மக்களின் சமூகப் போராளி தோழர் சுபத்திரன்

இவற்றின் அடிப்படையிலேயே தனது 46 வயதில் மரணத்தை தழுவிக் கொண்ட தலமைத்துவ பண்பை முழுமையாக தனக்குள் கொண்டிருந்து சுபத்திரன் பற்றிய இங்கு பேசவிளைகின்றேன். பிரதான ஊடகங்களாலும் ஏன் வரலாற்றிலும் பொதுப் போகிலும் மறைப்பிற்கு உள்ளாக்கப்பட்ட மறுக்கப்பட்ட ஒரு சமூகப் போராளி பற்றி பேசவிளைகின்றேன்.

தோழர் சுபத்திரன் ஒரு குறிப்பிட்ட ஈழவிடுலை அமைப்பு, அதனைத் தொடர்ந்து இயக்கம், கட்சி என்ற பரிணாமத்திற்குள் இருந்தாலும் அவர் ஒரு குழு நிலை வாதத்திற்குள் உள்பட்டவர் என்று பார்க்கப்படாத சமூகப் போராளி. அவருடன் சம காலத்தில் பயணித்த பல்வேறு விடுதலை அமைப்புகள் அரசியல் கட்சியில் உள்ளவர்களும் அவருடன் நெருங்கிப் பழகிய பொது மக்களும் அறிவர் இதை. அவரின் மரணத்திற்கு காரணமான ‘துப்பாக்கி’களுக்கும் இது தெரியும்.

மிகவும் அடி மட்டத்தில் இருந்து தனது பொது வாழ்வைத் ஆரம்பித்து தொடர்ந்து பல்வேறு இக்கட்டான கால கட்டங்ளிலும் நெழிவு சுழிவுகளுக்கு ஏற்ப தன்னை முழுமையாக அர்பணித்து குடும்ப வாழ்விற்குள் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாத சூழ்லில் வாழ்ந்தவர் சுபத்திரன்.

இவரும் தனிமனித ஏதேச்சேகாரத்தின் துப்பாக்கியிற்கு பலியான பலரில் ஒருவாராகி விட்டார் என்பதே நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் சாபக்கேடாக இருக்கின்றது. இப்படியான செயற்பாடுகள்தான் எமது சமூகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் தலமைத்துவப் பற்றாக் குறைகளுக்கும் காரணமாகியிருக்கின்றது.

மாணவர் அமைப்பு, விடுதலை அமைப்பொன்றி கட்சி உறுப்பினர், ஆயுதப் பிரிவிற்கான தலமைப் பொறுப்பென்று பரிணாமம் அடைந்திருந்தாலும் எப்போதும் தனக்குள் இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்வையும், இலக்கிய ஈடுபாடுகளும், மனித நேயமும் இவருடன் கூடப் பயணித்த பண்புகளாகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தமும் இதன் பின்னரான அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பு அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலை என்று ஆரம்பித்த ஜனநாயக அரசியல் ஓட்டத்தில் மாநகரசபை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு அந்த மாநகர சபையிற்குள் வெற்றி நடை போடும் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்து செயற்பட்டவர்.

செல்லன் கந்தையன் தலமையிலான யாழ் மாநகர சபைப் பொற்காலமும் இக்கால கட்டத்தில் மீளுருவாகம் அடைந்த யாழ் நூலகமும் இவரின் ஐக்கியப்பட்ட ஆளுமையான சமூக அக்கறையுள்ள செயற்பாட்டின் வெற்றிகளாக பார்க்கப்படுகின்றது.

அன்றைய கால கட்டத்தில் யாழ் நகர சபையின் முதல்வர்களாக பதவி ஏற்ற ஒவ்வொருவரும் சுட்டு வீழ்த்தபட்டு; கொண்டிருந்த வேளையில் துணிச்சலுடன் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அதனைத் தாங்கிப் பிடித்து அந்த சபையின் செயற்பாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதை இன்றைய மூத்த அரசியல்வாதிகள் நன்கு அறிவர்.

