வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !

ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தவரை வடக்கிலும் கிழக்கிலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபை ஒன்றை நிறுவுவதோ அல்லது நிர்வகிப்பதோ நடைமுறையில் மிகுந்த சவாலான விடயமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் தெற்கிலே சிங்கள சமூகத்துடன் வாழும் நிலையில் தமிழர் தரப்பினரின் தாயக் கோட்பாட்டை , சுய நிர்ணயக் கோட்பாட்டை அடியொற்றி முஸ்லிம் “தாயக “, “தன்னாட்சி” கோட்பாடுகளைக் கொண்டு சுயாட்சி அலகு கோருவதென்பது நடைமுறையில் சாத்தியமானதா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

இவை யாவும் ஒரு புறமிருக்க , பசீர் சேகு தாவூதின் கருத்தைக் கேட்டு முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அஸ்ரபின் ஒரே ஒரு மகனான அமான் அஸ்ரப் , தனது தந்தை , துறைமுக கப்பல் , புனர்வாழ்வு ,மீள்நிர்மான அமைச்சராக பதவியேற்றபின் நடந்த கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ” இந்நாட்டில் ஒரு சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில் , எங்களின் திறன்களின் வரம்புகளை நாங்கள் அடைந்துள்ளோம் ” என்று அவர் குறிப்பிட்டதையும் , இலங்கை மக்களுக்கு பரந்தளவில் சேவை புரிவதென்றால் பரந்த தேசிய அரசியலுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிக்க வேண்டிய அவசியத்தையும் , அங்கு முஸ்லிம்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் பற்றி அஸ்ரப் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.
“As a party representing a minority in this country, we have reached the limits of our abilities. If we are to serve the nation and its people at a greater degree, we must then, now look to expand our horizons into national politics and aim to define a role for ourselves within.
Thus, he began to devote his career and time exclusively towards the formation of the National Unity Alliance (NUA) a pluralistic political entity whose mandate was solely for a UNITED Sri Lanka, undivided by any means.
இந்தப் பின்னணியில்தான் இந்த முஸ்லிம் மாகாண சபை கோரிக்கைக்கு முன்னர் கிழக்கில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளை மேலோட்டமாக பார்ப்பது அவசியமாகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களிலும் (1988) , அதனைத் தொடர்ந்த நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் (1989) , போட்டியிட்ட பொழுது முஸ்லிம் மாகாண சபைக்கான கோசங்களை முஸ்லிம் காங்கிரஸ் தங்கள் கட்சியின் அரசியல் இலக்காக வெறும் மேடைப் பிரச்சாரமாகவே முன் வைத்தது. ஏனெனில் அவ்வாறான ஒரு கோரிக்கை குறித்து எவ்வித வரைபுகளும் முஸ்லிம் காங்கிரசிடம் இருக்கவில்லை. இது பற்றிய “வீட்டு வேலை ” (Home work ) ஒன்றைத் தன்னும் முஸ்லிம் காங்கிரஸ் அதுவரையில் செய்திருக்கவில்லை. முஸ்லிம் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு அதுவரை கால பெற்ற அரசியல் அனுபவத்தில் கிரகிக்கவே மிகக் கடினமான ஒரு சங்கதியாகவே முஸ்லிம் மாகாணம் என்ற கோரிக்கை இருந்தது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் குறித்து புவியில் அரசியல் வரலாற்றுப் பின்னனியோ , அதனையொட்டிய சிந்தனைகள் , கருத்தாடல்கள், போராட்டங்கள் என்பனவோ மேலோங்கியிராத ஒரு சமூகமான வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகம் சடுதியாக தனித்துவ முஸ்லிம் அரசியல் முன்னெடுப்புக்களை மேற் கொள்ளவேண்டிய புற அரசியல் சூழ்நிலைகள் நிலவிய காலம் அது.
Monday, 7 March 2016

(எஸ்.எம்.எம்.பஷீர்.)