காக பயன்படுத்துவதும் தேவை முடிந்தபின் தூக்கி எறியும் புலிகளின் பண்பாடு யாழ்ப்பாண மண்ணின் கலாச்சாரம்.அடையாளம்.இதை இந்திய மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.