மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
என்னைப் மிகவும் கவர்ந்த நிவாரணப் பணிகளில் முஸ்லீம் மக்கள் தம்மை மீண்டும் (இந்துவத்துவா) மக்களுடன் இணைந்துகொள்ள தமது சகோதரத்துவத்தை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டிய மனிதாபிமானச் செயற்பாடுகள். தமது எத்தனையோ செயற்பாடுகளினால் நாமும் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க முயன்ற முஸ்லீம்மக்களின் மன உணர்வுகளை மன உழைச்சல்களை என்னால் புரியக் கூடியதாக இருந்தது. 1980 களில் சென்னையின் திருவல்லிக்கேணிப் பகுதியில் தம்மை முஸலீம் என்று பிரகடனப்படுத்தாத வரைக்கும் தமிழர் – முஸ்லீம்கள் என்று பிரித்து அறிய முடியாக வெளிப்பாடுகள் முஸ்லீம் தமிழ் மக்களுக்கிடையே இருந்தது. இது அத்வானின் பாதயாத்திரையும் பாபர் மசூதி இடிப்புடனும் இந்தியாவில் இல்லாமல் செய்யப்பட்டது. இந்துவத்துவா வெறியர்கள் இதனை செவ்வனவே செய்தும் இன்றும் வருகின்றனர் விநாயகர் சதுர்ச்சி அன்று திட்மிட்ட கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் முஸ்லீம்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்திவருகின்றனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபினமான செயற்பாடடில் எனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் முஸ்லீம் சகோதரர்கள் வணங்கும் அல்லாவை நான் ஒவ்வொரு முஸ்லீமிடமும் கண்டேன்.

நிவாரணங்களில், மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தமது கட்சியின் கொடியைத் திணித்து கட்சி வளர்க்க முயன்ற தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளை நான் முன் எப்போதையும் விட வெறுக்கின்றேன். சென்னை மக்கள் எதிர்காலத்தில் இனாம்களைக் கண்டு இவர்களிடம் மயங்காமல் சரியானவரகளை தமது தலைவர்களாக தெரிந்து எடுக்கவேண்டியதை இச்சம்பவங்கள் எடுத்தியம்பி நிற்கின்றன. துன்னார் நிறுவனங்கள் மழை வெள்ள அனர்தங்களுடன் தமது செயற்பாடடை மட்டுப்படுத்தாமல் எதிர்காலத்தில் இது போன்ற அனர்த்தங்கள் ஏற்படாவண்ணம் மன் எச்சரிகை நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும்.

வழமைபோல் இந்த வருட எனது விடுமுறை பயணத்தில் ஒக்ரோபர் மாதம் முதல்வாரம் சென்னனையில் இருந்தேன் எனது நண்பர்கள் இடதுசாரித் தோழர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தேன் விடுமுறைக்கு புறப்பட முன்பு நண்பர்கள் பலரும் மழைக்காலத்தில் புறப்படுகின்றீர்கள் உங்கள் விடுமுறை குழம்பிவிடும் என்று எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் சென்னை புறப்பட்டுவிட்டேன். இந்திய நண்பர்களுடன் இம்முறை தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றிலேயே எனது விடுமுறையின் ஒருபகுதியை கழிக்க விரும்புவதாகவும் அறிவித்தேன். நண்பர்களும் இதற்கான ஒழங்குகளை செய்திருந்தனர் சென்னையிலிருந்து புறப்பட்ட நாம் சென்னையிலிருந்து கடற்கரை வீதியால் பாண்டிச்சேரி போகும் நெடும்சாலையில் பயணித்தோம் நெடுஞ்சாலை முழுவதும் அடை மழை. பலரும் தமது வாகனத்தை செலுத்த முடியாமல் சாலையோரத்தில் நிறுத்திவிட்டனர் இரு சக்கர வண்டிக்காரர்கள் மழையில் நனையாமல் ஒதுங்கிவிட்டனர்.

எனது வாகனமும் இன்னும் சிலவாகனமும் தட்டுத்தடுமாறி பாதுகாப்பாக தமது ஓட்டததை நிறுத்தாமல் மெதுவாக ஊர்ந்து சென்று வந்தவாசி என் கிராமததை நோக்கி நெடும்சாலையில் இருந்து திரும்பியது. 400 மீற்றர் கிராமததை நோக்கிய பயணத்தில் நாம் புழுதி பறக்கு மழையற்ற பிரதேசத்தை அடைந்தது எனக்கு வியப்பாக இருந்தது. காலநிலை மாற்றம் புவி வெப்பமாதல் மரங்களை இல்லாது ஒழித்தல் வாகனங்களினால் ஏற்படும் கருஅமிலவாயு என்பனவற்றின் விளைவால் வெறும் அரைக் கிலோ மீற்றரில் ஏற்பட்ட கால நிலை மாற்றம் என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தது. கிட்டத்தட்ட 10 கிலோ மீற்றர் பயணம் செய்து தமிழ்நாட்டின் ஒரு அசல் கிராமத்தை அடைந்தோம். அன்று இரவு…
(இன்னும் வரும்…….மழை வெள்ளம்……..?)