அண்மைக்காலமாக TNA யின் சரணாகதி அரசியல், வட, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் பல உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிரணியினர். பல புதியவர்கள். புதிய கட்சிகள் உருவாகி/உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பலமான சக்திகளாக வளரும் வாய்ப்பு இருக்குமோ தெரியவில்லை. ஏற்கனவே வடக்கில் டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் எனச் சிலர் உள்ளனர். அவர்களின் அண்மைக்காலப் பலவீனங்கள்/பிரச்சினைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை. கிழக்கில் இப்போது புதிய குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இதனிடையில் சுரேஷ் பிரமேச்சந்திரன். அவதானிப்போம். மக்கள் எண்ணப்போக்கை அறிய முயல்வோம். – விஜய்
வெளியில் தெரியும் தெரியப்படுத்தப்படும் முகங்களுக்க அப்பால் மறைந்து கிடக்கும் மறைக்கப்படும் பல முகங்கள் தலமை கொடுக்க கூடிய தகுதி திறமையுள்ளவர்கள் இருக்கின்றார்கள் இவர்களை அடையாளப்படுத்தி முன்னுக்கு கொண்டு வரவேண்டும் ஒரு பரந்து பட்ட ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும். கலங்கட்டும் கலக்கி இறைப்போம் நன்நீரைப் பெற. தேர்தல் வெற்றிக்கான கோஷங்களும்தான் இன்றுவரை முன்னுரிமை பெற்றிருக்கின்றன. மக்களுக்கான தலமை முன்னுரிபை பெறவேண்டும் இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும். – சாகரன்