அது வேறு யாருமல்ல ஒன்பது வயதுகூட ஆகாத பச்சிளம் பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக ஆட்சேர்;ப்பு செய்து, கொலை செய்யவும்; முடமாக்கவும், விகாரப்படுத்தவும் மற்றும் காயப்படுத்தவும் புத்திமதிகள் கூறியவரும் மற்றும் தீவிரவாத பயிற்சியை நிறைவு செய்தபின் அவர்களுக்கு சயனைட் குளிகைகளினால் ஆன மாலை சூட்டியவருமான அடேல் பாலசிங்கம் தான் அவர். இரண்டு உலகத் தலைவர்களைக் படுகொலை செய்தது உட்பட தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய எல்.ரீ.ரீ.யினது பெண்கள் பிரிவிற்கு ஒரு ஆலோசகராக செயற்பட்டதுக்கு மேலதிகமாக அடேல் ஒரு படைப்பாற்றல் மிக்க தீவிரவாத பிரச்சாரகர், தென் கொரியாவில் இருந்து ஆயுதங்களை அனுப்புவதற்காக ஆயுதக் கப்பல்களில் பயணம் செய்தது உட்பட ஒரு தொடர் சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இன்று அடேல் லண்டனில் சுகமாக வாழுகிறார்.
அடேலைப் போல ஸ்ரீலங்காவின் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 10,000 க்கும் அதிகமான முன்னாள் தலைவர்களும் மற்றும் அங்கத்தவர்களும் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கிறார்கள். அவர்களில் பெருந்தொகையானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ எனும் பயங்கரவாத அமைப்பு அதன் போட்டிக் குழுக்களின் தலைவர்களையும் மற்றும் அங்கத்தவர்களையும் கொடூரமாக வேட்டையாடிக் கொலை செய்தபோது அதனிடம் இருந்து தப்பியோடிய போராளிக் குழுக்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனினும் ஸ்ரீலங்கா, பிரித்தானியா மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளின் கூற்றுப்படி, இயக்கும் நபர்கள் உட்பட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் குறைந்தது 3000 பேராவது, அடேல் பாலசிங்கம் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள்.
அடேலின் கணவரான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம் (1938 மார்ச், 4 – 2006 டிசம்பர், 14) ஒரு சட்டபூர்வமான ஒரு பிரித்தானிய குடிமகனாவார். இவர் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிகவும் செல்வாக்குள்ள ஆலோசகரான படியால், எல்.ரீ.ரீ.ஈயின் தத்துவவாதி மற்றும் கருத்தியலாளர் என அழைக்கப்பட்டார், பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்தக் குழுவுக்கு தொடக்கம் முதலே செல்வாக்கு செலுத்தி உதவிகளை செய்து அதனை வழி நடத்தினார்கள். பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் இந்தியாவில் இருந்தபோது 1980 களிலும் மற்றும் ஸ்ரீலங்காவில் 1990 களிலும் அவருடன் பணியாற்றி உள்ளார் மற்றும் அவர் 1999 முதல் டிசம்பர் 2004ல் இறக்கும் வரை நடப்பின்படி மெய்யான ஐக்கிய இராச்சிய எல்.ரீ.ரீ.ஈ தலைவராக இருந்தார்.
அடேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. எல்.ரீ.ரீ.ஈ க்காக பிரச்சாரம் மற்றும் வக்காலத்து வாங்குபவரான அடேலின் பணி, அரசியல் மற்றும் மனிதாபிமான பணி என்று வெளிக்காட்ட முயற்சித்த போதிலும், அவை துல்லியமாக போராளி மற்றும் தீவிரவாத தன்மையை கொண்டவை. பிபிசி யினால் 1991ல் தயாரிக்கப்பட்ட தற்கொலை போராளிகள் எனும் ஆவணப்படம், அடேல் புலிகள் சீருடை அணிந்தபடி ஏகே 47 துப்பாக்கியை ஏந்தியபடி, தனது கழுத்தில் ஒரு சயனைட் குப்பியை அணிந்தவாறு நிற்பதை காட்டுகிறது. அப்பாவி பிள்ளைகள் மற்றும் இளம்பெண்களின் கழுத்தில் அடேல் பெருமையுடன் சயனைட் குப்பிகளை கட்டுகிறார். அவுஸ்திரேலியா அடேலை நோய்களை குணப்படுத்தும் ஒரு தாதியாக பயிற்றுவித்த போதிலும், அவர் புலிகள் கொலை செய்வதற்கு பிள்ளைகளை கடத்தி வந்து அவர்களுக்கு போதனைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார்.