இதன் தொடர்சியாகத்தான் செல்லன் கந்தையின் மாநகரசபை முதல்வர் பதவியும், யாழ் நூலகம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழாவும் நடைபெற்றன.

இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏற்பட்ட தடங்கலைக் கூட இராஜதந்திரத்துடன் நகர்த்தி ‘யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும்’ என்ற நடைமுறையை கையாண்டு தாமதமற்ற திறப்பை ஏற்படுதியவர் என்பதை வரலாற்றை உண்மையாக புரட்டிப்பார்த்தால் நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிகழ்வு தோழர் சுபத்திரன் இன்றி நடைபெற்று இருக்குமா என்றால் இல்லை என்பதே என்பதே என் பதிலாகும்.

சிறைச்சாலையில் காலத்தை கழித்த நாட்களில் பலவேறு விடுதலை அமைப்புளினிடையே முரண்பாடுகள் ஒருவரை ஒருவர் நிராகரித்தல் என்று சூழலிலும் சிறைக்குள் அனைத்து அரசியல் இயக்க போராளிகளுக்கிடையேயும் ஒரு இணக்கமான தோழமையான போக்கை உருவாக்குவதில் அவரின் ஈடுபாடு செயற்பாடு சம காலத்தில் அவருடன் சிறையில் இருந்தவர்களால் இன்றும் பேசப்படுகின்றது.

தேர்தல் அரசியலின் தனது அமைப்பு சார்ந்து பெரும்பான்மை இருந்தபோதும் சரியான விடயங்களை ஏனைய சக உறுப்பினர்களை ஒருங்கிணைத்துச் செயற்படலாம் என்பதற்கு அவரின் யாழ் மாநகர சபை காலத்து செயற்பாடுகள் சாட்சியாக நிற்கின்றன. இரவிராஜ் இல் இருந்து சிவபாலன் சரோஜினி யோகேஸ்வரன், செல்லன் கந்தையன் என்ற பல்வேறு முதல்வர்களுடன் அவரின் பணயங்கள் இதற்கு சாட்சி.

இதில் செல்லன் கந்தையனைத் தவிர ஏனைய யாவரும் சுபத்திரன் உட்பட பன்முகத் தன்மையை விரும்பாதவர்களால் சுட்டொழிக்கப்பட்ட வரிசையில் தோழர் சுபத்திரன் இணைந்துள்ளார்.

ஒரு தலைவனை இனம் காண்பதற்கு அவரால் வழி நடத்தப்பட்ட விடுதலை அமைப்பு, கட்சி அதனைத் தொடர்ந்து அரசு, நாட்டு மக்கள் என்று எடுத்து நோக்கின் தலைமைத்துவத்தின் பண்புகளின் இயல்பை நாம் கண்டு கொள்ள முடியும்.

பிடல் காஸ்ரோவைப் பற்றி பேசுகின்றோம்…. பெரியாரைப் பற்றி பேசுகின்றோம் …. காந்தியைப் பற்றி பேசுகின்றோம்… இன்னும் பல நல்ல தலைவர்களைப் பற்றிப் பேசுகின்றோம் என்றால் அவர்கள் சார்ந்திருந்த மக்களிடம் இவர்களினால் ஏற்பட்ட தாக்கங்களினால் ஏற்பட்ட நற் பண்பாட்டின் வெளிப்பாடுகள்தான் காரணம்.

இந்த சமூகத்தின் செயற்பாடுகள்.. பண்புகள் அந்த தலைவரை எமக்கு நினைவிற்கு இழுத்து வரவழைக்கும். வரலாற்றி நாம் பல தலைவர்கள் உதாரணமாக காட்ட முடியும்.

