லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர்.தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.
பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்
போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.
மக்களின் மகத்தான தலைவர் லெனின்
லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்க தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர். ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தது. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைக்களுக்கு அவற்றை விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புசப்பற்ற கஞ்சி குடித்தார்.லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தது. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதை பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார்.கடும் பஞ்சத்திலும், போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கின.ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை
போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய வசயங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத்தொடங்கினார்.ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சமீபத்தில் தான் அகற்றப்பட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
அறிவியல், கல்வி ஆகியதுறைகளுக்கு மிகுந்த பங்களிப்பு செய்தவர் இவர்