திருப்புமுனை
அவுஸ்திரேலியா, விக்ரோரியா, வாரகல்லில் 1950 ஜனவரி 30ல் பிறந்த அடேல் ஆadel and Balasingamன் வில்பி தொழில் முறையில் ஒரு தாதியாக தேர்ச்சி பெற்றவர், அவர் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறும்வரை மெல்போர்ன் கிப்ஸ்லான்ட்டில் வேலை செய்தார். ஸ்ரீலங்காவிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளாகவும் மற்றும் கொழும்பில் ஒரு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்த மார்க்ஸியவாதியான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கத்தை சந்தித்ததுடன் அடேலின் வாழ்க்கையில் மாற்றம் உண்டானது. ஐக்கிய இராச்சியத்தில் பாலசிங்கம் ஒரு முதுகலை மாணவனாக மார்க்ஸிய உளவியலில் பணியாற்றிக் கொண்டே ஈஸ்ட் பாங் பல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரிய உதவியாளராகவும் வேலை செய்து வந்தார். அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவி அழகானவரும் மற்றும் இரக்க சுபாவமுள்ளவருமான ஒரு தமிழ் பெண், அவர் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஐக்கிய இராச்சிய எல்.ரீ.ரீ.ஈயில் உள்ளவர்கள் அவரைப் பற்றிப் பரவிய கருணையற்ற வதந்தியினால் வெறுப்படைந்தார்கள். அன்ரன் பாலசிங்கம் தனது மனைவியை பராமரிக்க வந்த தாதியுடன் காதலில் விழுந்ததினால் திருமதி. பாலசிங்கத்தை உயிர்வாழ்வதற்கு உதவிவந்த அமைப்பை துண்டிப்பதற்கு இருவரும் கூட்டாக திட்டமிட்டார்களாம். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தான் அதிகம் நேசித்த தனது மனைவியின் மரணத்தினால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இருந்து கொழும்புக்கு கண்ணீருடன் தனது மனைவியின் அஸ்திக் கலசத்தை சுமந்து கொண்டு பறந்தார்.
லண்டனில் உள்ள பிறிக்ஸ்ரனில் வைத்து 1978 செப்ரம்பர் 1ல் அடேலை அன்ரன் பாலசிங்கம் திருமணம் செய்த பிறகு, தனது முனைவர் பட்டப்படிப்பிற்காக பாலசிங்கம், பேராசிரியர் ஜோண் ரெயிலரிடம் கற்று வந்தார், ஆனால் அவர் அதை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை. ஆரம்பத்தில் பாலசிங்கம் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்புடன் (ஈரோஸ்), எல்.ரீ.ரீ.ஈயின் மேற்கு ஐரோப்பிய பிரதிநிதியான எஸ் கிருஸ்ணனினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார். லண்டனை தளமாக கொண்டிருந்த கிருஸ்ணன் விசேடமாக விரும்பியது, எல்.ரீ.ரீ.ஈ தலைவரான உமா மகேஸ்வரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ தளபதியான வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் இடையே இருந்த உட்பூசலை தீர்க்கவேண்டும் என்றே. பாலசிங்கத்தின் தலையீடு தகராறை தீர்ப்பதற்குப் பதிலாக அதை மேலும் விரிவுபடுத்தியது. ஸ்ரீலங்காவின் வடபகுதிக்கு நகர்வதற்கு முன்னர், இந்தியாவில் பாலசிங்கம் முதலில் திருவான்மியூரிலும் பின்னர் அடையாறிலும் வசித்தார். இந்திய அதிகாரிகள் பாலசிங்கம் தம்பதியரை ஒருபோதும் விசுவசிக்கவில்லை, ஒரு கட்டத்தில் அவர்களை நாடு கடத்தவும் செய்தார்கள். அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் உறுதியான எண்ணம், பாலசிங்கம் ஒரு மேற்கத்தைய உளவுத்துறைக்காக வேலை செய்பவர் மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்க விரும்பும்புபவர் என்பதாக இருந்தது.
