(சாகரன்)
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வரும் வன்முறைகளை கட்டுப்படுத்தி இல்லாமல் செய்ய இளைஞ்கள் மத்தியில் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு பண்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு சகலவும் உழைக்க வேண்டும் குரல் கொடுக்க வேண்டும் பல்கலைக் கழகம் பாடசாலை கிராமத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் கோவில் பரிபாலன சபைகள் என்று எல்லாஇடங்களிலும் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்க செயற்பட வேண்டும்.
இந்த குற்றச் செயலில் ஈடுபடுவர்கள் எமது சகோதரர்கள் மகன்கள் அண்னம்மார்கள் என்பது உணரப்பட வேண்டும். எனவே இவர்களை எமது உறவுகள் என்ற அடிப்படையில் நியாயப்படுத்தாது இதனை தடுத்து நிறுத்த முயவேண்டும்… ஒத்துழைக்க வேண்டும். இதற்கு ஒரு பொது வேலைத்திட்டம் அவசியமாகின்ற போதும் கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்கள் கணிசமான வேலைகளை செய்ய முடியும் பொலிசை இறக்கி தடுத்தல் அல்லது கண்டும் காணாமல் இருத்தல் இதன் வீச்சை குறைக்க உதவாது.
பொறுப்பு வாய்ந்தவாய்ந்த நிர்வாகத் தலமை தனது கடமையை தட்டீக்கழிப்பது இந்த வன்முறைகளை ஒரு வகையில் ஊக்கிவிக்கவே முயலும். இவற்றிற்கு அப்பால் இதில் ஈடுபடும் இளைஞரகளின் அடிப்படைப்பிரச்சனையான சுய முன்னேற்றத்திற்கான விடங்களில் (அது கல்வியாக இருக்கட்டும், தொழில் முயற்சியாக இருக்கட்டும்) இவர்களை ஈடுபடுத்தும் பொறி முறை செலிழந்து இருப்பது என்ன செய்வது என்ற ‘வெட்டி’ நேரத்தன்மைகள் குறைப்பதற்கு யாபேரும் உழைக்க வேண்டும்.
மத்திய அரசு இது போன்ற உள்ளுர் ‘கலகங்களை’ மறைமுகமாக ஊக்கிவிக்கவே முயலும் காரணம் பிரதான பிரச்சனையை திசை திருப்ப. இந்த பொறியில் இருந்து நாமே சுயமாக எம்மை தற்காத்து மீள் எழவேண்டும் இதனையே 80 களின் முன்பு ஒழுக்கமான நாகரீகமான முன்னேற்றகரமான யாழ் சமூகம் கை கொண்டிருந்தது. இதில் ‘என்னை’ முன்னேற்றுதல் என்ற ‘சுயநலமும்’ இருக்கத்தான் செய்யும்.
இதுதான் ஒரு பலம் மிக்க சமூகத்தை அன்று கட்டியெழுப்பியும் இருந்தது. இந்த பலமிக்க சமூகத்தை கட்டியமைக்க மேல் தட்டுவர்க்கம் விரும்பாது என்பது இங்கு கவனத்தில் எடுகப்பட வேண்டிய விடயம;. இந்நிலையை ஏற்படுத்த யாவரும் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து கலந்தாலோசித்து குரல்கொடுக்க வேண்டும் இங்கும் ஐக்கியம் ஆரம்பிக்கப்படலாம் தேர்தலில் மட்டும் அல்ல