(விஜய பாஸ்கரன் உடன் இணைந்து சாகரன்)
கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பான தெரிந்த சில நண்பர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டேன். இலங்கையில் போக்குவரத்து பொலிசாரின் லஞ்சம் காரணமாக ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுத பாணிகளாகவே பணிபுரிவதாக சொன்னார்கள்.ஒரு சிலரிடம் மட்டுமே ஆயுத பாவனைகள் உண்டு.
இதை சாதகமாக பயன்படுத்தி சில ஆட்டோ ஓட்டுனர்கள்,மோட்டார் வாகனம் ஓட்டுபவர்கள் அவர்கள் இரவு வேளைகளில் வாகனங்களை மறித்தால் அவர்களை தாக்கிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.இதில் யாழ்ப்பாண இளைஞர்களின் அஅடாவடிகள் அதிகம் என்றே கூறினார்கள்.இதில் பல்கலைக் கழக மாணவர்களும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த மாதிரியான அடாவடிகளில் ஈடுபடுகின்றனர் என கூறினார்கள்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இறந்த மாணவன் மிக வறுமையான குடும்பத்தவர்.இந்த வறுமையிலும் அவரது தாய் வட்டிக்கு கடன் எடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார்.எனவே மாணவனின் செயற்பாடுகள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.வீட்டின் வறுமை கருதாமல் தாயார் கடன்பட்டு மோட்டார் வண்டி வாங்கிக் கொடுப்பதை எந்த பொறுப்புள்ள பிள்ளை ஏற்றுக்கொள்வான்.
இவர் ஏதாவது வம்பு செய்யப்போக சம்பவம் விபரீதமாக முடிந்திருக்கலாம் என கதைத்தவர்கள் கூறினார்கள்.அவர்களும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் தந்த தகவல்களே இவை. முகப் புத்தக நண்பர்கள் என் பதிவை தெளிவாக்குவார்கள் என நம்புகிறேன்.
எனக்கும் கொலை செய்யப்பட்டதில் எந்த உடன்பாடும் இல்லை என்ற போதும் இந்த கொலைக்கான சூழல் எவ்வாறு இரு தரப்பினராலும் ஏற்பட்டது என்பதில் கேள்விகள் நிறையவே உண்டு. நான் 1980 களில் பல்கலைக் கழக மாணவனாக இருந்தகாலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இருந்த நாம் எல்லாம் தெரிந்த…. சமூகத்தில் மிகவும் உயர்வாக மதிகப்பட வேண்டிய…. உயர்வானவர்கள் என்ற மமதை மனப்பான்மையையும் இதனை ஒட்டிய செயற்பாட்டையும் இன்று மீட்டுப்பார்க்கின்றேன்.
நான் வளர்ந்த சூழலால் எனக்குள் இருந்த ‘பக்குவப்பட்ட’ நிலமை எனக்கு மூக்கணாங்கயிறு போட்டிருந்தது என்பது ஒரு விசேட நிலமைiயாக இருந்தாலும்… இவ் மூக்கணாங் கயிறை அறுத்தெறியும் திமிர் என்னிடத்தும் ஏனைய பல்கலைககழக மாணவர்களிடத்தும் மத்தியதர மேல் தட்டிற்குரிய குணாம்சம் நிறைந்திருந்ததை மீட்டுப்பார்த்ததில் எனக்கு மேற்கூறியவாறு கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான ஒரு புதிய பார்வையை கிருஷாந்த் போன்றவர்கள் பொறி தட்டி விட்டிருந்தாலும் முழுமையான தெளிவுகள் இன்னும் எனக்குள் ஏற்படவில்லை. யாராவது உண்மையாக ஊகங்களுக்கு அப்பால் விருப்பு வெறுப்புகள் இன்றி சாட்சியம் அளித்தால் ஒழிய உண்மைநிலை வெளிவருமா…? என்பது கேள்விக்குறியே