(அக்கினி ஞானாஸ்ஞானம்)
எமதுவாகனதொடரணிபுலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து சேர நன்றாக இருண்டுவிட்டது. வழமைபோல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்காகநானும் காத்துநின்றேன். எனக்குமுன்னால் நின்றகிறிஸ்தவபாதிரியார் தனதுமுறைவரபதிவுசெய்பவரிடம் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு அவனின் கேள்விகட்குபதிலளிக்க ஆரம்பித்தார். ‘உங்கள் பிரயாணத்தின் நோக்கம்”“தேவபணி” என்றார் அந்தப்பாதிரியார்.
கஸ்டப்பட்டுஎனக்குவந்தசிரிப்பைஅடக்கிக்கொண்டேன். அதற்கிடையில் அந்தபாதிரியார் மறைந்துவிட்டார். என்னையும் வழமையானகேள்விகளைகேட்டுவிட்டுஒருபேப்பர்த் துண்டைதந்து“அந்தஅறையிலுள்ளபொறுப்பாளரைசந்தித்துவிட்டுபோங்கோ”என்றான் எதுவிதசலனமுமின்றி;;;;.
அவன் தந்ததுண்டைப்பெற்றுக்கொண்டு இறைச்சிக்குநேர்ந்துவிட்டபலிக்கடாபோல் பொறுப்பாளரின் அறைக்குள் எவ்விதஉணர்ச்சியும் இன்றிநுளைந்தேன். எவ்விதசீருடையுமின்றிசாரத்துடனும் ரீசேட்டுடனும் ஏதோகடும் யோசனையிலிருப்பவர் போல் பொறுப்பாளர் காணப்பட்டார். என்னைக்கண்டதும் புன்முறுவலுடன் “வாங்கோ ஜயா இருங்கோ”என்றுதன் முன்னாலிருந்தகதிரையைக்காட்டினார். மரக்கட்டைபோல் அமர்தேன். நான் கொடுத்ததுண்டைவாசித்துவிட்டுகசக்கிதனக்குஅருகாமையிலிருந்தகுப்பைக்கடகத்துள் குறிபார்த்துபோளைஅடிப்பதுபோல் ஸ்டைலாகஎறிந்தார். குறிதவறிவிட்டது. அதைகாணதவர் போல் என்னைப்பார்த்தார். இவரால் சரியாகசுடத்தெரியாதபடியால்தான் இந்தவேலைக்குவிட்டார்களாக்குமெனநான் நினைத்துக் கொண்டேன். அதைவெளிக்காட்டாதவாறுஅப்பாவிசிரிப்பொன்றைஉதிர்த்தேன்.
எமதுநிறுவனம் எவ்வாறனவேலைத்திட்டங்களைநடைமுறைப்படுத்துகின்றுது,எதிர்காலத்திட்டங்கள் என்னபோன்றசிலகேள்விகளைக் கேட்டார். நானும் அசட்டுத்தனமாக இளித்தபடிசுருக்கமாகபதிலளித்தேன். இந்த இக்கட்டானகாலகட்டத்தில் எமதுநிறுவனம் செய்யும் சேவைகளைபாரட்டினார். எங்கேயோஉதைத்தது. ஏன் என்னைபப்பாவில் ஏத்துகிறார் என்றுவிளங்கவில்லை இருந்தாலும் அவரதுபாராட்டைசெயற்கைபுன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டேன்.
வேறுஎன்னதான் செய்யமுடியும்.
“அப்பஅந்தஆமிக்காரன் என்னவாம்”என்று இயல்பாகவேகேட்டார் அந்தப்பொறுப்பாளர். “நீங்கள் கேட்ட இதேகேள்விகளைத்தான் அவனும் கேட்டான்”பொறுப்பாளர் பெரிதாகச்சிரித்தார். “அத்துடன் என்னிடமிருந்தளிழசவளவயச ஜப்பார்த்துவிட்டுகிரிக்கட் கால்பந்துபோன்றவற்றைபற்றியும் கதைத்தோம் அதைப்பற்றித்தான் கனநேரம் கதைத்தோம்”என்றேன் நானும் இயல்பாகவே. நாக்குசற்றுவரளத் தொடங்கியது. இப்போதண்ணீர் கேட்டால் அவருக்குசந்தேகம் ஏற்பட்டுவிடுமோஎன்றபயத்தால் வெளிக்காட்டாமல் எச்சிலைமாத்திரம் மெதுவாகவிழுங்கினேன். என்னைஆமிக்காரன் அச்சுறித்தினானாஎச்சரித்தானாஎனகேள்விமேல் கேள்வியால் என்னைத்துளைத்தெடுத்தார் அந்தப்பொறுப்பாளர். ஆனால் நானோஅரிச்சந்திரன்போல்உண்மையைத்தான் கூறினேன்.
ஆமிக்காறன் என்னைமரியாதையாகவேநடத்தினான் என்றேன். “அதுதான் எங்களுக்குவேணும் ஜயா”என்றார்; இறுதியாக. என்னையறியாமலேயேநுனிக்கதிரைக்குவந்துநிமிர்ந்து இருந்தேன். பொறுப்பாளருக்குமுன்னாலிருந்ததண்ணிப்போத்தலைகேட்டுக்கேள்வியின்றிமடக்மடக்கென்றுகுடித்தேன். இந்தமுறைஅவர் மெதுவாகஒருசிரிப்புச் சிரித்தார். சிரிப்புபோலியானதுபோல் படவில்லை. எனதுமனநிலையைமட்டுமல்லஒவ்வொருசிறுஅசைவையும் நன்குஅறிந்தவர் போல் “ ஜயா நீங்கள் ஒண்டுக்கும் பயப்பாடாதையுங்கோ….அவனுடன் நீங்கள் தொடர்பைபேணவேண்டும்.அவனதுநம்பிக்கையைபெறவேண்டும் அதுஎங்களுக்குபிற்காலத்திலஉதவும். உவன்தான் மணலாத்திலஎங்கடபலபோராளிகளின் வீரமரணத்திற்குகாரணம். உவனைவிடக்கூடாது”என்றார் சற்றேஉணர்ச்சிவசப்பட்டவராக. ‘கிழிஞ்சுதுபோ… இனிஉன்டபாடுஅவ்வளவுதான்’என்றதுபாளாய்போனஎன் மனது.
“சரி ஜயா போட்டுவாங்கோபிறகுசந்திப்பம்”என்றுஅவன் கூறிமுடிக்குமுன்னறேஆளைவிட்டால் போதும் என்றுஎண்ணியபடியேவாகனத்தைநோக்கிநடக்கத் தொடங்கினேன்.
“எதிரிகளின் பாசறையைதேடிப்போகிறோம்”என்றபாடல் இடம் பொருள் ஏவல் தெரியாமல் என்னைவரவேற்றுக்கொண்டிருந்தது.
(முள்ளுள்ளபுதர்கள் வளரும்…..)