தமிழர்களின் மனதில் சமஷ்ரியை உருவாக்கியவர் யார்? இன்று ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் யார்? எமக்கு வேண்டியது எது சமஷ்ரியா? ஒற்றையாட்சியா? அல்லது சிங்கள பெரும்பாண்மை கிள்ளித்தெளிப்பதை பெறுவதா?
கூட்டமைப்பை உருவாக்கி நாம் எதை சாதித்தோம்? நல்லாட்சியை நிபந்தனையின்றி பங்காளிக்கட்சிகள் ஆலோசனையும் பெறாது தன்னிச்சையாக ஆதரித்து தமிழரசுக்கட்சி தமிழருக்கு பெற்று கொடுத்தது என்ன?
உரிமையை விடுங்கள். சிறைக்கைதிகளை விடுவித்திருக்கலாம். காணிகளை விடுவித்திருக்கலாம். வாழ்வாதாரங்களை பெற்று கொடுத்திருக்கலாம். முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்புகளை உருவாக்கியிருக்கலாம் எதை செய்தீர்கள்?
ஐ நா வின் அழுத்தங்கள் ஒரளவு இருப்பதால் தான் மக்களின் தன்னிச்சையான போராட்டங்களால் சில விடயங்களை மக்களால் நிறைவேற்றி கொள்ளமுடிகிறது.
இன்றும் கோப்பாபிலவு மக்களின் தொடர் போராட்டங்களால் அவர்களால் தமக்குரிய காணியை அடைய காலம் கனிகிறது.
இங்கு தான் நாம் சிந்திக்கும் தருணம் அமைகிறது. அரசானது எதையும் மனமுவர்ந்து தருவதில்லை நிர்பந்தமே அதை தருவதற்கு தூண்டுகிறது. அந்த நிர்பந்தம் உள்ளூர் வெளியூர் மக்களின் இடை விடாத போராட்டமும் ஐ நா சபையில் நேர்மையான அரசியல்வாதிகளின் உத்தியோகப்பற்று அற்ர சந்திப்புகளும் குழு நிலை விவாதமும் தரும் நெருக்கடியே அரசை தீர்வை நோக்கி தள்ளுகிறது.
இவ்வாறான நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாக்க அரசுக்கு கிடைத்த சிறப்பான இரு தலைவர்களே சம்பந்தனும் சுமந்திரனும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு சரிங்க ஐயா பௌத்தத்துக்கு முதலிடம் சரிங்க சாமி
வடகிழக்கு இனைப்பு இல்லை நல்லது சாமி
நீங்கள் விரும்பி தருகிறதை நாம் தலை குனிந்து பெற்று தமிழருக்கு விற்றுவிடுவோம் என கங்கணம் கட்டி செயல் படும் தமிழரசுக்கட்சியுடன் தன்மானமுள்ள எந்த அரசியல்வாதியும் இணங்கி போகமாட்டன்.
ஒற்றுமையை குலைகாதீர்கள் என்று கூக்குரல் இடும் ஈனப்பிறவிகள் தமிழரசுக்கட்சியின் தன்னிச்சையான தான்தோண்றித்தனமான முடிவுகளை வாய் பொத்தி ஐந்துவாரங்களையும் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்?
முள்ளிவாய்காலில் முடிவுற்ற விடுதலை தீ வேறு வடிவத்தில் ஒப்பேற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை நீந்து போக செய்யும் நிகழ்சி நிரலுக்கு இணங்கி போகும் தமிழ் தலைமைகள் யாரு?
சர்வதேசம் நமக்கு ஏதாவது பெற்றுதர முயலுகிறது அதை தடுக்க எங்களை வைத்தே அரசு வெற்றிகொள்ள முனைகிறது. அதை உள்ளிருந்து எதிர்பவன் துரோகி வெளியில் இருந்து எதிர்பவன் கடும்போக்காளன் சுரேஸ் பிறேமச்சந்திரனோ கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ இளைஞர்களை ஆயுத போருக்கு உசுப்பேத்தவில்லை எமக்கான சந்தர்ப்பத்தை சரியாக கையாண்டால் சிறப்பான தீர்வை பெறமுடியும் என தர்க்கரீதியாக பதில் பகருகிறார்கள் எனவே சிந்திக்க தெரிந்த வடகிழக்கு தமிழன் மாற்றுத்தலைமையை மனமுவர்ந்து ஏற்பான்.
தமிழர் தாயகத்தில் இணக்க அரசியலுக்கு இடமில்லை. நம்ப நடப்போம் நம்பி நடவோம்.
எமக்கான இறுதி தீர்வானது தமிழ்மக்களின் விரும்பத்துக்கு ஈடாகவே அமைய வேண்டுமே தவிர திணிக்கும் தீர்வை ஏற்க எங்கும் தமிழ் மக்கள் ஆனையிடவில்லை.
வெல்லட்டும் தமிழர் தேசியம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.
(இப்படியும் புதிய ‘கட்சி; ஐ நம்புகின்றார்கள் பார்ப்போம்)