(என்.கே. அஷோக்பரன்)
தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல் செய்து, ‘மொட்டுக் கட்சி’ என்று விளிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது.