மதுரை விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாயகம் திரும்பினர்.

கப்பல் சேவையை எதிர்பார்த்து பலர் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.
தமிழக முகாம்களில் உள்ள அகதிகள் நாடு திரும்புதல் அதிகதித்துள்ள நிலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆண்கள்,15 பெண்கள் என 32 பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து 17.2.17 அன்று மாலை 4.30 இற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் உதவியுடன் தாயகம் திரும்பினர். 1990 மற்றும் 2009 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற இவர்கள் சிவங்கை மாவட்டம் மூங்கில்ஊரணி,மதுரை மாவட்டம் உச்சப்பட்டி, ஆனையூர், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம், விருதுநகர் மாவட்டம் தாப்பாத்தி முகாம்களைச் சேர்ந்தவர்களாகும்.


இவர்களில் ஆனையூர் முகாமில் இருந்து செல்லும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர் இந்தியப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணும் தனது கணவனுடன் செல்கிறார்.இந்தப் பெண் தனது சொந்த செலவில் இலங்கை செல்கிறார். தாயகம் திரும்பும் இவர்கள் திருகோணமலை கும்பபிறுபபிட்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்மன்னார் ஆகிய தங்களது சொந்த இடங்களுக்குச் செல்கிறார்களஅகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் இந்திய நபரை திருமணம் செய்தால் அந்த இந்திய நபருக்கு அகதிப்பதிவு கிடைப்பதில்லை. அவர்கள் தங்களது துணையுடன் இலங்கை செல்வதானால் அதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகம் எந்தவித உதவிகளும் செய்வதில்லை.அவர்கள் தங்களது சொந்த செலவிலேயேதான் தங்களது துணiயுடன் செல்லவேண்டும்.
தாயகம் திரும்பியவர்களை வழியனுப்புவதற்காக முகாமில் உள்ள அவர்களது உறவுகள்,அயவலர் என பெருந்தொகையானோர் வருகைதந்திருந்தனர்.இவர்களுடன் ஈழ ஏதிலியிர் மறுவாழ்வுக் கழகத்தின் தொண்டர்களும் வந்திருந்து அவர்களுக்கு இலங்கை உள்ள அவர்களது நிறுவன விலாசங்களை வழங்கியதுடன் தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் இலங்கைப் பிறப்புச்சான்று மற்றும் குடியுருமைச்சான்று பெற்றுள்ளார்களா? தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்விகற்றவர்கள் முறையான சான்றுகள் பெற்றுளார்களா? அதனை எடுத்துச் செல்கிறார்களா? எனவும் கேட்டறிந்தனர்.
விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தவர்கள் எப்போது கப்பல் போடுவார்கள் என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டது அவர்களுக்கு தாயகம் திரும்புவதில் உள்ள ஆர்வத்தை காட்டியது.கப்பல்சேவை என்பது தாயகம் திரும்பும் மக்களுக்கு பலவழிகளிலும் நன்மையைக் கொடுக்கும்.கப்பலில் அகதிகளை ஏற்றுவது என அரசாங்கம் முடிவு செய்து கப்பல் போட்டால் பெரும்பான்மையான அகதிகள் நாடு திரும்பும் வாய்ப்புகள் ஏற்படும்.

தாயகம் திரும்பும் அகதிகள் விடயத்தில் இந்திய-இலங்கை அரசுகள், அவர்கள் தாயகம் திரும்பி அவர்களது, வாழ்வாதாரத்தைத் தொடர திட்டங்களை அவர்களுக்காக ஒழுங்குபடுத்தியாக வேண்டும். ஏனென்றால் பலவருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் தங்களுக்ளுக்கான வாழ்வாதரத்திற்காக முதலில், இருந்து தொடங்கவேண்டிய நிலை உள்ளதால், தாகயம் திரும்பும் அகதிகளுக்கான விசேட திட்டங்களே அவர்களின் வலிகளுக்கு ஆறுதலைக் கொடுக்கும்.
இதில் வடக்கு.கிழக்கு மாகாண அரசுகளும் தங்களது மக்கள் தலைநிமிரச் செய்யும் செயற்பாட்டில் இறங்கவேண்டும். ஏனென்றால் தாயகம் திரும்புகிறவர்களில் அனேகமானோர்; வடக்கு-கிழக்கைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தாயகம் திரும்பும்போது இவர்களை வடக்கு,கிழக்கு மாகாணசபையைச் சேர்தவர்கள் சென்று சந்தித்து அவர்களை மறுகுடியமர்த்துவதற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வகுத்தால் தாயகம் திரும்புகிறவர்களுக்கு அது ஒரு ஆறுதலைக் கொடுப்பதுடன் அம் மக்களின் மனக்காயங்களுக்கு அது நல்லநிவாரணியாவும் அமைந்துவிடும்.
(அருளம்பலம்.விஜயன்)