யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்மானிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களைத் தோண்டியெடுத்தே வன்னியில் பல வீதிகளைப் புனரமைத்தது இலங்கை அரசு என்பதனை பலர் அறிந்திருப்பீர்கள்.அப்படி புல்டோசர்களால் தோண்டியெடுத்துக் கொண்டு வந்து போடப்பட்ட வீதிகளில் சில இடங்களில் நமது பிள்ளைகளது தலைமயிர் கூட தாரோடு ஒட்டி வீதியில் இருந்ததைப் பார்த்ததாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். மிகவும் துயரமான விடையம் இது.
இந்த நேரம் இதனைத் திரும்பவும் எழுதுவதற்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. புலிகளது துணுக்காய் வதைமுகாமிலும் யாழ்/ கந்தன் கருணையிலும் அவர்களது மற்றய சிறைச்சாலைகளிலும் அடைத்து வைக்கப்பட்டு அடையாளமே தொியாமல் அழிக்கப்பட்டவர்களது நினைவை யார் ? எப்போது நினைவு கொள்வது? என்று யோசித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. கார்த்திகைப் பூவைக் கட்டிவிட்டு கடையைப் பூட்டிவிடுவதால் ஒன்றுமே மாறிவிடாது.
(Katsura Bourassa)