நாளொன்றுக்கு 24 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், வாரத்தில் நான்கு நாட்களுக்கு தினசரி ஊதியம் 620 ரூபாயில் இருந்து 730 வரை அதாவது 110 ரூபா அற்ப தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 16-18 கிலோ கொழுந்து பறிக்கப்படும் நிலைமையின் கீழ், இது நூற்றுக்கு 33 மற்றும் 50 சதவீதத்துக்கும் இடையில் வேலைச் சுமையை அதிகரிப்பதாகும். இந்த தொகையை கொடுக்காவிட்டால் நாள் சம்பளம் 632 ரூபாய் வரை குறைக்கப்படும்.
வாரத்தில் எஞ்சிய இரண்டு நாட்களில், தொழிலாளி தற்காலிக அடிப்படையில் ஒரு நாளுக்கு 500 ரூபாவுக்கு வேலை செய்து, நாளொன்றுக்கு 15 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். கொழுந்தின் அளவு அதை விட அதிகரித்தால், ஒரு கிலோவுக்கு 26 ரூபாபடி செலுத்தப்படும்.
அதாவது இது சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் அல்ல. நூற்றுக்கு 33 மற்றும் 50 சதவிகிதத்துக்கு இடையில் வேலைச் சுமையை அதிகரிப்பதோடு ஒப்பிடும்போது இது சம்பள வெட்டே ஆகும். உண்மையில் மக்கள் வீதிக்கு இறங்கியதால் பழிவாங்கும் முகமாகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தயவு செய்து ஒப்பந்தம் பற்றி விழித்துக்கொள்ளுங்கள்.
(Vinoth Balachandran)