அமைச்சர் Mano Ganesan போதை பொருள் கடத்துலுடனும், பாதாள உலக கும்பல்களுடனும் தொடர்புடையவர்கள் அரசாங்கத்துடன் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த தடியை அவர் எப்போது எடுப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். போதை பொருள் கடத்தல், பாதாள உலககும்பல்கள்களின் தொடர்பில்லாமல் நடைபெறுவதில்லை. இரண்டுமே அரச அதிகாரத்தை பிரயோகிக்க கூடியவர்கள் அல்லது அணுக கூடியவர்களின் பின்னனி இல்லாமல் இயங்குவதில்லை.
அமைச்சர் அரசாங்கத்தரப்பில் போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் தலைவராக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த ஒருவர் போதை பொருள் கடத்தியவர் என்பது ஊரறிந்த இரகசியம்.
தன் அரசியல் செயற்பாடுகளுக்கு தேவை எனும் போது போதைபொருள் கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து கள்ள மௌனம் காப்பதும், இடைஞ்சல் ஏற்படுத்தும் போது மட்டும் எதிர்த்து கூப்பாடு போடுவதும் என்ன வகையான நேர்மை?.
2015ம் ஆண்டு ஜீலை மாதம் 6ம் திகதி தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவராகவிருந்த நிலங்க சமரசிங்க ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் மத்திய மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் போதைபொருள் கடத்தலுடன் தொடர்ப்பு பட்டுள்ளார் என்று கூறியிருக்கின்றார்.(http://newsfirst.lk/…/colombo-parliamentarians-invol…/102883)
அந்த மத்திய மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மனோகணேசன் தலைவராகவிருக்கும் தமிழ் முற்போக்கு முன்னணியை சேர்ந்தவர் என்பது தான் ஊரறிந்த இரகசியம்.
இதை அமைச்சரும், அவருடன் இருப்பவர்களும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார்களாயின் அது அப்பட்டமான பொய்.
குறித்த போதை பொருள் கடத்தல்காரர், யுத்தம் நடந்த காலப்பகுதியில் இராணுவத்தின் விசேட பிரிவொன்றிற்கு வெளிநாட்டிலிருந்து விசேடமாக தயாரிக்கப்பட்ட உணவு பொதிகளை இறகுமதி செய்து கொடுத்திருந்தார்.
இந்த இராணுவ பிரிவே ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள், கடத்தல்களை தநடத்தியது. யுத்ததின் பின்னர் கிறீஸ் மனிதர்களாகவும் உலா வந்தது.
சிங்கள பேரினவாத அரசுக்கு தமிழ் மக்களை அழிப்பதற்காக வழங்கிய இந்த சிறு உதவிக்கு கைமாறாக குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் போதை பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் போடப்பட்டதுடன் அனுசரணையும் வழங்கப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கட்சி செயலாளர்கள் கோரும் பட்சத்தில் போதை பொருள் கடத்தலில் தொடர்புபட்ட குறித்த கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வழங்க முடியுமென்று அறிவித்திருந்தார்.
எனினும் அமைச்சர் மனோகணேசன் செயலாளராகவிருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியோ, அவர் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சேர்ந்து நல்லாட்சி அமைத்த சுதந்திர கட்சியோ இப்படி எந்த பெயர்பட்டியலையும் பெற்றதாக தகவல் இல்லை.
நல்லாட்சி அமைத்த பின் போதை பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையாக செயற்பட்ட அப்போதைய போதைபொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிலந்த சமரசிங்கவை பதவியிலிருந்து தூக்கியிருந்தார்கள் ஒழிய எந்தவொரு போதை பொருள் கடத்திய பாராளுமன்ற உறுப்பினரையும் அம்பலப்படுத்தவில்லை.
நல்லாட்சிக்காரர்களின் நேர்மை குசும்பை ஊரறியும். தமிழ் முற்போக்கு முன்னணியை சேர்ந்த எவரும் போதைபொருள் கடத்தலில் ஈடுப்படவில்லை என கடிதம் வாங்குவது ஒன்றும் அமைச்சருக்கு பெரிய விடயம் இல்லை.
எனவே கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அந்த மத்திய மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்பதை அம்பலப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
ஏனெனில் அந்த நபர் தங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராகவிருப்பவர் என்பதே எனதும், பலரினதும் குற்றச்சாட்டும், ஊரறிந்த உண்மையும் ஆகும்.
இல்லையெனில் ஒருபக்கம் தமிழ் மக்களை அழிக்க துணை நின்ற ஒருவரை கூட்டு சேர்த்துக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க மக்கள் ஆணை கேட்பதும், போதைபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக குரல் உயர்த்துதும் மிக பெரிய மோசடியே ஆகும்.
(பழ றிச்சர்ட்)