குறைந்த பட்ட அரசியல் தீர்வுகள் இலங்கையிற்குள் ஏற்பட ஏதுகள் உருவான போதெல்லாம் இவற்றை கிழித்தெறிய காரணமாக இருந்தவர்கள் பெரும்பாலும் இவர்களே. அது பண்டா – செல்வா ஒப்பந்தமாக இருக்கலாம் சந்திரிகாவின் தீர்வுப் பொதியாக இருக்கலாம் ஏன் இந்திய அனுசரணையுடனான இணைந்த மாகாணசபையை இல்லாமல் செய்ய பிரேமதாசாவின் செயற்பாடாக இருக்கலாம் எல்லாவற்றிலும் இவர்களின் கரங்களே இருந்தன.
ஆனாலும் பாரளுமன்ற தமிழ் தலைமைகளாக, ஆயுதப் போராட்ட குழுவாக இருந்த வலதுசாரிகள் இந்த ஜதே கட்சியை தமது மீட்போனாக பார்ப்பது இன்றுவரை தொடர்கின்றது. இதன் தொடர்சிதான் இன்றைய ரணிலின் தமிழழை கற்கவில்லை என்று கவலைப்படுவதான கூற்றை தெய்வ வாக்காக பார்த்து தமிழ் ஊடகங்கள் ஊதிக் கொண்டாடும் நிலமைகளும்…. இன்னும் இருவருடங்களில் தமிழர் பிரச்சனையை தீர்பேன் என்ற ரணலின் சூழுரையை பெரிது படுத்தி தமிழ் மக்களை நம்ப வைக்கும் செயற்பாடுகளும் ஆகும்.
வலதுசாரித் தமிழ் தரப்பு எப்போதும் அமெரிக்க சார்ப்பு ஐதே கட்சியுடன் நண்பேன்டா என்று கொண்டாடுதல் தொடருமாயின் இன்னும் 40 வருடங்களில் இலங்கையில் தமிழ் இனம் என்ற ஒன்று இருந்ததற்கான சுவடுகளை நாம் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இது கன்னியா பிள்ளையாரை தூக்கி எறிவது வரைக்கும் வளரச்;சியடைந்த வண்ணமே தனது பயணத்தை தொடரும். இதில் குளிர் காய நினைக்கும் சுதந்திர கட்சியினர் தமது அரசியல் வெற்றிகளை என்றும் ஏற்படுத்திய வண்ணம் தமது பயணத்தை மேற்கொள்ளுவர். எமது தமிழ் தலமைகள் அடுத்த பொங்கல் தமிழ் ஈழத்தில் என்று முகாங்களை அடித்தும் அடிக்காமல் அடிப்போம் என்றும் உசுப்பேத்திய வண்ணம் பயணங்களை மேற்கொள்ளுவர். எமது உரிமைக்கான தார்மீக ஆதரவை சர்வதேச சமூகத்திடம் பெற்றுக் கொள்ளும் இராஜதந்திர நகர்வில் என்றும் நாம் தோற்றவண்ணமே இருப்போம். இததான் எமது இருப்பை நாம் எமது மண்ணில் இழப்பதற்கான அடிப்படைக் காரணியாக கடந்த நூற்றாண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வருகின்றது