மூன்று தசாப்தங்களாக அடேலின் பங்களிப்பு சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும் ஆட்சேர்ப்பு செய்து எல்.ரீ.ரீ.ஈயின் கொலை செய்யும் ஆற்றலை வலுப்படுத்துவதாகவே இருந்தது. பாலசிங்கத்தை விட அதிகம் ஆக்கிரமிப்பு குணமுடைய அடேலுக்கு ஆயுதங்களை இயக்குவதற்கு பிரபாகரனாலேயே பயிற்சி வழங்கப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ இரகசியமாக ஈடுபட்டிருந்ததை அடேல் வெளிப்படையாகவே செய்து அதை சட்டபூர்வமாக்க முயன்றார். தனது குழுவுடன் அடேல் பாடசாலைக்கு பாடசாலை சென்று பிள்ளைகளை ஆட்சேர்ப்பு செய்ததுடன் முகாமுக்கு முகாம் சென்று அவர்களுக்கு வழிகாட்டல்களையும் வழங்கினார். எல்.ரீ.ரீ.ஈ சிறுவர் போராளிகளைப் பற்றிய ஒரு டசினுக்கும் மேலான காணொளிகள் அடேல் அன்ரியையும் அவரது குழந்தைகள் படையணியையும் பற்றிய சாட்சியங்களாக உள்ளன.
சிறுவர் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்தல்
எல்.ரீ.ரீ.ஈ ஆட்சேர்ப்பு செய்த பாடசாலைகளில் பற்றிமா பாடசாலையும் ஒன்று, அங்கு இருந்த 543 மாணவர்களும் அடேல் உட்பட எல்.ரீ.ரீ.ஈ பிரச்சாரகர்களால் போதனைக்கு அடிமையானார்கள். அவர்கள் அனைவரும் ஸ்கந்தபுரம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அடேலினால் பயிற்சி வழங்கப்பட்டு அவருடன் பணியாற்றத் தொடங்கினார்கள். 10 வயது இளமையான பிள்ளைகளுக்கு கூட ஆயுதங்களையும் மற்றும் குண்டுகளையும் கையாள பயிற்சி வழங்கப்பட்டது. அவர்கள் பயிற்சியை நிறைவு செய்து பட்டம் பெறும் நிகழ்ச்சியில் எல்.ரீ.ரீ.ஈயில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் தலைவர்களான தமிழ்செல்வன் மற்றும் விதுஷா ஆகியோருடன் அடேலும் கலந்து கொண்டார். அன்பு தளத்தை சேர்ந்த 12 வயதுள்ள சிறுவர்கள் கூட பயிற்சி வழங்கப்பட்டு யுத்தம்செய்ய அனுப்பப்பட்டார்கள். தப்பியோடிய சிறுவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து தப்பிய அல்லது ஸ்ரீலங்கா படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் சிறார்கள் அடேல், ஆட்சேர்ப்பு, போதனை,பயிற்சி, மற்றும் இயக்கம் என்பனவற்றில் சம்பந்தப் பட்டிருந்ததாகத் தெரிவித்தார்கள்.
