
வரலாறு ஒரு போதும் பின் நோக்கி நகருவதில்லை. எத்தனை எதிர்ப்புகள் எதிர்வினைகள் வந்தாலும் அது முன்னோக்கித்தான் நகர்ந்தே தீரும். அதுதான் இயங்கியல் சமூக விஞ்ஞானம். இந்த வரலாற்று நகர்வில் ஒருவரது இழப்பு என்பது ஏதோ ஒரு வகையில் இன்னொருவரால் பிரதியீடும் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.