முக்கியமான விசேஷங்கள் மற்றும் பிக்னிக் போன்றவற்றில் பனை ஓலையை மடித்து அதில் உணவை இட்டு உண்பார்கள், நிஜமாலுமே (பனை) பிழாவில் உண்ணும் போது அதன் சுவையே தனி தான். அந்த சுவையை ருசித்தவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்…!.ஒருகாலத்தில் ஆதிக்கசாதியினர் இவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறப்படவர்களுக்கு தமது வீட்டுப்பாத்திரத்தில் உணவு வழங்கினால் ‘தீட்டு’ என்று கருதி அவர்களுக்கு இந்த ‘அட்சய’ பாத்திரத்தில்தான் சோறு கொடுத்தனர் என்ற வடுகள் நிறைந்த வரலாற்றையும் இந்த ‘பிழா’ அல்லது ‘தட்டுவம்’ கொண்டிருந்தது. தட்டுவதில் நீர் ஒழுகும் ஆனால் பிழாவில் நீர் ஒழுகாது. பிழாவில் அனேகமாக கள்ளு பரிமாறுவர். தண்ணீரைக் கிணற்றில் இருந்து அள்ளுவதற்கு வாளியிற்கு பதிலாக பனை ஓலையில் இழைத்துச் செய்யப்படுவது பட்டை இந்தப் பட்டையும், பிழாவும் எமது வாழ்வில் பின்னிப் பிணைந்த இனி பாத்திரங்கள்
(குடாநாட்டான்)