இவர்களின் போராட்ட அரசியல் தனிபட்ட வாழ்க்கை வரலாறு பற்றி விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும் மனித குலத்தின் மீட்சிக்காக தனது நாடு என்பதற்கு அப்பால் உலகத்தின் கடைக் கோடியில் உள்ள மக்களின் நலன்களைப் பற்றி சிநதித்தவர்கள் என்ற வகையில் சேய் உம் பிடலும் நாம் வாழும் காலத்தில் அதிகம் அறியப்படும் நேசிக்கப்படும் அதே வேளை பிடலின் நெருங்கிய நண்பனும் உதைபந்தாட்ட உலகின் கனவானாகவும் திகழும் மடோனாவும் அடங்கியிருக்கின்றார்.
இவர்களைப பற்றி எதிர் வினையாற்றவும் இவர்களைக் கொல்லவும் நடைபெற்ற முயற்சிகள் பல நடந்தேறினாலும் பிடல் காஸ்ரோ ஐ கொலை செய்ய முடிவில்லை ஆனால் சேய் ஐ வெள்ளந்தியான ஒரு ஆடு மேய்பவர் காட்டிக் கொடுக்க கொல்லப்பட்டவர்தான் தோழர் சேய்.
ஆதரவு அற்றவர் என வந்த ஒருவருக்கு இருப்பதற்கு இருப்பிடமும் படிப்பதற்கு தனி அறையும் கல்லூரிக்கு கட்டணமும் உதவியும் உண்ண உணவும் கொடுத்து தன் மனித நேயத்தின் அடையாளத்தை காட்டி நின்ற ஒருவர்தான் பத்மநாபா என்ற போராளித் தலைவரின் கொலைக்காக வேவு பார்த்தலை செய்து கொலை செய்வதிலும் குழுவினருடன் இணைந்து செயற்பட்டு அந்த மனிதரின் மனித குலத்திற்கான தேவையை முழுமையாக அறியாத பேதமை நிலையில் அவரைக் கொலை செய்வதற்கு காரணமாகி இருக்கின்றார்.
இன்னும் போராட வேண்டிய வயதில் மரணத்தை தழுவிக் கொண்ட சேய் உம் தோழர் நாபாவும் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். இந்த மனித குலத்திற்கு தங்கள் நாட்டிற்கு அப்பாலும் போராடி இருக்க வேண்டியவர்கள் என்ற பார்வை அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு அல்லது ஒரு தடவை சந்தித்தவர்களும் ஏற்படுவது உண்டு. இதனை நாம் பலரிடம் இருந்து அறிந்து இருக்கின்றேன். தோழர் சேய் ஐ போல் நாம் வாழும் சூழலில் பலராலும் நேசிக்கப்படும்… விரும்பப்படும்… மதிக்கப்படும் போராளித் தலைவர்தான் தோழர் நாபா.
இன்றுடன் அவர் கொலை செய்யப்பட்டு 31 வருடங்கள் ஆகின்றன. கூடவே அவரின் மரணத்தை உறுதி செய்ய மேலும் 12 போராளிகளையும் ஒன்றாகக் கொலை செய்திருக்கின்றனர் கொலைஞர்கள் அன்று அவ்விடத்திலேயே. இது தமிழ் நாட்டில் நடைபெற்றிருக்கின்றது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்.தோழர் சேயின் மரணம் அவருடன் மட்டும் என்ற வகையில் முடிந்து போக தோழர் நாபாவின் மரணம் பெண் போராளிகள் உப்பட பலரை அவருடன் சேர்த்து பலியெடுத்திருக்கின்றது. திட்டமிடப்பட்ட மருத்துவ மனைக் கவனிப்பாறற்ற நிலையில் அனைவரது மரணமும் உறுதி செய்யப்பட்டாக மருத்துவமனை வட்டாரச் செய்திகளும் உண்டு.
தமிழ் பேசும் மககளைப் பொறுத்தவரையில் மனித நேயத்தில் விளை நிலமாகவும் ஐக்கிய முன்ணியின் பிதா மகனாகவும் திகழ்ந்தவர் தோழர் நாபா.அதற்கான வரலாற்றுச் சான்றாக திம்பு பேச்சுவார்த்தையில் அனைத்து தமிழ் தரப்பையும் ஓரணில் இணைத்து ஒரே கோரிக்கையை பேச்சு வார்த்தை மேசையில் வைத்து தமிழர் தரப்பு ஈழவிடுதலைப் போராட்டத்தில் பலமாக நின்ற காலம் இதுவே என்ற வரலாற்றை படைத்திருக்கின்றார்.
தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கு இதுவரை கிடைத்த சட்டபூர்வமான அதிகாரமான மகாணசபையை ஏற்ற மூவின மககளையும் வடக்கு கிழக்கு மக்களையும் சமமாக பிரதிநித்துவப்படுத்தி கூடவே சக விடுதலை அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி கூடவே சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்று பெரும்பான்மை அரசியல் கட்சி செயற்பாட்டாளர்களை இணைத்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை ஒரு சிக்லான இக்கட்டான கால கட்டத்தில் தைரியமாக பொறுப்பெடுத்து நடத்தி வரலாறு படைத்தவர்.
எல்லா விடுதலை அமைப்பு போராளிகள் போராளித் தலைவர்களும் எதிர நோக்கும் விமர்சனமும் பத்மநாவின் மேலும் இருந்தாலும் அதற்கு அவர் பொது வெளியில் மனித நேயத்துடன் செயற்பட்டு சுயவிமர்சனங்களையும் வருத்தங்களையும் தீர்வையும் காண முற்பட்டிருக்கின்றார் என்பதை அவரது அரசியல் வரலாறு கூறுகின்றது.
அவரைக் கொன்றவரகள் கூட தம் வாழ்வில் இவரை ஏன் கொன்றோம் என்று வருந்தும் அளவிற்கு மனித நேயம் மிக்கவர். பிறிதொரு சமயத்தில் தன்னை கொலை செய்ய அனுப்பப்பட்ட பெண் போராளிகளின் கைதின் பின்பு விடுவித்து இந்த சமூக பெண் ஒடுக்கு முறையிற்குள் இருந்து போராட்டத்திற்கு வந்த இவர்களின் செயலை நான் மதிக்கின்றேன் என்று செயற்பட்டவர்அவரின் புகழ் பாடுவதல்ல இன்றை தியாகிகள் தினத்தின் நோக்கம். கடந்து வந்த ஒரு வரலாற்றுப் பாதையை சீர்தூக்கிப் பார்த்து மனித குலவிடிவிற்கான எதிர் காலப் பயணத்திற்காக திட்டமிடுவதே நோக்கமாகும்.
தமிழ் நாட்டின் விளம்பு நிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளுடன் இரகசிய உறவையும் அவர்களின் செயற்பாட்டை ஆதரித்த நிலமையும் சம்மந்தப்படவர்கள் அறிவர். மேலும் மலையத்திலும் இலங்கை வாழ் முஸ்லீங்கள் எனைய பகுதி விளிம்பு நிலை மக்களுமே இவரின் போராட்டத்திற்கான களமாக எப்போதும் இருந்து இருக்கின்றது. அவர்களுக்கான விடுதலைக்கான பயணம் நீண்டதாக இருந்து. இதில் அவர் சில காலடிகளை எடுத்து வைக்க முன்பே வெட்டித் தறிக்கப்பட்டார்.
சமூக நீதி ஜனநாயக விழுமியங்களைப் பேணுதல் வர்க்க விடுதலை என்று இலங்கை முழுவதற்குமான புரட்சியிற்காக செயற்பட்டார் என்பதே இலங்கை அரசு நீதி மன்றத்தில் இருக்கும் இவர் பற்றி வழக்கு என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அவர் நம்பும் விரும்பும் வர்க்க விடுதலைக்கான அடித்தளத்தை இடுவோம். அதற்கு அவரின் மனித நேயத்தையும் ஐக்கியமே எமக்கு முக்கியம் என்ற நட்பு சக்திகளை இணைப்போம். மக்களுக்காக மண்ணை நேசிகின்றேன் மக்களே எனக்கு முக்கியம் என்ற வாசகங்களுடன் செயற்படுவோம். குறைந்த வளங்களுடன் புரட்சியை செய்து காட்டிய கோசிமினின் அவர் நம்பும் செயற்பாட்டை உள்வாங்கி பயணிப்போம்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் பொது மக்களுக்கு மரியாதை கலந்த அஞ்சலி. அது மாற்றுக் கருத்து விடுதலை அமைப்பாக இருந்தாலும் மாற்று இனத்தவராக இருந்தாலும் அனைவரையும் நினைவு கூருவோம் மரியாதை செலுத்துவோம்.
உலகெங்கும் உள்ள தோழர் ஆதரவாளர்கள் இடதுசாரகள் ஜனநாயகவாதிகள் நாபா அவர்சார்ந்த கருத்தியலை கொண்ட செயல்பவரகள் இணைந்து இந்த பொது வணக்க தினத்தை நடாத்தினர்.
இணைய வழியாக கனடாவில் இருந்தும் தோழர்கள் ஜேம்ஸ் சேகரன் ஞானம் உருத்திரன் போன்றவர்கள் நேரடியாகவும் ஏனையவர்கள் பெரும் தொற்றுக் காரணமாக தமது இல்லங்களில் இருந்தும் கலந்து கொண்டனர் சுமார் 5 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது