(கே. சஞ்சயன்)
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.