(Saakaran)
அறிவியல் வளர்சியை பொதுவுடமையாக்கி எல்லோருக்கும் இலகுவில் கிடைக்கக் கூடிய மாதிரியாக செய்திருந்தால் இன்று உலகம் இன்னும் முன்னேற்றகரமான பாதையை நோக்கி சென்றிருக்கும். சிறப்பாக மருத்துவத்துறை இன்னும் சதாரண அடிமட்ட மக்களை சென்றடைந்து ஒரு பலமான ஆரோக்கியமான நிறைவான சமூக அமைப்பை நாம் உருவாக்கியிருக்க முடியும். மாறாக இவ் அறிவியல் தற்போது மேலும் மேலும் தனி உடமையாக்கப்பட்டு ஒரு மிகக் குறுகிய மக்களுக்கு மட்டும் முழுமையாக கிடைக்கும் வகையில் சந்தைப் பொருளாகி லாபம் ஒன்றே நோக்கான பண்டமாக மாறி இருக்கின்றது.
இதன் விளைவு மருந்துகளை தயாரிக்கும் கம்பனிகள் கோடி கோடியாக சம்பாதிக்க உடல் நலத்திற்கு தேவையான மருந்துகள் சாதாரண மக்களுக்கு அவர்களினால் வாங்கமுடியாத அளவிற்கு உயர்ந்து சென்றுள்ளது. இதே நிலமை உணவுப் பண்டங்களுக்கும் ஏற்பட்டு இருக்கின்றது. பலராலும் விரும்பப்படும் இயற்கை விவசாயத்தால் உருவான உணவுப் பொருட்களை மேல்தட்டு மக்களால் மட்டும் வாங்கி உண்ணும் நிலமையில் மட்டும் உள்ளது.
இனி கம்பியூட்டர் தொழில் நுட்பமும் இதனைச் சார்ந்த உபகரணங்களும் சிறப்பாக கைத் தொலைபேசி போன்றவை தனி உடமை அறிவிற்குள் சிக்கி அதி உயர் விலைப் பண்டங்களாக மாறி இருக்கின்றன. இந்த கம்பியூட்டர் உபகரணங்கள் இரு பெரும் பகுதிகளின் இணைப்பால் ஆனவை. ஓன்று வன்பொருள் மற்றது மென்பொருள். வன்பொருளில் தனி உடமை அதிக ஆதிகம் செலுத்த மென்பொருள் ஒருவகையான பொதுவுடமை என்ற ஓட்டத்திற்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. அதாவது ஒரு மட்டம் வரை இலவச மென்பொருளாக கிடைக்கும் வகையில் கருவிகளின் அடிப்படை இயங்கு மென்பொருள்கள் உலகில் இன்று அறிமுகப்படுதப்பட்டுள்ளன. இதன் ஆரம்பம் 1994 மார்ச் 14 திகதியில் ஆரம்பமானது.
கற்பித்தல் முறமையில் உலகின் முதற்தர நாடு பின்லாந்தில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் மென்பொருள் வல்லுனர் (Linus Torvalds) லைனஸ் றொவால்ட் ஸ் என்பவரே இதனை முதலில் ஆரம்பித்து வைத்தார். இவரால் இலவசமாக வெளியிடப்பட்ட ‘Linux’ iynd]; என்ற திறந்த மூலம் (open Source) என்ற மிகச்சிறந்த கம்பியூட்டர் அடிப்படை இயங்கு நிலலை மென்பொருள் இந்த ‘பொதுவுடமை’ அறிவியல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது. இது ஒரு வகையில் ‘Unix’ யூனிஸ் என்ற அடிப்படை இயங்கு நிலை மென்பொருளுடன் சமாந்திரமாக பயணிக்கின்றது. இவற்றின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த ‘C’ சி என்ற கணணி மொழியினை உருவாக்கியவர் டெனிஸ் ரிச்சி ( Dennis Ritchie) ஆவார்.
இன்று கைதொலை பேசி போன்ற கையடக்க தொடர்பு சாதனங்களில் பாவிக்கப்படும் அன்றோயிட்டு மென்பொருள் போன்றவற்றிற்கு மேற் கூறிய அடிப்படை இயங்கு மென்பொருட்கள் காரணமாக இருக்கின்றன. இதில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பது உங்களின் கேள்வியாக இருக்கின்றது இது ஒரு திறந்த மூலம் (open Source) அடிப்படையில் உருவானதாகும். உலகின் மூலை முடுக்கில் உள்ள அறிவியல்களை உள்வாங்குவற்குரிய திறந்த மூலம் (open Source) வகையில் அமையப்பட்ட இந்த மென்பொருட்கள் மேலும் மேலும் பலவேறு அறிவியல் நபர்கள் மூலம் செழுமைபடுதப்படக் கூடிய வகையில் இவை ஒரு வகை திறந்த வெளிப்படைத்தன்மையுடைய ‘ஜனநாயகத்தை’ இதன் உள்ளடக்கம் அமைகப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருள் ‘பொதுவுடமை’யாக்கப்பட்டு இலவசமாக கிடைக்கும் வண்ணம் வகை செய்யப்பட்டிகின்றது. இதுதான் இதன் வளர்ச்சிக்கும் பன்முகப்படுதப்பட்ட அதிக பாவனைக்கும் காரணமாக இருக்கின்றது.
இது போன்று அறிவியலை சகலருக்கும் கிடைக்கும் வண்ணம் பொதுவுடமையாக்குவோம். இதற்கான அத்திவாரத்தை இட்ட டெனிஸ் ரிச்சி (Linus Torvalds) லைனஸ் றொவால்ட் ஸ் போன்றவர்களை பாராட்டி நிற்போம். மாறாக (Bill Gates)பில் கேற், (Steave Jobs)ஸ்டீவ் ஜொப்ஸ் போன்ற தனி உடமைவாதிகளை கொண்டாடும் மனநிலையில் இருந்து விடுபடுவோம்.