மலையகத்தில் இராமையாவுடன் வரதராஜப்பெருமாள்

அன்று தோழர் வரதராஜ பெருமாள்வடகீழ் மாகாணமுதலமைச்சராக இருந்த சமயம். மலைநாட்டில் செங்கொடி சங்கம் அதன் பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா தலைமையில் அட்டனில் அவருக்கு பெரும் வரவேற்பளித்தது. அட்டன் டன்பார் கிரௌண்டில் ஹெலியில் வந்திறங்கிய அவர் வரவேற்பு இடம்பெற்ற அட்டன் நகரசபை மண்டபத்திற்கு வாகனத்தில் வந்தார. சுமார் ஒரு கி.மீட்டருக்கு அதிகமான தூரம். பாதுகாப்பிற்கு வழி நெடுக, அட்டன் நகரெங்கும் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இராணுவம் நிறுத்தப்பட்டிருந்து. வாழ்வில் முதன் முதலாக ஒரு தமிழ் இராணுவத்தைக் கண்ட மக்கள் உளம் பூரித்துப் போனார்கள். வரவேற்பில் இராமையாவுடன் நானும் முன்னின்றேன். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தயங்கமாட்டேன் என தோழர் வரதராஜ பெருமாள் மிகவும் ஆக்ரோசமாக முழங்கினார். தோழர். இராமையா இன்று இல்லை. என்றாலும், அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே……..

– (Muthulingam Vanni Kathan)

அன்று எமக்கு கிடைத்த வாய்பை ஏனையர்களும்வ (முக்கியமாக புலிகளும்) ஆதரித்து செயற்பட்டிருந்தால் இன்று அதிகாரம் பரவலாக்கப்பட்ட அர்தமுள்ள மகாணசபை முறமையை நாம் அடைந்திருக்க முடியும். இது தனியாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு என்பதற்கு அப்பால் இலங்கையில் உள்ள சகல மகாணங்களுக்கும் கிடைப்பதாகவே அமையும் இது எமது மலையக மக்களின் அதிகாரப் பெறுதலுக்கான நுழைவாயிலாகவும் இருந்திருக்கும் தோழரே! இந்த பழைய நினைவுகளின் பகிரல் இன்று இவ்விடத்தில் வரவேற்கப்படவேண்டியது.

-(Saakaran)