கனிட்ட வித்தியாலய மாணவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் கனகபுரம் வல்லிபுனத்தில் adel -prabaஉள்ள லிமா 06 முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பல்வேறுபட்ட சாட்சியங்கள் மூலம் அடேல் விதுஷா, துர்கா, மற்றும் செல்வி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். அடேல் இயக்கும் பாத்திரமாக இருந்ததுக்கு அவர்கள் சாட்சிகள், உதாரணமாக விதுஷாவுக்கு கட்டளை இடுவது. தப்பியோடுபவர்கள் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டார்கள், மற்றும் அதில் சிலர் இறந்து போனார்கள் மற்றும் சிலர் மனநோயால் பாதிக்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்கள். சிறுவர்கள் எல்.ரீ.ரீ.ஈ தங்களுக்கு எப்படி துன்புறுத்தல் செய்தது என்று சொல்கிறார்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்வதை தடுக்க அவர்களைக் கர்ப்பிணிகளாக்க கட்டாயமாக திருமணம் செய்து வைத்த கொடுமையைப் பற்றி பெற்றோர் பேசுகிறார்கள்.
எல்.ரீ.ரீ.ஈயின் அகராதியில் ‘இனப்படுகொலை முயற்சி’ எனும் வார்த்தையை அடேல் அறிமுகப் படுத்தினார். ஒவ்வொரு மோதலிலும் பயங்கரவாதிகள் பொதுமக்களின் பின்னால் மறைந்து நின்று கொண்டு திருப்பிச் சுடுவதை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்துவார்கள், இந்திய அமைதிப் படை மற்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகள் செயற்படுத்திய நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு மரணங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.
எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவம் மற்றம் அரசியல் தலைமைகள் தீங்கு செய்வதற்கு அடேல் செல்வாக்கு செலுத்தியதுக்கு எந்தவிதமான வரலாற்று அல்லது கலாச்சாரப் பின்னணிகள் கிடையாது. கொடிய மற்றைய இரண்டு பேர்களான திராவிட கழக சித்தாந்தம் கொண்ட பிரபாகரன் மற்றும் மார்க்ஸிய சித்தாந்தவாதியான பாலசிங்கம் ஆகியோருடன் இணைந்து, அடேல் பல்வேறு இயக்கங்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து எல்.ரீ.ரீ.ஈ யினை வளர்த்தார், அதனால் இந்த மூவருமே அழிவினை முடித்து வைத்தார்கள்.
ராஜீவ் காந்தி கொலையில் கிட்டுவின் பங்களிப்புக்கு மாறாக கிட்டுவை வெளியேற்றிய பிறகும் ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்து செயற்பட்டது. எட்டு வருடங்களுக்குப் பிறகு பிரத்தானிய அரசாங்கம் பாலசிங்கத்தை காப்பாற்ற முன்வந்தது. 1999ல் பாலசிங்கத்தை நாட்டை விட்டு வெளியே அனுப்பி அவரது சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சையளிக்க எல்.ரீ.ரீ.ஈ விரும்பியபோது, ஸ்ரீலங்கா அரசாங்கம் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டாம், பொதுமக்களை கொலை செய்ய வேண்டாம் மற்றும் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என எல்.ரீ.ரீ.ஈயினை வலியுறுத்தியது. பிரித்தானிய அரசாங்கம் பாலசிங்கத்துக்கு புதிய கடவுச்சீட்டை வழங்கியது மட்டுமன்றி, அதன் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகங்களின் அனுசரணையுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மூலமாக அடேலுக்கும் ஒரு புதிய கடவுச்சீட்டை பெற உதவியது. அதுவரை அவுஸ்திரேலியா அந்த தம்பதியர் நாட்டுக்குள் வருவதை நிராகரித்திருந்தது. அது மட்டுமன்றி அவுஸ்திரேலிய வெளிநாட்டு தாக்குதல் சட்டம், அதன் குடிமக்கள் வெளிநாட்டு சண்டைகளில் போரிடுவதை தடை செய்கிறது, இந்தச் சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் கண்காணிப்பு பட்டியிலில் உள்ள அடேல் மீது வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.
பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னர் தென்மேற்கு லண்டனின் புறநகர் பகுதியான நியு மால்டினில் நடுத்தரக் குடியிருப்புகள் உள்ள அமைதியான தெருவில் அமைந்துள்ள பெரிய இரட்டை மாடி வீட்டில் அடேல் வசித்து வருகிறார். ஒரு போர்க் குற்றவாளியான அடேல் மானிடத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார். அப்படியானால் அடேல்மீது குற்றம் சாட்டுவதோடு நின்றுவிடாமல் அவரைக் கைது செய்து தண்டனை வழங்க முயற்சிக்க வேண்டாமா?
