இன்று என் பின்னேரச் சாப்பாடு இங்கு சினெக் என்று அழைப்பர் ஆனால் ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாடாக மரவள்ளிக் கிழங்கு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.
வறுமை வாட்டிய நாட்கள் பல அப்போது செட்டியாவெளியில்தான் மரவள்ளிச் சேனைகள் இருந்தன .சாப்பாட்டுக்கு கஸ்ரமான பொழுதுகளில் இந்த மரவள்ளிச் சேனைகளுக்கு சென்றிருக்கிறேன் சில நாட்களில் கடனுக்கு தரமாட்டோம் என சில சேனைக்காரர் மறுத்த போது வெறும் கைகளுடன் வந்த நாட்களும் உண்டு அப்படி பல இரவுகள் பட்டினியாய் இருந்த நாட்களும் உண்டு.காலம் எவ்வளவு கொடியது வறுமையும் அதனுடன் இணைந்த பசியும் பல நாட்கள் ஒரு நேர சாப்பாடு கூட கிடைக்காமல் பட்டினியாய் பள்ளிக்கு போன நாட்களில் மரவள்ளிக் கிழங்கே துணை நிற்கும். அத்தோடு சோழன் கதிரும் ஏழைகளின் ஒரு நேர உணவு வசதியானவர்களுக்கு அது ஒரு இடை நேர சாப்பாடு.
கடந்து வந்த ஆண்டுகளில் நாங்கள் கற்சுனையடியில் ஒரு ஐந்தேக்கர் சேனை வெட்டி அப்புச்சி அதில் மரவள்ளியும் சோழனும் சேனைப் பயிர்களும் செய்தார் பஞ்சமில்லாமல் சாப்பாட்டுக்கு குறைவில்லை ஒன்றில்லாவிட்டால் ஒன்று.அந்த நாட்களில் ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு முப்பத்தைந்து சதம் இது 1975 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலம். அப்புச்சி திருகோணமலைக்கு லோஞ்சில் மூட்டை கணக்கில் கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் வாழ்க்கை ஓடும் .
சில வேளைகளில் மரவள்ளிக்கிழங்கு சேனகளில் கிழக்கு புடுங்கும் போது அவற்றை மரத்தில் இருந்து பிரித்து வெட்டிக் கொடுத்தால் மிஞ்சும் தூழ் கிழங்கை இலவசமாக தருவர் அது எங்கள் வயிற்றுக்கு ஒரு நேர உணவாக மாறிய கதைகளும் உண்டு.
எங்கள் சேனை எப்போதும் பலருக்கு இலவசமாக மரவள்ளிக் கிழங்கு கொடுக்கும் கொடை நிலமாக இருந்தது பலர் கடனுக்கு வந்து கேட்கும் போது அப்புச்சி மறுக்காமல் தாராளமாக கொடுப்பார் எத்தனையோ பேர் எங்கள் சேனையால் பசி ஆறினர்.மரவள்ளியும் சோழனும் வெண்டியும் பூசணியும் பயத்தையும் மற்றும் சிறு பயிர்களும் தாராளமாகவே விளைந்ததது.கற்சுனயடி பொற்சுனை போல வறுமை எட்டிப் பார்க்காத ஒரு வளமான சேனை இன வன் செயல் காரணமாக அதனை கைவிட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இன்று அந்த நிலம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமில்லாமல் போயிற்று சம்பூர் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கம் எங்கள் சம்மதம் இல்லாமல் சுவிகரித்துக் கொண்டது.
கற்சுனையடி எங்கள் சேனை என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் சுமந்த நிலம்.
அந்த நினைவுகளுடன் எனது இன்றைய மாலை நேர உணவு மரவள்ளிக் கிழங்கும் பச்ச கொச்சிக்காய் இலுமிச்சம் புளி போட்ட சம்பலும், அம்மா அப்புச்சி தம்பி தங்கச்சி அம்மம்மா என உறவுகள் நினைவுடன் நான் தயாரித்த எனக்குப் பிடித்த உணவு.
(Balasingam Sugumar)
இளைஞர்காலத்தில் ‘களவாகவும்’ ‘நேராகவும்’ தோட்டத்தில் ‘சுட்டு’ ச் சாப்பிட்ட கிழங்கு சீனிக் கிழங்காக வீட்டில் உண்டதும் பொரியலாக சோற்றுடன் சாப்பிட்டு உறைப:பச் சம்பலுடன் அவித்துச் சாப்பிட்டுத் என்று பல எனது அனுபவங்களை மீட்டிய பதிவு. மரவள்ளி மாவில் புட்டு அவித்து சாப்பிட்டால் சுவையோ சுவை. இதற்கும் ஒழிந்திருக்கும் அதிக மாச்சத்து கட்டுப்பாடாக சாப்படுவதன் மூலம் உடல் ஆரோகியத்திற்கு கேடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்குள் ஒரு வறுமை ஒழிப்பு கதையும் மெலிதாக ஓடியிருக்கும் வாழ்கை கதையும் சோகமும்… கொடையும்… இழந்த நிலங்களும்… என்னை கவர்ந்துவிட்டன.
கூடவே சிறீமா என்.எம். பெரரா காலத்து 1970களின் முற்கூற்றில் சுயபொருளாதாரத்தை கட்டியமைக்கும் இடதுசாரிப் பொருளாதார கொள்கையில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டிற்கு மாற்றீடாக பலரின் பசியைப் போக்கியது இதே மரவள்ளி கிழங்குதான் இந்த உணவுத் தட்டுப்பாடு இதன் இலையைக் கூட அவித்து சிலர் குடித்ததாக கதைகள் இருந்தாலும் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் இலங்கை தனது சுய உணவு உற்பத்தியில் தன்நிறவை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி இறுதியில் ஆட்சி மாற்றத்தினால் ஜேஆரினால் கபீளகரம் செய்யப்பட்டு மேற்குலக பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி ட்டுப்பாடற்ற கதாராள இறக்குமதிக் கொள்கையினால் இந்த உணவு உற்பத்தி விவசாயம் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டதும் வரலாறு
(Saakaran)