கடந்த வாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கனடாவிலிருந்து வந்திருந்த முதலீட்டாளர் குழுவொன்று சந்தித்திருந்தது. இந்தக் குழுவில் முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 29 பேர் அடங்கியிருந்தனர். இந்தச் சந்திப்பின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதியை அபிவிருத்தியடைய வைப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்குரிய ஏதுநிலைகளை ஆராய்வதாகும். ஆனால், “சந்திப்பு இனிக்கவில்லை. திருப்தியளிக்கவில்லை. உரிய முறையில் இதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. சரியான அக்கறை காட்டப்படவில்லை. சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே எழுத்தில் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்று முதலீட்டாளர்கள் குழு கவலை தெரிவித்திருக்கிறது.
இந்த ஏமாற்றம் ஏன்?
நல்ல பதிவு கருணாகரன் என்மனதில் படுவதை பதிலாக பதிவிடுகின்றேன் – சாகரன்
வட மாகாணசபை தேர்தலுக்கான முனைப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நான் ஒரு கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு ஒரு தூர நோக்குப் பார்வை(Vision) இல்லை எனவே வடமாகாணசபையை இவர்கள் கைப்பற்றியும் எதனையும் செய்யப் போவது இல்லை என்று. மத்தியில் மூன்றில் இரண்டு, மாகாணத்தில் மூன்றில் இரண்டு என்று வென்றிருந்தாலும் மகாணசபைக்கு இருக்கும் அதிகார வரையறைக்குள் இவர்களால் ஏதும் செயற்படுதப்படப்போவதில்லை என்பதை கோடிட்டுக் காட்டி வந்தோம். எமது அரசியல் நிலைப்பாட்டால் எமது கூற்றை துரோகத்தனமானது என்று புறந்தள்ளிவிட்டனர் பலர்.
இன்று (வட)மகாணசபை அமைந்து வருடங்கள் ஆகியும் சாத்தியமான நிலமைகளிலும் ஏதும் நடைபெறாததற்கு இது முக்கிய காரணம். மற்றது புலிகளின் முக்கிய செயற்பாடுகளில் ஒன்று இயல்பு நிலை உருவாவதை தடுத்தல் என்பதாகவே 80 களின் ஆரம்பத்தில் இருந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்திலும் புலிகள் ஏகபோகமாக கருணாகரன் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலங்களிலும் செயற்பட்டனர். இதன் தொடர்சியான செயற்பாடுகளே அவர்களின் வழித்தோன்றல்களும் செய்கின்றார்கள், செய்வார்கள் என்பதே யதார்த்தம். யுத்தம் முடிந்து 8 வருடங்களாகியும் மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்புவதை இவர் இதயசுத்தியுடன் விரும்பவில்லை.
அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகரை யாழில் சந்தித்த போது தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக வட பகுதியில் தொழில் முயற்சி, அபிவிருத்தி, வேலைவாய்பு உருவாக்குவதில் இந்தியாவின் பங்கு பற்றி பேசியிருந்தோம். இதற்கு அவர் பதிலழிக்கையில் ‘…. சொன்னால் நம்பவீர்களோ தெரியாது….? இலங்கை அரசை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடக்கில் தொழில் வாய்புக்களை எற்படுத்தும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு அதிகம் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்….’ என்று அச்சுவேலி கைதொழில் பேட்டையை மீளவும் செயற்திறனுடன் செயற்படுத்துவது பற்றி குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார். எனக்கு இது புதுவிடயமாக இருக்கவில்லை.
மேலம் புலிகள் பிரசன்ன காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராளிகளாக அல்லாமல் சிப்பாய்களாகவும் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் மக்களாக இல்லாமல் வெறும் ஊழியர்களாகவும் உருவாக்கப்பட்டனர். இந்த மனநிலையை உருவாக்கியவர்கள் புலிகளே. இது மனநிலை சம்மந்தப்பட்டவிடயம். அதுதான் யுத்தத்தின் பின்பு ஒரு சிறிய அளவிலேனும் புலிகள் காலத்தில் செயற்படுதப்பட்ட சுயதொழில்களின் சிறய வடிவங்கள் ஏனும் இதுவரை மீளெழாமல் இருப்பதற்கு காரணம். இது புலிகள் காலத்தில் சட்டம் ஒழுங்கு குற்றச் செயல்கள் குறைவாக இருந்தது தற்போது அதிகம் எனவும் கூறப்படுவதற்கும் பொருந்தும்.
துப்பாக்கியிற்கும் ஏக மேலாதிகத்திற்கும் பயந்து வாலைசுருட்டிய போக்கே அன்று இருந்தது. மாறாக மக்கள் அறிவூட்டப்பட்டு சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு முறைகள் உருவாக்கப்படவில்லை எனவே துப்பாக்கிகள் மௌனித்ததும் சுருட்டியவாலை…..ஆவா…. போதைப் பொருள் கலாச்சாரச் சீரழிவு. இந்த யதார்தங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஏற்றுக் கொள்ளவேண்டும். புலிகளுடன் விடுதலை என்று நம்பி இயந்து இசைந்து நடந்த பலரும் உணரத்தவறும் விடயங்கள் இது.