எப்படி உதவி கிட்டியது
முன்னாள் தமிழ் கார்டியன் ஆசிரியரான ராஜசிங்கம் ஜெயதேவன், காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கத்துடனான தனது குறுகிய அறிமுகத்தை நினைவு கூரும்போது, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகங்கள் மிகவும் உதவியாக இருந்ததுடன் அவுஸ்திரேலிய தூதரகத்திடமும் உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. அவுஸ்திரேலிய தூதரகமும் மிகவும் பெருந்தன்மையுடன் 24 மணித்தியாலங்களுக்குள் அடேலுக்கு புதிய கடவுச்சீட்டை வழங்கியது.
முறையாக பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவியதால் பாராளுமன்ற உறுப்பினர்களான பரி கார்டினர், மற்றும் சிமோன் ஹைஸ் போன்றவர்களை அடைவதற்கு எல்.ரீ.ரீ.ஈக்கு வழிகிட்டியது, மற்றும் அவர்கள் ஊடாக வெளியுறவு அமைச்சரான டெரக் பாற்செற் மற்றும் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரையும் அணுகியுள்ளார்கள்.
ஜெயதேவன் சொல்வதின்படி “நோயாளியான பாலசிங்கத்தை சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்வதற்கான பாதுகாப்பான பயணவழியை ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் ஒழுங்கு செய்வதில் எல்.ரீ.ரீ.ஈ தோல்வியடைந்ததும், எல்.ரீ.ரீ.ஈயின் பரீஸ் சர்வதேச செயலகத் தலைவர்; வீரகத்தி மனோகரன் எல்.ரீ.ரீ.ஈ ஆர்வலான எலிசபெத் பாக்கியதேவி மானிடம் அன்ரன் பாலசிங்கத்தின் பிரித்தானிய கடவுச்சீட்டை புதுப்பிக்கும்படி கேட்டுக் கொண்டர். லிபரல் ஜனநாயக கட்சியின் ஒரு அங்கத்தவரான செல்வி மான், அவரது பாராளுமன்ற அங்கத்தவரான சிமோன் ஹைசிடம் உதவிக்காக அணுகினார்”.
ஜெயதேவன் மேலும் விபரிக்கையில்” திரு.ஹைஸ், பாராளுமன்ற எதிர்க்கட்சி அங்கத்தவரான தன்னிடம் வருவது வீண் செயல் மற்றும் இந்த முயற்சியில் தான் வெற்றியடையப் போவதில்லை என்று செல்வி. மானிடம் வெளிப்படையாகவே சொன்னார். எனினும் அவர் வெளியுறவுச் செயலாளருக்கு எழுதுவதுக்கு விருப்பம் தெரிவித்தார் மற்றும் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினரை அணுகும்படி மானுக்கு அவர் கடுமையாக ஆலோசனையும் கூறினார்”
ராஜசிங்கம் ஜெயதேவன் தொழிற்கட்சிக்கு நெருக்கமானவராக இருந்தபடியால், ஐக்கிய இராச்சியத்தில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ பேச்சாளர் அன்ரன் ராமச்சந்திரன் என்கிற அன்ரன் ராஜா அல்லது ராமாசார் 1999ல் அவரிடம,; பாலசிங்கம் வன்னியில் செத்துக் கொண்டிருக்கிறார் மற்றும் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். எனினும் அன்ரன் ராமச்சந்திரன் “ தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபடுவதை, விமானங்களை சுடுவதை மற்றும் யுத்தத்துக்காக சிறுவர்களை ஆட்சேர்ப்பது போன்றவற்றை நிறுத்தும்படி கொழும்பு எல்.ரீ.ரீ.ஈயிடம் நிபந்தனை விதிக்கிறது” என்பதனையும் தெரிவித்ததுடன் “இந்த எந்த கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவிக்க எல்.ரீ.ரீ.ஈ மறுக்கிறது” என்பதையும் சொன்னார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியுடன் பாலசிங்க்தின் பயணத்துக்கு ஒழுங்கு செய்தால் சமாதான பேச்சுக்களில் ஈடுபடுவது என எல்.ரீ.ரீ.ஈ தலைமை வழங்கிய உறுதிமொழியை நம்பிய ராஜசிங்கம் ஜெயதேவன் சொன்னது “நான் எனது நெருங்கிய நண்பரான உள்ளுர் பாராளுமன்ற உறுப்பினரான பரி கார்டினரை (அவரை நான் பரி என்றுதான் அழைப்பேன்) அவரது வீட்டில் சந்தித்து வேண்டுகோளைப் பற்றி முழுதாக விபரித்தேன் மற்றும் ஸ்ரீலங்காவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்று சம்பவம் இது என்று நான் அவரிடம் தெரிவித்தேன். பரியும் கூட அதற்கு இணங்கியதுடன் எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து ஒரு வாய்ப்பு வருகிறதே என மகிழ்ச்சியடைந்தார்” என்று.
