பின்பு முன்னவர் செய்ததை இவர்களும் செய்தனர்… இதற்கு மேலும் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தினர் அது மதமாக… மொழியாக…. பிரதேசமாக…..
விரதம் இருந்து சாப்பிட்ட வாழை இலையை வீட்டின் முகட்டிற்குள் நாமும் ஒழித்து எம்மை காப்பாற்ற முயன்றோம்.
அநியாயங்கள் அதிகரித்தன…. யேசு புராணத்தை முன்னிறுத்தி தம்மைக் காப்பாற்ற முயன்றனர்…
சில காலம் பின்பு…
பொருள் அள்ளலாம் பொற்குவியல் அள்ளலாம் வாசனைத் திரவியங்கள் எடுக்கலாம் என்று இந்து சமுத்திரத்தின் சொர்க்காபுரி இலங்கை என்று அறிந்தனர் சூரியன் மறையாத ஆட்சியை அன்று நடத்தியவர்கள்.
கொலம்பஸ் மேற்காக செல்ல இவர்கள் கிழக்காக வந்தனர்
வந்ததும் வந்தனர் முன்னவரை அடித்துக் கலைத்தனர்.
பாடசாலை கட்டினர். குறைந்த எழுத்துக்களை உடைய ஆங்கிலத்தையும் அறிமுகப்படுத்தினர். எமக்கு அந்நியமாக இருந்த மதங்களை மேலும் பரப்பினர் அதற்கான திருச்சபை கோவில்கள் கட்டினர். தாம் போவதற்காக ஆளுவதற்காக புகையிரதப் பாதை அமைத்தனர்.
இதில் மக்களும் பயணமானார்கள். பயனடைவதாக உணர்ந்தார்கள்.
பாடசாலை கல்வி நிர்வாகத்தை நடாத்த தேவை அல்லவா. இதன் போக்கில்…. தமது ஊர்காரரை விட உள்ளுர்காரரை வைத்து நிருவாகமும் செய்தனர்.
கூலிக்கு வேலை செய்ய வறுமையை எற்படுத்தி தென் இந்தியாவில் இருந்து மக்களைக் கொண்டு வந்து மலைகளில் குடியேற்றினர். அவர்கள் வருவதற்கான பாதையையும் அவர்களைக் கொண்டே அமைத்தனர்.
வடக்கு, கிழக்கு, தெற்கு என்று திட்டமிட்ட பிரிதாளுகையை செய்தனர்.
இறுதியில் அது புத்தன் என்றும் சைவன் என்றும் பெருமானார் என்றும் மோதவிட்டனர் இதற்கு மேலாக மொழியால் மோதவிட்டனர்.
தமக்கு தேவையானவர்களை தமது இடத்திற்கு கப்பலில் கொண்ட சென்று கௌரவித்து பிரித்தாளுகையை வலுப்படுத்தினர்.
மொழி, மதம், இனம்என்பனவற்றைக் கடந்து ஒன்றாக நின்று வெள்ளையனே வெளியேறு என்று போராடினோம்.
இரண்டாம் உலக யுத்தமும் கை கொடுத்தது
எதிர்ப்பைப் பார்த்து…. இங்கிருந்தால் எமக்கு சமாதிகட்டி விடுவார்கள் என்றது அவர்களின் ஆங்கிலேயப் புத்தி.
அவர்களும் எனக்கு வரி கட்டு என்று ‘விடுதலை’ தருகின்றோம் என்றனர். ஆம் என்றோம்.
எம்மை மோதவிட்டு தமது நாட்டில் இருந்தபடி வரியை அறவிட போய்விட்டனர்.
நாமோ பிரிந்து கிடக்கின்றோம் பிளந்து கட்டுகின்றோம் பிரிவினையைக் கேட்கின்றோம்.
அதற்கு சத்தியாககிரகமும் செய்தோம் யுத்தமும் செய்தோம் செய்கின்றோம்.
இதற்கு ‘விடுதலை’ கொடுத்தவர்களே ஆயுதங்களும் கொடுத்து பின்பு இடிந்தவற்றை கட்ட கடனும் கொடுக்கின்றனர்.
போங்கடா உங்கள் ஆயுதமும் அபிவிருத்தியும் புனர் நிர்மாணமும்
நாம் எமக்குள் யோசிக்கவில்லை நாம் ஒன்றாக நின்றால்தான் இந்த ஆயுதங்களும், கடனும், கட்டுமானமும் என்ற சுரண்டல்கள் நிற்கும் என்று.