இதற்கு பிடல் காஸ்ரோ என்ற ஒரு தலவைரை மட்டும் உதாரணத்திற்கு சொல்லி நிற்கின்றேன் இங்கு. அவர் போராளியாகவும் நாட்டின் தலைவராகவும் வாழ்ந்து எம்மை விட்டு மறைந்தவர். இன்று கியூபாவின் மக்களிடம் காணும் மனிதாபிமானம், நட்புறவுடனான செயற்பாடு பாகுபடுத்திப் பார்க்கதாத செயற்பாடுகள் எதிரிகளிடமும் கூட மனிதாமானத்தை காட்டும் செயற்பாடுகள், பாரபட்சமின்றிய உதவிகளை வழங்குதல் என்ற சிறப்பான அம்சங்களை அங்கு சென்ற வரபவர்கள் அனுபவத்தில் காண முடியும்.

இவை எல்லாம் பிடல் காஸ்ரோவின் விதைப்பினால் ஏற்பட்டவை. இதுதான் ஒரு ஏற்புடைய தலமைத்துவத்தின் வெளிப்பாடு.

தோழர் சுபத்திரன் நாட்டின் தலைவராக முன்பே மறைந்து விட்டார். எனவே மக்களிடம் அதிகளவில் இந்தப் பண்புகளை பரந்து பட்ட அளவில் வளர்த்தெடுப்பதற்குரிய ஆட்சி அதிகார வாய்புகள் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் அவர் சார்ந்து அமைப்பினரிடையே இந்தப் பண்புகளை நாங்கள் நிறையவே காண முடியும்.

இதற்கு தோழர் நாபாவின் வழியில் தோழர் சுபத்திரன் தொடர்ந்த செய்பாடுகளே அதிகம் காரணமாகி இருக்கின்றன. ஈழவிடுதலைப போராட்ட அமைப்புகள் அதனைத் தொடர்ந்த கட்சி செயற்பாடுகளில் நிதி வளம் மிகக் குறைந்த அமைப்பொன்றின் பொது வாழ்விற்கான செயற்பாட்டில் இருக்கும் வளங்களை கொண்டு சிறப்பாக செயற்படுதல் என்பதை செய்து காட்டியவர்களில் தோழர் சுபத்திரனும் ஒருவர்.

வளம்… நிதி ஆதாரங்கள்… இல்லை என்பதை அவர் எப்போதும் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. மாறாக மக்களே எமது வளங்கள்… ஆதாரங்கள்… என்று பயணித்தவர்.

புலம் பெயர் தேசத்தில் வாழும் எனக்குக் கூட நிதி தாருங்கள் என்பதை விட தாயகத்தில் இருந்து இங்கு வந்த ஒருவரிடம் இரு சாரங்களை அனுப்பி வைத்த ஒரு நிகழ்வே எனக்கு அவர் மீதான பல செயற்பாட்டிற்கான ‘ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்’ என்ற செயற்பாடாக பார்க்கப்படுகின்றது.

அவரைப் போன்றவர்கள்தான் ஒரு விடுதலைப் போராட்ட காலத்திலும், இதனைத் தொடர்ந்த சமாதான கால கட்டத்திலும் பல தரபினரையும் இணைத்த ஒரு மக்களுக்கான ஐக்கிய முன்னணியை அமைத்து அர்த்த புஷ்ட்டியான செயற்பாடுகளுக்கான சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க முடிந்தது.

ஆனால் அது தொடர முடியாமல் ஏக தலமையிற்கு எதிரான நிலைப்பாட்டை உடையவர்களே தமது பிரதான எதிரி என்ற வகையில் கொன்று ஒழிகப்பட்டுவிட்டார்.

இந்த பரந்துபட்ட தலமை ஐக்கிய முன்னணி என்பனவற்றில் மிகத் தீவிரமான நம்பிக்கையுடயைவர்கள் எதிரிகளைப் பற்றிய ஆபத்தை முழுமையாக உணரப்படாமையினால் அல்லது குறைவாக மதிப்பிட்டமையினால் தமது உயிரை இழந்தவர் வரிசையில் தோழர் பத்மநாபாவுடன் இலவரும் இணைந்துள்ளதே எனக்கு அவர் மீதான விமர்சனமாக உள்ளது.

