வட மாகாணத்தின் கல்வி வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு நிராகரிக்கப்பட முடியாதது. இந்தப்பின்னணியில் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது. இத்தெரிவிக்குழுவில் உள்ளவர்களின் தகமை ஆளுமை சமூகப்பொறுப்புணர்வு என்பது மிக முக்கியமானது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று 29 ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்ட்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றவர் கடந்தகாலங்களில் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும் இப்போது எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதுமே தற்போது பிரச்சினையாக எழுந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் மூத்த பேராசிரியர் கி. விசாகரூபன் மற்றும் விலங்கியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ். நோபிள் சுரேந்திரன் ஆகியோரே மூதவையின் சார்பில் பேரவையினால் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பொன் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தது முதல் பல்கலைக்கழகத்தின் கல்வித் தகமை இறங்கு முகமாகி இன்று வடமாகாணத்தின் கல்வியே மிகக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகம் குறிப்பாக கலைப்பீடத்தை காமூகர் பீடமாக மாற்றியதில் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கு மிக முக்கிய பொறுப்பு உள்ளது. பொன்பாலசுந்தரம்பிள்ளையின் குட்டையில் ஊறியவர்கள்: என சண்முகலிங்கன் (பாலசுந்தரம்பிள்ளையைத் தொடர்ந்து துணைவேந்தராக வந்தவர்) க விசாகரூபன், இளங்குமரன், அருந்தாகரன், கணேசலிங்கன் என்று ஒரு பட்டியல் உள்ளது. இவர்கள் தான் பல்கலைக்கழகத்தினை சீரழித்து வடக்கின் கல்வியைச் சீரழிக்கவும் காரணமாக இருந்தவர்கள்.
க விசாகரூபன் இளங்குமரன் அருந்தாகரன் போன்றவர்களுக்கு எதிராக 2010இல் பல்கலைக்கழக மாணவர்களே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதில் ‘மாணவிகளை தமது காம இச்சைகளுக்கு வற்புறுத்தி வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலை கடந்த பத்து ஆண்டுகளின் பின் இன்றும் மாறவில்லை. க விசாகரூபனை இன்றும் பெண் விரிவுரையாளர்களோ அல்லது மாணவிகளோ தனியாக சந்திப்பதற்கு தயங்குகின்ற நிலையே நிலவுகின்றது.
யாழ் பல்கலையின் துணை வேந்தர் என்பது தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை மிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவி. அப்பதவியில் தமிழ் சமூகத்தின் கல்வியே தங்கியுள்ளது. எமது மாணவர் சமூகத்தின் எதிர்காலமும் இவர் கையில் உள்ளது. இப்பதிவிக்கான தெரிவுப்பட்டியலைத் தெரிவு செய்யும் குழுவில் இருப்பவர்களின் தகமை ஆளுமை சமூகப் பொறுப்புணர்வு என்பது மிக முக்கியமானது. இவ்வாறான குழுவில் க விசாகரூபன் போன்ற காமுகர்கள் இடம்பெறுவது யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியையே இழிவுபடுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தின் வழிகாட்டுதல்களுக்கமைய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தகுதிஇ தராதரங்களின் அடிப்படையில் புள்ளியிட்டு, பொருத்தமானவர்களில் ஆகக் கூடியது ஐந்து (ஐந்துக்குக் குறைவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் ஆகக் குறைந்தது மூன்று) விண்ணப்பதாரிகளைப் பட்டியலிடும் பணியை மேற்கொள்வதற்கென மதிப்பீட்டுக் குழு ஒன்று விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் (யூன் 9) அமைக்கப்படுதல் வேண்டும்.
இந்த மதிப்பீட்டுக்குழுவில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் மூதவையில் அங்கம் வகிக்கும் மூத்த பேராசிரியர்கள் இருவரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் மூவரும் இடம்பெறுவர்.
