மான்டஸ் புயலை வென்ற பூங்குழலி

இந்த வெப்பநிலை மாற்றம் அல்லது பூமி வெப்பமடைதல் என்பது பூமியில் ஏற்படும் கரியமில வாயுவின் சமநிலை இயற்கையான நிலையில் இருந்து அதிக மா(ஏ)ற்றம் நடைபெறும் போது ஏற்படுகின்றது.

அதீத தொழிற்சலைகளின் செயற்பாடு பெற்றோலிய வகைகளின் எரிதலால் ஏற்படும் புகை, ஏனைய இரசயானக் கழிவுகளை மறு சுழற்சியிற்காக அல்லது இல்லாது ஒழிப்பதற்காக செய்யும் எரிதலால் கரியமில வாயு அதிகம் உருவாகின்றது.

இந்த கரியமில் வாயுவை தான் உட்கொண்டு நஞ்சுண்ட ‘சிவபெருமான்’ ஆக மனித குலத்திற்கு உயிரினங்களுக்கு வாழ்வைக் கொடுப்பதை மரங்கள் செடிகள் செய்கின்றன.

இந்த மரங்களை செடிகளை நாம் எந்த விவஸ்தையும் இல்லாமல் தறித்தலும் அழித்தலுமாக மனித குலம் செய்து கொண்டிருக்கின்றது.
அது வேலியை அடைத்து அடைத்து களைத்துப் போய்விட்டோம் மதிலைக் கட்டினால் பரவாய் இல்லை என்ற இலங்கை போன்ற நாடுகளின் பொது புதியினாலும்.. பாதையை அமைக்க அதற்கு குறுக்கே நிற்கும் மரங்களைத் தறிததல் அதற்கு மாற்றீடாக மரங்களை நடாத தன்மை அளவிற்கு மீறிய பயிர் செய்கை என்பதற்காக இந்த மரங்களைத் தறித்து அவற்றிற்கு மாற்றீடாக மரங்களை ஒன்றை நடாமல் அழித்தல் என்பதிலும் நாமும் ஈடுபடுகின்றோம்.

அதனால் இந்த நஞ்சுண்ட கண்டனின் செற்பாட்டின் அளவு குறைந்து வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் உயர்ச்சியும் அதனைத் தொடர்ந்து பூமியின் வெப்பநிலையில் ஏற்படுத் குழப்பங்கள் அது தாழ் உயர் அமுக்கங்கள் என்று அசாதாரண நிலை என்று அது புயலாகி பூக்களையும் சாய்த்து தப்பிய மரங்களையும் சாய்த்;து மனிதர்களையும் வாகடித்து நிற்கின்றது.

தரையில் ஏற்படும் அதேயளவு தாக்கம் சமுத்திரங்களிலும் அவை மாசுபடுத்தப்படுவதினால் ஏற்படுகின்றன.

கூடவே வெறும் உடம்புடன் காடு மேடு என்று திரிந்த சிவலைக் காளையையும் கறுப்பி பசுவையும் தாங்கும் குளிரால் கொன்றுவிட்டுச் சென்றதாக மான்டஸ் புயல் நகர்ந்து கொணடிருக்கின்றது
போர்பதற்கு துணிவாங்க முடியாத ஏழை மக்களையும் கொன்று குவிக்க தயார் ஆகின்றது பூமியின் வெப்ப நிலை.

இந்த புயல்காற்று தாழ் வெப்பநிலை என்று மக்கள் அல்லோகல்லல் படும்போது மட்டக்களப்பு, திருகோணமலையில் பனிப் பொழிவு என்று பட இணைப்புகளை செய்து மக்களை கிலேசத்திற்குள் உள்ளாக்குவதும்…. இனிப் புலம் பெயர் தேசங்களில் மட்டும் அல்ல நம்ம ஊரிலும் வெண்பனி அழகு காட்டும் என்ற வன்மங்களையும் சமூக வலைத்தளங்களில் அதிக பார்வையாளர்களை திசைதிருப்பும் பொறுப்பற்ற தனங்களும் நடைபெறுகின்றன. இவை கண்டனத்திற்குரியது.

புயல் வரும் என்ற எச்சரிகை அது வருமுன்பே அறிவிக்கக் கூடிய தொழில் நுட்பம் விஞ்ஞான முற்னேற்றத்தினால் ஏற்பட்டிருப்பதினால் அதற்கான எச்சரிக்கைளை அரசுகள் வழங்கியிருகின்றன.

