(சாகரன்)

நேரடியாகவோ மறைமுகமாகவோ 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். கலவரமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலை தொடர்ந்து வேகமெடுத்த ஆயுதப் போராட்டதிற்குள் நேரடியாக பங்காளிகளாகி பலர் இல்லாவிட்டாலும் இதன் உணர்வலைகளுக்குள் உள்ளாகாதவர்கள் என்று தமிழ் பேசும் இலங்கை மக்களை நாம் பிரித்துப் பார்க்க முடியாது.