உயிர் வாழுதல் என்பது மக்களுக்கானது. இன்னும் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய சூழலில் இடையில் ஏற்பட்ட மரணம் முழு சமூகத்திற்குமான இழப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் உரிமைப் போராட்டத்தில் பல வேறு விடுதலை அமைப்புகள் செயற்பட்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களின் தளத்தில் இருந்து உருவான இந்த விடுதலை அமைப்புகள் தான் சார்ந்து சமூக அமைப்பின் தளத்தில் உள்ள சமூகக் குணாம்சங்ளின் பிரதிபலிப்பை தன்னகத்தே கொண்டிருப்பது இயல்பாணனதே.

அது எந்த சமூகங்களின் அடித்தளத்தில் இருந்து உருவான அமைப்புகளும் பொருந்தித்தான் இருக்கின்றது. இது உலக சமூக விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.

அந்த வகையில் ஈழவிடுதலை அமைப்புகள் பலவாக இருந்தாலும் இரு பெரும் கொள்ளை கோட்பாட்டின் அடிப்படையிலான ஓட்டத்தை விடுதலை அமைப்புகளிடையே நாம் அவதானிக்க முடியும். ஒன்று இடதுசாரிக் கருத்தியலின் அடிப்படையிலான மற்றது வலதுசாரி கருத்தியலின் அடிப்படையிலான.

சமூக நீதி, ஜனநாயகம், சமத்துமவம் என்ற அடித்தளங்களிலிருந்து தனது கட்டுமானத்தை கொண்டது. மற்றது இதற்கு எதிர்மறையான அமைப்பினைக் கொண்டதாக காணப்படும்.

அந்த கையில் 1980 களில் தோழர் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இந்த இடதுசாரி செயற்பாட்டை தனது அடிநாதமாக கொண்டு ஈழவிடுதலைப் போராட்டக்களத்தில் தனது செயற்பாட்டை கொண்டிருந்தது.

தோழர் நாபாவின் கொலைக்கு பின்னரான காலகட்டத்தில் அந்த கட்சியின் செயற்பாட்டை தாங்கிப் பிடிக்கும் தலமைத்துவத்தை கொடுத்தவர் என்றார் அது தோழர் சுபத்திரன்தான் இருக்க முடியும்.

எதிரிகள் மீதும் எதிர் கருத்துள்ளவர்கள் மீதும் வெறுப்பு அரசியலை நடாத்தாத பண்புகளை நான் கண்டு வியந்தது தோழர் நாபாவிடம் என்றால் அதனை தோழர் சுபத்திரனிடமும் கண்டேன் இவற்றை நான் எனது வாழ்கையில் பொதுவாழ்கையில் பாடங்களாக எடுத்து செயற்படுவதில் இவர்களின் பொதுவாழ்கை முறை எனக்கு பாடமாக அமைகின்றது.

ஈழவிடுதலைப் போராட்ட காலத்திலும், தேர்தல் அரசியல் என்ற ஜனநாயக வழிமுறை அரசியல் கால கட்டத்திலும் பன்முகப்படுத்தப்பட்ட தலமை, ஐக்கிய முன்னணியை அமைத்து முன்னேறுதல், மக்களுக்கான தலமைத்துவத்தை பன்முகப்;படுத்தப்பட்ட தலமையாக வழங்குதல் என்பதை நாம் தோழர் நாபாவிடம் கண்டேன் என்றால். இதனை 1990 இன் பின்னராக ஜனநாயக வழிமுறை அரசியல் செயற்பாட்டுக் காலத்தில் தோழர் சுபத்திரனிடம் கண்டேன். எனவே அவரின் இழப்பென்பது பேசப்படும் அளவிற்கு அளப்பரிய இழப்புதான்.