அன்றைய தேர்தல் காலங்களில் தெருவெங்கும் ஒலித்தகோசம்.இப்போது மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தப் பாட்டு கோவில் உடுக்கு இசைபோல சகல தமிழனையும் கண்மண் தெரியாமல் ஆட வைக்கும். தமிழர்களை ஏமாற்றும் கலை அறிந்த கட்சி.இந்தக் கட்சியை தமிழர்களிடம் இருந்து அகற்றுவது சுலபமான காரியம் அல்ல.தமிழர்களிடம் அரசியல் செய்ய கொள்கைகள் எதுவும் தேவையில்லை. இனவாதம், மதவாதம், சாதிவாதம் இவைகளை இலகுவில் உள்வாங்கும் இனம் தமிழினம்.
இந்த மூன்றில் ஒன்று ஏதாவது வகையில் தமிழரசுக்கட்சிக்கு கை கொடுக்கும். இவற்றை கையாளும் திறமை துணிவு ஏனையவர்களுக்கு இல்லை. எனவே தமிழரசுக்கட்சியை வடபகுதியில் அவ்வளவு சுலபமாக தூக்கி எறியமுடியாது.
ஏதாவது ஒரு கையில் சிங்களவனுக்கு சவால் விடுவது,அல்லது இஸ்லாமியரை கொச்சைப்படுத்துவது,சாதி வசை பாடுவது ஊர் பிரதேச வேறுபாடுகளை பேசுவது தமிழர்களுக்கு பிடித்தமான ஒன்று.இதை செய்யும் திறமை தமிழரசுக்கட்சிக்கே உண்டு.இதைவிட எவ்வளவு நல்லவனையும் துரோகி முத்திரை குத்தி மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த தமிழரசுக்கட்சிக்கு மட்டுமே தெரியும்.
1952 இல் இருந்து 1983 வரையும் ஏமாற்றினார்கள்.பாராளுமன்றம் போய் தூங்குவது.இல்லாவிட்டால் நீதி மன்றங்களில் வழக்காடுவது. இதைத் தவிர தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
துப்பாக்கி குண்டுகளை ஒரு சிலருக்கு பலி கொடுத்தபோதும் மீண்டும் ஒருவாறு புலிகளோடு உறவாடி புலிகளுக்கே தண்ணீர் காட்டியவர்கள் தமிழரசுக்கட்சியினர்.
நாங்கள் என்னதான் சொன்னாலும் உண்மைகளைத் தெரிந்துகொண்டே மக்கள் இவர்களுக்கே வாக்களிப்பார்கள்.இவர்களை எதிர்க்க நல்ல அரசியல் சக்திகள் இன்னமும் தோன்றவில்லை.உண்மைகளை வெளிப்படுத்த நல்லநேர்மையான ஊடகங்களும் இல்லை.
எவ்வளவுதான் கல்வி அறிவு பெற்றாலும் அரசியல் சமூக அறிவு என்பதில் தமிழர்கள் தெளிவில்லாமலேயே உள்ளனர்.
(Vijay Baskaran)