தனது உணவுத் தேவையிற்கான உணவு உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கிய மனித குலம் அதனை உபரியாக உற்பத்தி செய்து வருமானம் ஈட்டும் நடைமுறைக்குள்ளும் புகுந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
இயற்கையை சார்ந்து வாழ்ந்த மனித குலம் தனது தேவைகள் அதிகரித்த போது இயற்கையை அழித்து ‘உற்பத்தி’ என்று வாழப் பழகிக் கொண்டது. இந்த அழிவுகள் இயற்கைச் சமநிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி போது அது வழமையிற்கு மாறான இயற்கை அழிவுகளை ஏற்படுத்தியும் வந்திருக்கின்றது. இந்த இயற்கை அழிவுகளுடன் இணைந்ததாக தொற்று நோய்களும் உருவாகி மனித குலத்தின் வாழ்விற்கு பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.
கூடவே அதிக விளைச்சல் என்ற இரசயானப் பயன்படுகளும்… இதனால் உருவாக்கப்பட்ட உணவுப்பண்டங்களும், மரபணு மாற்றத்தின் மூலம் அதிக மகசூலை பெறுதல் என்ற ‘நலமடிக்கப்பட்ட” விவசாயக் கட்டுபிடிப்புக்களையும் ஒரு சீரிய வளர்ச்சியினூடு(Evelution) தன்னை அழியாமல் பாதுகாத்து வந்த மனித உயிரினத்தின் மரபணுவிற்கு புரியாத தாக்கங்களை இவை உடலில் ஏற்படுத்திய போது அது புதுப் புது வகையான ‘வருத்தங்கள்’ உடலில் ஏற்பட காரணமும் ஆகிவிட்டன. இந்த நிகழ்வுகள் கடந்த 70 வருட கால வரலாற்றிற்குள் உட்பட்ட நிகழ்வுகள் ஆகும்.
இதற்கான சிகிச்கைளும் மாத்திரைகளும் கண்டு பிடிக்கப்பட்டும் வந்தன . இந்த மாத்திரைகளுடன் கூடவே பக்க விளைவுகளும் சேர்ந்தே இணைந்து கொண்டன. ஒன்றை நிறுத்த மற்றொன்று நோயாக உருவெடுக்க இவை காரணமும் ஆகின. இவற்றின் அடிப்படையில் தான் தற்போது மனித குலம் சந்தித்து வரும் நோய்களைப் பற்றி பார்த்தாக வேண்டும்.
1350 காலகட்டங்களில் ஏற்பட்ட பிளேக் தொற்று நோயினாலேயே மிக அதிகளவிலான 200 மில்லியன் மக்களைக் காவு கொண்ட அனர்த்தம் நடைபெற்றுள்ளது. அதற்கு அடுத்த அளவில் 1919ம் ஆண்டளவில் ஸ்பானிஸ் காய்சல் என்பதினால் 50 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவினர். பிளேக் 1, 2, 3 என்று வரிசையாக தொடர்ந்த தொற்று நோயே மனிதகுலத்தில் அதிக மரணத்தை மொத்தமாக ஏற்படுத்திய நோயாகும். இதற்கான தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது மிகபெரிய வெற்றியாக மனித குலத்திற்கு அமைந்ததையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சின்ன அம்மை, எயிட்ஸ் போன்ற நோய்களினால் இன்றுவரை 35 மில்லியன் மக்கள் மரணமடைந்ததுடன் அது இன்று வரை முழுமையான கட்டற்குள் வராமல் தொடர்ந்த வண்ணமும் உள்ளன.
தொற்று நொய்கள் உருவான போது எல்லாம் அதற்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்படாத சூழலில் அது விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்திலும், ஏன் விஞ்ஞான வளர்ச்சியடைந்த காலத்திலும் மில்லியன் கணக்கில் மனிதர்கள் மரணத்தை தழுவிக் கொண்டாலும் உயிர் தப்பியவர்கள் அல்லது காப்பாற்றபட்டவர்களே அதிகமாக இருந்திருக்கின்றனர்.
