மறுமலர்ச்சி யுகத்தில் உருவான புதிய அரசியல் கலாசாரம்

கடந்த ஜனாதிபதித் தேர்தல், அதற்கு பின்னரான பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பலரும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தனி ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாது என்பதே கடந்தகால வாதமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அந்த கூற்றை சுக்குநூறாக்கிவிட்டது.