கார்த்திகேசு ஆசிரியர் துரையப்பா போன்றோர் முஸ்லிம்களிடையே செல்வாக்கு மிகுந்தவர்களாக திகழ்ந்தார்கள். ஜி ஜி பொன்னம்பலம் கூட தமிழ் தேசியத்துக்கெதிராக தமிழரசுக்கட்சிக் கெதிராக தேர்தல்களை சந்தித்தபோதும் முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கிய வரலாறும் உண்டு. 1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது முஸ்லிம்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்பு வட மாகாண முஸ்லிம்களின் நலனோம்பு அமைப்பின் சார்பாக ஏ.சி .எம் .இக்பால் “யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மீது வெறுப்புக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்கள் ஒரு பொழுதில் சுல்தானை நகர பிதாவாக ஆக்கியவர்கள் என்பதனாலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். 2008 பிப்ரவரியில் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்தபோது அங்கு யாழ் முன்னாள் அரச அதிபர் கணேஷ் தலைமையில் சிவில் சமூக பிரதிநிகள் சிலரையும் சந்தித்து கருத்துப்பகிர்வு செய்யும் ஒரு நிகழ்வு யாழ் அரச அதிபர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. (Bazeer)