தற்காலிகமாக காற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் என்ற இடங்களில் உள்ள வாழை போன்ற இலகுவில் முறிந்து விழக்கூடிய பயிர்களை மொட்டை அடிப்பதன் மூலம் காற்றின் பாதிப்புகளை குறைக்கலாம்….

கூடவே காற்று இயல்பாக தாண்டி பொட்டு இடைவெளிகளால் பாய்ந்து கோகும் வேலி இடைவெளிகள் சீனப் பெரும் சுவராக எழுப்பிய மதில்களால் மறைக்கப்பட்டிருப்பதால் காற்று இந்த மதில்களுக்கு இடையாக மட்டும் ஒடுங்கி கூவியபடி செல்வதினால் வேகமான காற்று இன்னும் வேகம் பெற்று அழிவுகளை அதிகம் ஏற்படுத்துகின்றது.

மதில் தடுக்கும் என்பதை விட அது காற்றைத் திரட்டி ஒரு ஓடையினூடு இன்னும் அதிகமாக ஊதி அடிக்கவே அதிகம் உதவும்
முன்பு ஒருகாலத்தில் சோழகக் காற்று, வாடைக் காற்றினால் பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க காற்றின் போக்கை திசை மாற்ற அதன் தாக்கதை குறைக்கும் மறைப்புகளை குறிப்பிட்ட திசைகளில் எம்மவர்கள் கால காலத்திற்கு செய்து வந்ததை நாம் அறிவோம்.

இவை அனேகம் பட்டறிவினால் செய்யப்பட்டிருந்தாலும் அவை அதிக பலன்களை அன்று கொடுத்திருக்கின்றன.

பொன்னியின் செல்வன் பூங்குழலி இயந்திரம் அற்ற படகுகள் மூலமே அன்றைய இராஜ வம்சத்தினரை கடல் கடக்க உதவினாள் என்றால் அதில் காற்றின் திசையை வேகத்தை அறிந்து அந்த காற்றை உரிய வகையில் பாய்மரப் படகுகளின் பாய்களில் படவைத்து படகுகளை ஓட்டி கரை சேர்த்தாள்.

அண்மையில் நானும் அந்த அழகிய பூங்குழலியை போத்துக்கல் தேசத்தில் நேரில் சந்தித்தேன். நாற்பத்தைந்து வயதளவில் இருக்கும் இளம் பெண் ஒருதிதான் இந்த பாய்மரப் படகில் எம்மை சமுத்திரத்திற்கு இயந்திரம் அற்ற பயணமாக அழைத்துச் சென்றாள்.

அவளிடம் இந்த படகின் பாய்மரத்தை திசையை மாற்றிய இலாவம் தொழில் நுட்பம், தைரியம், அறிவாற்றல் எனக்குள் அவள்தான் உண்மையான பூங்ககுழலியாக அன்று தெரிந்தாள்.

நான் சிறுவனாக இருக்கும் காலத்தில் என் தந்தையருடன் சேர்ந்து என் அம்மா இந்த காற்றுடன் கூடிய மழை காலத்தில் மழை நீரை இலாவமாக பாய்வதற்கும் சுழற்றி அடிக்கும் காற்றுகளில் இருந்து மரங்களையும் மாடுகளை அதற்குரிய கூடாரங்களில் அடைத்தும் மரம் மாடுகளின் மரணதை தான் மழையிற்குள் தெப்பமாக நனைந்து வருடாவரும் காப்பாற்றி நினைவுகள் எனக்குள் வந்து போகின்றன.

என் சிறுவயதில் என் தாய்தான் அந்த பூங்குழலி

மனிதன் செய்த இயற்கையிற்கு எதிரான செயற்பாடுகளினால் ஏற்படும் புயல், குறைந்த நேரத்தில் அதீத மழை, வெயில் போன்ற அனர்த்தங்களில் இருந்து நாம் எம்மையும் எமது கால் நடைகளையும் காப்பாற்ற அவர்களுக்கும் வீடு அமைத்து பாதுகாத்து முன்னெச்சரிக்கையாக மரங்களை ‘கொய்தும்’ பாதுகாப்போம்.

மரங்களை தறித்து வேரோடு சாய்ப்பதுதான் தவறு மாறாக அதனை கொய்து அவை வேரோடு புயல் போன்ற அனர்தங்களில் சாய்வதைத் தடுப்பது சரியானதே. ஏன் எனில் வெட்ட வெட்ட தளைப்பது மரங்களே மனிதர்களோ மிருங்கள் அல்ல.

யதார்த்த நிலமையை நாம் புரிந்து கொண்டு செயற்படுவோம்