அரசாங்கத்தினால் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானங்களும் “மரமேறி விழுந்தவனை மாடேறி மித்த” கதையாகத்தான் இருக்கிறது. இறுதியில் எங்கே போய் நிற்கப்போகிறது என்பது தெரியாமலே இருக்கிறது. அடுத்த வேளைக்கு என்ன செய்வோமென நினைப்போரின் மனங்களில் கொதித்த எண்ணெயை வார்த்தால் போல விலைவாசி அதிகரிப்புகள் ஒவ்வொரு நாளும் எகிறிக் கொண்டே போகின்றன.