தோழர் அமைச்சர் தேவானந்தாவின் செல்வாக்கு இங்கு தான் வருகின்றது. கடந்த இரு சகாப்தங்களாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தேவானந்தாவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை நியமிப்பதில் அமைச்சர் தேவானந்தாவின் செல்வாக்கு மறுக்க முடியாதது. அமைச்சர் தேவானந்தா நீண்ட காலம் தமிழ் அரசியலில் செல்வாக்கு செலுத்தியவர். தமிழ் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் தேவானந்தா செய்திருந்த போதும், அவை உடனடித் தேவைகளை கவனத்தில் கொண்டு செய்யப்பட்டதாகவே உள்ளது. வடக்கின் கல்விநிலையில் அமைச்சர் தேவானந்தாவினால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஆனால் அவரைச் சுற்றி இருப்பவர்களின் விருப்பங்களுக்கு மாறாக அமைச்சரால் முடிவெடுக்க முடியவில்லை. அவருக்கு ஆலோசணை வழங்கும் மட்டத்தில் பொன் பாலசுந்தரம்பிள்ளை போன்ற சுயநலவாதிகளே உள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் மூவரில் ஒருவர் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் சாராத பிறிதொரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், குறிப்பிட்டட பல்கலைக்கழகத்தின் பேரவையில் அங்கம் வகிக்காத ஒருவராகவும் இருத்தல் வேண்டும். அவரே துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவராகச் செயற்படுவார். அத்தகைய ஒருவர் துணைவேந்தர் தெரிவுக்கான விண்ணப்பதாரிகளில் ஒருவராக முடிவுத் திகதியின் பின்னர் தெரிய வந்தால் பல்கலைக்கழகப் பேரவையின் செயலாளர் (பதிவாளர்) இது பற்றி உடனடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தி, புதிதாக வேறொருவரை நியமிக்குமாறு கோருதல் வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஏனைய இருவரில் ஒருவர் இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த மூத்த அதிகாரியாகவும்இ அமைச்சரவை அங்கீகாரமுள்ள அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் இருப்பார். மூன்றாமவர் பிரபல்யமான அரச அல்லது தனியார் நிறுவனமொன்றின் தலைவராகவோஇ பிரமத நிறைவேற்று அதிகாரியாகவோ இருப்பார்.
கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் காரணம் எதுவும் கூறப்படாமல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின் துணைவேந்தருக்கான அதிகாரங்களுடன் கடந்த வருடம் மே மாதம் முதல் மூன்று மாத காலத்துக்கு வாழ்நாள் பேராசிரியர் க. கந்தசாமி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போதிலும், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தப் பணிகளைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டதுக்கமைய தெரிவு பிற்போடப்பட்டிருந்தது. அதன் பின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்இ பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் செயலிழந்ததன் காரணமாக இழுபறிப்பட்ட துணைவேந்தர் தெரிவு, கடந்த பெப்ருவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய ரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன் பேராசிரியர் க. கந்தசாமிக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்கொரு முறை நியமனம் நீடிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் கோரப்பட்டிருந்தது. இதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் எதிர்வரும் யூன் 9 ஆகும்.
அமைச்சர் தேவானந்தா கடந்த காலங்களில் யாழ் துணைவேந்தர் பதவியில் ஆதிக்கம் செலுத்தி முதுகெலும்பற்ற தனக்கு வளைந்து கொடுக்கின்றவர்களை நியமித்தது போல் இல்லாமல், யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நிலையையும் வடக்கின் கல்வி நிலையையும் கட்டி எழுப்பக் கூடிய தகமை ஆளுமை சமூகப் பொறுப்புணர்வுடைய ஒருவர் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தவந்தராக தெரிவு செய்யப்படுவதை அமைச்சர் தேவானந்தா உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு கல்விக் கட்டமைப்பின் தலைமை: தகுதியும் ஆளுமையும் சமூகப் பொறுப்புடனும் செயற்பட்டால் தான் அங்கு பணிபுரிபவர்களும் அப்பண்புகளுடன் செயற்படுவார்கள். அப்போது தான் அங்கு கற்கும் பட்டதாரிகள் தகுதி, ஆளுமை, சமூகப் பொறுப்புடன் பட்டம்பெற்று வெளியேறுவார்கள். இவர்கள் தான் வடக்கின் அரச கட்டமைப்புகளில் சென்று பாடசாலைகள் உட்பட, ஆளுமையுடனும் சமூகப் பொறுப்புடனும் செயற்படுவார்கள். இது அமைச்சர் தேவானந்தாவிற்கு ஒரு சவாலாகவே அமையும் என்பதில் ஐயம்மில்லை.
(Thesam Net)