இன்று இலங்கையர் என்று நாமாக இருக்க முற்பட்டாலும் புத்தனை எங்கும் நிறுவி ஆக்கிரமிப்பை மட்டும் டி.எஸ் இருந்து ஜே.ஆர் வழியாக ராஜபக்ச ஊடாக இன்றைய ரணில் வரை யாரும் நிறுத்தவில்லை.
ஆட்சியைப் பிடிப்போம் சிஸ்ரத்தை(System) மாற்றுவோம் என்று சொல்லும் அனுர குமார உம் அழுத்தமாக எதனையும் சொல்லவில்லை…. நிறுத்துவோம் என்று.
எனவே ஆயுதங்களை விற்பனை செய்வர்.. கடனும் வழங்குவர்… சோத்திற்கு அரசி வாங்க இடமும் காட்டுவர் அல்லது கோதுமை மாவை தருவார்கள் கடலுக்குள் கொட்டாமல்…?
கூடவே அழிவையும் செய்வர், மீள் கட்டுமானத்தையும் செய்வர்…
எல்லாவற்றிற்கும் கடனாக ஐ.எம்.எவ்(IMF) என்றும் இன்ன பிறவென்றும் கடனாக தருவார்கள்.
என்ன கன்னங்கரா கொண்டுவந்த இலவசக் கல்வி வரை பறித்தெடு என்பார்கள்… ஓய்வூதியத்தை குறை என்பார்கள்… வரியை கூட்டு என்பார்கள்….
முன்பு அவர்கள் நாட்டிற்கு இருந்து கொண்டு செய்ததை தற்போது தமது நாட்டில் சௌகரியமாக ஜி 7(G 7) என்று சொல்லிய வண்ணம் செய்கின்றார்கள்.
போங்கடா உங்கள் சுதந்திரமும் கட்டுமானங்களும் அரசியலும்.
சிலையை அமைப்தையும் தொல்பொருள் என்று செய்வதையும் நிறுத்துங்கள் நாட்டிற்கு தேவையான இராணுவம் மட்டும் என்று நிறுத்தத் தொடங்குங்கள்.
அவன் ஆயுதம் விற்க இங்கு சந்தை இனிமேல் ஏற்படுத்த முடியாது போகும்.
வட்டியிற்கு கடன் கொடுக்கவும் தேவை இல்லாமல் போகும்.
வயலும் வரப்பும் வாழ்வும்…. கடலும் நீரும் வாழ்வும் எம்மைக் காப்பாற்றும்.
(இலங்கையில் டச்சுப் பிரசன்னம் (முன்னர் சிலோன் என்று அழைக்கப்பட்டது) 150 ஆண்டுகள் நீடித்தது, அதிகாரப்பூர்வமாக 1658 இல் டச்சுக்காரர்கள் போர்த்துகீசியர்களை வெளியேற்றியபோது, ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பின் ஆண்டான 1796 வரை. இருப்பினும், தீவுடனான முதல் சந்திப்பு 1602 இல் ஜோரிஸ் வான் ஸ்பில்பெர்கன்(Joris van Spilbergen) கிழக்கு கடற்கரைக்கு வந்தபோது தொடங்குகிறது.)
(வாசனைத் திரவியங்கள் முத்து பவளம் என வளங்களை கொள்ளையடிக்க உரோமேனிய பேரரசு தனது சிறந்த மாலுமிகளுக்கு பணம் தருவதாக ஆசைகாட்டி வாஸ்கோ டா கமா உம் கொலம்பஸ்(Columbus) ஐயும் இந்தியப் பிரதேசத்தை கண்டு பிடியுங்கள். எங்கள் ஆளுகையிற்குள் கொண்டு வாருங்கள் என்று ஆசை காட்டுகின்றான்.
அதனைச் சிரமேற்கொண்டு போத்துக் கேச வாஸ்கோ டா கமா(Vasco da Gama) இந்தியப் பிராந்தியத்தை அடைந்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர …. கொலம்பஸ் திசை மாறி..? அமெரிக்கா கண்டத்தை அடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி பிற்காலத்தில் அவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைப்பதற்கு ஏதுவான வரலாற்று கொள்ளைச் சம்பவத்துடன் ஆரம்பமானதே இந்த வருகைகள்… ஆக்கிரமிப்புக்கள்)