இந்தக் கொடூரத்தைக் கண்டித்து –
கோயம்புத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஊர்வலத்தில் போயிருக்கிறேன்.
முழக்கமிட்டிருக்கிறேன்.
அதே கடாபி 2011இல் கொல்லப்பட்டபோது-
உலகத்தின் முகம் மாறியிருந்தது.
‘ சர்வாதிகாரி கொடுங்கோலன் கடாபி கொல்லப்பட்டான்’ என்று இந்திய – தமிழக ஊடகங்கள் எழுதினபோது –
மறுத்துப்பேச ஆளில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு
வேறு வேலைகள் இருந்திருக்கும்.
இப்போதைய வெனிசுவேலாவை வேடிக்கை
பார்ப்பதைப்போலவே – அப்போதும்
மௌனமாய்க் கடந்துபோனார்கள்.
“உங்களை இழந்துவிட்டோம்
கர்னல் கடாபி!”
‘நொறுங்குண்ட லிபிய மக்களின் அழுகைக்குரல் ‘ என்ற தலைப்பிட்ட
‘AFRICANEXPONENT.COM’ கட்டுரையொன்றை
சேலம் வழக்கறிஞர் கே ஆர் மாசிலாமணி
K R Masilamani
பகிர்ந்திருந்ததைக் கண்ணுற்றுக் கலங்குகிறேன்.
“கடாபிக்கு எதிரான புரட்சியின் முன்னெடுப்புகளில் முதல் ஆளாய்ப் பங்கெடுத்தேன். மற்றெவரையும்விட கடாபியை வெறுத்தவன் நான். இப்போது தவறை உணருகிறேன். மற்றெவரையும்விட கடாபியை நேசிக்கிறேன் …”
என்கிற 31 வயது மொஹம்மத் கேட்கிறார் :
” கடாபி சாகடிக்கப்பட்டபிறகு லிபியாவில் ஏழு அரசாங்கங்கள் மாறிவிட்டன. எம்வாழ்வில் என்ன மாற்றம் நேரிட்டது?”
கடாபியே எத்தனைக்காலம் ஆள்வார் என்று கேட்டவர்கள் – ‘அமெரிக்கக் கழுகின் ‘கண்களிலிருந்து அந்தச் சின்னஞ்சிறிய நாட்டை அவர் பொத்திப் பாதுகாத்ததை இன்று உணர்ந்து அழுகிறார்கள்.
அமெரிக்காவின் காலமும் கனவுகளும்
ஒரு நாள் கரையும். அன்றைக்கு….
அதன் கைப்பிடியில் சிக்குண்டிருந்த அசிங்கத்துக்காக –
உலகம் வெட்கிக் குனியும்!