இவர்களுடைய சொந்த நாடு எது?
ஏன் இவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்?
ஏன் தேடித்தேடி வேட்டையாடப்படுகிறார்கள்?
இவர்களை ஏன் அகதிகளாகக்கூட ஏற்க அண்டை நாடுகள் தயங்குகின்றன?
சர்வதச சமூகம் என்ன சொல்கிறது?
மியான்மரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது .
ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சர்வாதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பரவியதாகச் சொல்கின்றார்கள் .
மியான்மரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றது.
அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்று 1956 அரசாங்கம் மறுத்தது . இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது . இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது .
1990 களில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது. இதனால் 2,68.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .
அதேபோல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது . அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாக உள்ளது .
மியான்மரின் மக்கள் தொகையில் 5 சதவீதம் கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கு கடுமையான கொடுமைகளுக்கும், பாரபட்சங்களுக்கும் இலக்காகி வருகின்றனர். நாட்டின் குடியுரிமை கிடைக்காத இம்மக்கள் மீது அரசு ஆதரவுடன் புத்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். புத்த தீவிரவாதிகளின் தாக்குதல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன்று பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை , உடுப்பதற்கு உடையில்லை , வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள் , கர்ப்பிணிப் பெண்கள் வயோதிகர்கள் ,கடலில் தத்தளித்துக் கொண்டு உயிரை விடுகின்றார்கள் . இதுதான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை .
இத்தகைய தாக்குதல்களுக்கு மூலக்காரணம் யார்?
அசின் விராத்து என்பவன் மியான்மரின் பௌத்த (தீவிரவாதி) துறவியும், மியான்மரின் முஸ்லிம்களுக்கு எதிரான 969 இயக்கத்தின் ஆன்மிகத் தலைவன்.இவன் தனது உரைகளின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டினான் எனக் குற்றம் சாட்டப்பட்டவன். ஆனாலும், தாம் ஒரு அமைதிவழி அறவுரையாளர் எனக் கூறி வரும், அதேவேளையில், முஸ்லிம்களை எதிரிகள் எனத் தன் உரைகளில் வெளிப்படையாகப் பேசி வருபவன்.
1968 இல் மண்டலையில் பிறந்த விராத்து தனது 14வது வயதில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தி, பௌத்த மதகுருவானார். 2001 ஆம் ஆண்டில், 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டான்.2003 ஆம் ஆண்டில் இவனின் உரைகளுக்காக, இவனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் மற்ற அரசியல் கைதிகளுடன் சேர்த்து விடுவிக்கப்பட்டான்.
இஸ்லாமிய எதிர்ப்பு
2012 செப்டம்பரில், அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் அறிவித்த ரோகிங்கியா முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஆதரித்து மதகுருக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினான். ஒரு மாதத்தின் பின்னர் ராக்கைன் மாநிலத்தில் வன்முறைகள் வெடித்தன. 43 பேர் வரை கொல்லப்பட்டனர். பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் சேதமாக்கப்பட்டன.
டைம் இதழ் தனது 2013 ஜீன் 20 இதழ் முகப்பில் “தீவிரவாத பிக்குவின் முகம்” எனத் தலைப்பிட்டு விராத்து பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தது. முசுலிம்களைப் பற்றி விராத்து தேரர் குறிப்பிடுகையில், “நீ அன்பையும், பரிவையும் பெருமளவு கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு முட்டாள் நாய்க்கு அருகில் நீ தூங்க முடியாது,” என்றான். பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெறும் திருமணங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும், முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என கொக்கரித்தான்.
உலகத்தில் ஒரு இனத்துக்கெதிராய் இவ்வளவு அநீதியை,அட்டூழியத்தை
பட்டவர்த்தனமாய் யாரும் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு நிகழ்த்துவது அன்பை போதிப்பதாய் தம்பட்டம் அடிக்கும் புத்த பிக்குகள்.
இந்த இனச்சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.. இல்லையென்றால் மியான்மர் முஸ்லிம்கள் கிளர்ந்தெழுவதை யாராலும் தடுத்திட இயலாது..