ஜெயதேவன் மேலும் தொடர்கையில் “கூட்டத்தின் முடிவில் என்னை அடுத்தநாள் தொடர்பு கொள்வதாகச் சொன்ன பரி, எல்.ரீ.ரீ.ஈயினால் முன்வைக்கப்பட்டதை எழுத்துமூலம் உறுதிப் படுத்தும்படியும் என்னிடம் கேட்டுக் கொண்டார். எனது கடிதத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு எல்.ரீ.ரீ.ஈ யின் அணுகுமுறை நியாயமானதாக இருப்பதாகவும் மற்றும் இந்த நடவடிக்கையில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டால் அதற்கு ஈடாக எனது சொத்துக்கள் யாவற்றையும் கூட்டுப் பொறுப்பாக முன்வைக்கவும் நான் தயார் என்று நான் ஒரு உறுதிமொழியையும் வழங்கினேன். வெளிவிவகார அமைச்சுக்கு நான் எழுதிய கடிதம் பாலசிங்கத்துக்கும் பிரதி செய்யபபட்டது. அடுத்த நாள் காலை 11 மணியளவில் பரி என்னை அழைத்து தான் வெளியுறவு அமைச்சர் டெரக் பற்செற்றை கண்டு பேசியதாகவும் மற்றும் அவர் பாலசிங்கத்துக்கு கடவுச்சீட்டு வழங்க அனுமதி வழங்கிவி;ட்டார் என்று சொன்னபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என்றார்.
இருந்தபோதிலும் பாலசிங்கத்தின் இடமாற்றத்தின் பின்னர், அவர் பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்தை தொடர்பு கொள்வதை தவிர்க்கலானார். “பாலசிங்கம் தான் அவர்களைச் சந்திக்க இப்போது தயாராக இல்லை எனவும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். தான் இன்னமும் பூரண சுகமடையவில்லை என்று அவர்களிடம் சொல்லும்படியும் அவர் சொன்னார். அன்ரன் பாலசிங்கம் குணமாகி விட்டார் சந்திப்புக்கு எற்ற நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொண்டே நான் அந்த தகவலை வெளியுறவு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். சில வாரங்கள் கழித்து வெளியுறவு அலுவலகத்தால் நான் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டேன், ஆனால் அன்ரன் பாலசிங்கத்திடம் இருந்து அதே பழைய சாக்குபோக்கு வெளிவரத் தொடங்கியது. திரும்பத் திரும்ப பொய் சொல்லுவது எனக்கு கடினமாக இருந்தது, ஆனால் எதற்கும் ஒரு நாள் ஒரு முடிவு வரும் என்கிற எதிர்பார்ப்போடு நான் காத்திருந்தேன்”. ஐக்கிய இராச்சியத்துக்கு இடம் மாறிய பிறகு பாலசிங்கம் சமாதானத்தை தீவிரமாக பின் தொடரவில்லை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
மூலம்: த சண்டே லீடர்.எல்.கே