இதற்கு காரணம் உயிரினங்களில்(மனிதன்) இயற்கையாக காணப்படும் சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தியும், தன்னை தானே மீளுருவாக்கம் செய்தல் என்ற இயல்புகளை தன்னகத்தே கொண்டது ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு மனிதன் உட்கொள்ளும் உணவில் இருந்து அதிகம் உருவாவதாக விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. அது இயற்கையாக உண்ணும் உணவும் பொருட்கள் அதனை மனிதனுக்கு வழங்கி வந்திருக்கின்றது. அதுதான் ‘உணவே மருந்து’ என்று மூத்தோர் கூறி வந்தனர். நாமும் இதனை அனுபவத்தில் கண்டும் வருகின்றோம்.
இங்கு ஒருவகை சார்பு நிலை தியறி இயற்கையாக நடைபெற்று வருக்கின்றது. மனிதன் வாழ்வதற்கான பிராணவாயு. மரங்களுக்கு தேவையான பிராணவாயு இரண்டும் ஒன்றில் இருந்து மற்றயதற்கு பரிமாற்றம் அடையும் சமநிலையில் இருப்பதுவே அதுவாகும்.
இயற்கையை நாம் அதிகம் குழப்பிய போது இந்த சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களே மனித வாழ்விற்கான கேள்விக்குறிகளை அதிகம் ஏற்படுத்திருக்கின்றது. அதில் முதன்மையானது ‘புதுப் புது நோய்’ மற்றயது இயற்கைப் பேரிடர்.
என்னதான் அழிவுகள் இருவகையிலும் ஏற்பட்டாலும் மனிதன் இன்றும் அதனை வெற்றி கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்.
அப்படியென்றால் இந்த பேரிடரை வெற்றி கொண்டு தனது நகர்ச்சியை செய்தபடியால்தான் எமது மூதாதையர் உயிருடன் இருந்திருக்கினர். அவர்களால் உருவாக்கப்பட்டவர்களே எங்கள் சந்தததியினர். நாம் உயிருடன் வாழ்வதற்கான உறுதிப்பாடு எமது மூதாதையர் கண்ட பேரிடர் எதிர்ப்பு வெற்றியாகும். மாறாக நாம் டைனசோர் மாதிரி அழிந்து போய்விடவில்லை.
எனவேதான் கூறுகின்றேன். ‘மனித குலம் மீண்டு வரும் கொரனா வைரஸில் இருந்து’ என்று. கொரானவை எதிர் கொண்டு உயிர்வாழும் தலைமுறை வரலாற்றை நாம் கொண்டிருக்கின்றோம். மனித குலம் வரலாற்றில் கடந்து 2000 ஆண்டுகளில் உருவான இவ்வாறான 20 வரையிலான தொற்று நோய்களில் இருந்து போராடி வென்ற மரபணுக்களைக் கொண்ட சந்ததியினர் நாம். எனவே நாம் இந்த வைரஸ் இருந்து மீண்டு வருவோம். ஆனால்….. அமெரிக்காவில் அதிக இழப்புக்களை சந்தித்தே ஆகவேண்டும்.
ஆனாலும் கடந்த 100 வருடங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் தொற்று நோய்களில் அதற்கு முந்தய காலங்களில் ஏற்பட்ட மில்லியன் மக்கள் இழப்புக்களை விட ஆயிரம்(ஒரு மில்லியனை விடக்குறைவு) மக்கள் இழப்பு என்ற எண்ணிக்கை குறைந்த தொகையே ஏற்பட்டிருக்கின்றன என்ற மகிழ்வான விடயமும் புள்ளிவிபரங்கள மூலம் அறிய முடிகின்றது.
இந்தப் புள்ளி விபரத்தை நாம் கொரனா வைரஸ் இலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைகளுக்கு உரம் சேர்க்க பயன்படுத்த வேண்டும்.
இதற்கு மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் ஒருமுக்கிய காரணியாக இருப்பதையும் நாம் ஏற்கொண்டே ஆக வேண்டும்.