பத்மநாபா தலைமறைவாக இருந்த காலம்.றஞ்சன் என்ற பெயரில் வாழ்ந்த காலம்.திருச்சியில் படித்த மாணவர்களை சந்தித்தார்.அதன் பின் அந்த மாணவர்கள் நாபாவுக்கு இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தனர்.அவர் தலைமறைவான தீவிரவாதி என்பதால் அவருக்கு விருந்து கொடுக்க நல்ல தரமான உணவுவிடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த விடுதியின் வெளியே ஒரு சாதாரண மனிதன் ஒரு மரத்தின் கீழே ஒரு தற்காலிக உணவகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார்.அதைக் கண்ட நாபா ஏன் நாங்கள் அங்கே சாப்பிடக்கூடாது.அங்கே சாப்பிடுவது எங்களுக்கு செலவு குறைவு.அந்த ஏழைக்கும் வருமானம்.எனவே அங்கே போய் சாப்பிடலாம் வாருங்கள் என சொல்லி அங்கே போய் உட்கார்ந்து விட்டார்.ஆனால் அவரை அழைத்த மாணவர்களோ அருவருப்பு உணர்வுடன் வேறு வழியின்றி உட்கார வேண்டியதாயிற்று.
இதைக் கவனித்த நாபா சொன்னாராம் விடுதலை என்பது எல்லோருக்கும் அவசியம்.சாப்பிடுங்கள் என்றாராம்.
( ஒரு படிக்கும் மாணவர் திருச்சியில் சொன்ன கதை.நாபா பிறந்த நாளில் பதிவிடுகிறேன்)
-விஜய பாஸ்கரன் (vijaya Baskaran)