(“பனை வீழ்தது” நூலிருந்து சாராம்சம்)
இக்கொலை புலிகளினால் நன்கு திட்டமிட்டே மேற்க்கொள்ளப்பட்டது. இக்கொலை இடம்பெறுவதற்க்கு 1 வாரத்திற்க்கு முன் இந்திய இராணுவத்தின் 2 மேஜர் தரப்பு அதிகாரிகள் ராஜினியை பல்கலைக்கழக வளாகத்துள் சந்தித்துள்ளனர். ராஜினி இங்கிலாந்து சென்ற சமயத்தில் முறிந்த பனை நூலின் பிரதிகளை எடுக்க சென்ற இந்திய இராணுவம் வீட்டில் இருந்தோரை தொந்தரவு செய்துள்ளனர். இது குறித்து அங்கு வந்த இரு அதிகாரிகளுடன் ராஜினி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்து சிறிது நேரத்துக்குள்ளேயே மருத்துவபீட மாணவர்களாகிய சூரியக்குமாரும் தர்மேந்திராவும் ராஜினியை அணுகி என்ன நடந்ததென கதைத்துள்ளனர். இவ்வுரையாடலின் போது இந்திய இராணுவத்தின் வெளியேறல் முறிந்த பனை ஈ.பி.ஆர்.எல். எவ். பொன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன. ஓர் கட்டத்தில் தர்மேந்திரா இந்திய இராணுவம் வெளியேறி 2 நாட்களில் ஈபிஆர்எல்எவ் வை அழித்துவிடுவோம் எனக்கூறியுள்ளார். பினனர் ஓர் இடத்தில் ராஜினி நீங்கள் என்னையும் கொன்றுவிடுவீர்கள் எனக் கூறியுள்ளார்.
இந்திய இராணுவ அதிகாரிகளுடனான இந்த வாக்குவாதம் பல்கலைக்கழகத்துள் பரபரப்பாக பேசப்பட்டது. இது நடந்து ஒரு வாரத்தில் ராஜினி படுகொலை செய்யப்பட்டார். இதனால் இப்படுகொலையை யார் செய்தார்கள் என்பதில் அந்நாட்களில் சந்தேகம் நீடித்துக்கொண்டே இருந்தது.ஆனால் பின்னர் மக்கள் புலிகள்தான் இதை செய்தார்கள் என்று எண்ணுவதை அறிந்து கொண்ட புவிகள் அப்பழியை மாத்தையா மேல் போட முற்பட்டார்கள்.
1992ம் ஆண்டளவில் யாழ்.பல்கலைக்கழக பிரதிநியொருவரை சர்வதேச மன்னிப்பு சபை அங்கத்தவர் ஒருவர் சந்தித்தபொழுது ராஜினியை கொன்றது ஈபிஆர்எல்எவ் தான் என ஈபிடிபி அங்கத்தவர் கூறியதான சொல்லியுள்ளார். ஆனால் இது ஒருவர்மேல் ஒருவர் பழிபோடும் செயல் என எண்ணி அதை அவர்கள் பெரிது படுத்தவில்லை. இதே நேரத்தில் ஈபிடிபியால் வெளியிட்பட்டு வந்த ரமேசை ஆசிரியராகக்கொண்ட தினமுரசு பத்திரிகையில் அவர் எழுதிவந்த போராட்ட வரலாற்று தொடரில் இருதடவைகள் அப்பழி ஈபிஆர்எல்அப் மீது சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக ஈபிஆர்எல்எவ் வை சேர்ந்த சிறிதரனிடம் வினவிய பொழுது தானும் சுபத்திரனும் சென்னையில் பத்திரிகையாளர் பகவான் சிங்கை 1992 ம் ஆண்டுளவில் சந்தித்தபொழுது ஓர் இளைஞன் தான் ஈபிஆர்எல்எவ் இல் இருந்தபொழுது தான்தான் ராஜினியை சுட்டதாகக் கூறினார் என தம்மிடம் கூறினதாக எமக்கு சொன்னதாகவும் இதைக்கூறும் பொழுது அவன் ஈபிடிபி அங்கத்தவர் என மேலும் அப்பத்திரிகையாளர் தெரிவித்ததாகவும் சிறிதரன் கூறினார்.
தீவீர விசாரணைகட்க்குப்பின்னர் இவ்விளைஞர் செல்வக்குமார் என அடையாளம் காணப்பட்டார்.இவர் ஒர் திறில் காய். சிலகாலம் ஈபிஆர்எல்எவ் இல் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கீழ் இயங்கியவர் என கண்டறியப்பட்டது. இவர் மதுபாவனைக்கு அடிமையானவர் எனவும் இவரது சொற்களை தான் கணக்கெடுப்பதில்லை யென பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகவான் சிங் இவர்களிடம் கூறியுள்ளார்.இவரை ஈபிடிபி பாவித்துள்ளார்கள் என்பதே பொதுவான கருத்து.
பின்னர் இவருக்கு பதிலாக தோமஸ் என்றவர் தான் இக்கொலையை செய்ததாக இன்னுமோர் புரளியை ஈபிடிபி கிளப்பி விட்டது. இச்சமயத்தில் தோமஸ் கொழும்பில் வசித்து வந்தார். இவ்வதந்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த தோமஸ் நிச்சயமாக அதை புலிகள்தான் செய்தனர் என தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக இரு ஈபிடிபி உறுப்பினர்கள் டக்ளஸ்சிடம் வினவிய பொழுது சினமடைந்து ஏன் அவங்கள் கொலைகள் செய்யவில்லையா என பாய்ந்துள்ளார்.
1986 ஆண்டு பிரிவுக்கு பின்னர் டக்ளஸ்சுக்கு ஈபிஆர்எல்எவ்வை களங்கப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. 1990 களில் ஈபிஆர்எல்எவ் பல வித நெருக்கடிகட்கு முகம் கொடுக்க நேரிட்டது. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த பொழுது தனது நடவடிக்கைகள் மூலம் அவ்வியக்கம் மக்கள் மத்தியில் பாரிய அவப்பெயரை சுமந்து நின்றது. இவ் அவப்பெயரை மாற்றி மாக்சிச வழிமுறைகட்கு திரும்ப சுபா சுகு போன்றவர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்நாட்களில் பிரேமதாசா அரசாங்கத்திற்க்கும் புலிகட்கிமிடையில் யுத்தம் ஆரம்பித்து விட்டது. ஈபிடிபி அரசபடைகளுடன் சேர்ந்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் ஈபிஆர்எல்எவ் அதற்க்கு மறுத்துவிட்டது. இதன் பின்னர் ஈபிஆர்எல்எப் பாரிய நிதி நெருக்கடிகட்குள்ளானது. அதன் பணம் சொத்துக்கள் யாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனால் நிர்வகிக்கப்பட்டது.
90களின் இறுதிகளில் எமது அனுமானத்தின் படி புலிகளின் சம்மத்துடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் நீண்ட இடைவெளியின் பின்ஈபிஆர்எல்எவ் இன் பொது சபை கூட்டத்தை புலிகள் தேவையான வேளைகளில் தடங்கள் இன்றி நடமாடக்கூடிய வவுனியாவில் கூட்டினார். அவரை எதித்தவர்கள் அங்கு வரமுடியாதென்பதை அவர் நன்கறிந்தே இடத்தை தெரிவு செய்துள்ளார். குறைந்தளவு அங்கத்தவர்களுடனும் அவ்வியக்கத்தின் சொத்துக்களுடனும் அவர்புலிகளிடம் சரணடைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சங்கமித்தார்.