புழல் ஏரிக்கருகில் தோழர்கள் பெருமளவு வாழ்ந்திருந்த புழல் முகாமிற்கு அருகில் கவாங்கரை மயானத்தில் தோழர் வி ஏ கே இன் பூதவுடல் அக்கினியில் சங்கமமாகியது”
வடபுலத்து இடதுசாரிகள் வரலாற்றில் தோழர் வி ஏ கே வர்க்க விடுதலை சமூக நீதி பால் சமத்துவம் சர்வதேச சகோதரத்துவம் என வாழ்ந்தவர் .
சமூக நீதிக்கான அவரது போராட்டம் வரலாற்றின் அத்தியாயங்கள் .
1960களின் நடுப்பகுதியில் நிகழ்ந்த சமூக நீதிக்கான போராட்டத்தில் போலீஸ் அராஜகத்தில் சக தோழர்களுடன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு அரச பயங்கரவாதத்தின் வலி சுமந்த தோழர் .
“சாதியம் ஒழிப்போம் சமத்துவம் காப்போம் “என்ற பதாகையுடன் சுன்னாகத்திலிருந்து யாழ் முற்ற வெளி நோக்கிய சமூக நீதிக்கான சரித்திரம் கண்டிராத பேரணி
நாடளாவிய அளவில் சமூக மாற்றம் கருதி 1950 களில் இருந்து வெவ்வேறு வரலாற்று காலகட்டங்களின் இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பயணித்தவர்.
அன்றைய இரு பெரும் சோசலிச முகாம்களுக்கும் சென்று வந்தவர்
அன்றைய சோவியத் யூனியனின் தாஸ்கன்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர் .சுஸ்லோ உட்பட பல தோழர்களை சந்தித்தவர் .
பின்னாளில் மக்கள் சீனக் குடியரசுக்கு சென்று வந்தவர் தோழர் மாவோ உட்பட பல தோழர்களை சந்தித்தவர் .
நாடு தழுவிய அளவிலும் வட புலத்திலும் இடதுசாரி இயக்கம் முன்னோடிகள் அவரின் தோழர்கள்
ஒரு சுருட்டு தொழிலாளியாக ஆரம்பித்து சமூக மாற்றத்திற்கான இலங்கையின் நீள அகலங்களில் ஓயாத பயணம்.
தொழிற்சங்க வாதியாக தலைமை வழிகாட்டியாக செயல்பட்டவர்.
68 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ கிடைத்தது
பின் நாட்களில் முற்போக்கான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி பாரம்பரியத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர் .
அனுபவம் வாய்ந்த மூத்த வழிகாட்டியாக செயற்பட்டவர் பரவலாக தோழர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியவர். 1986 டிசம்பரில் புலிகளின் சகோதர படுகொலை தாக்குதலில் காயமடைந்தவர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவான மாகாண சபை முறையை தேசிய இன பிரச்சனைக்கு தீர்வாக ஏற்றுக்கொண்டு செயற்பட்டவர் .
சிதைவடைந்து போன தொழிற்சங்க இயக்கங்களையும் புத்துயிர் பெறச் செய்வதற்கு ஜனநாயக இடைவெளி இல்லாத படுகொலையும் காணமல் போதிலும் கெடுபிடியுமான காலத்திலும் முயற்சிகளை மேற்கொண்டவர் .
பிற்கால கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்த போது அங்கு முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் அகதி முகாம்களில் வாழ்ந்த தோழர்களுடன் இடையறாது உறவை பேணியவர்.
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் என் பணி செய்து கிடப்பதே என வாழ்ந்த தோழர் தனது சமூக அரசியல் பயணத்தில் பாரம்பரியத்தில் நெருக்கமான தோழர் சுப்பையா அவர்களின் அண்ணா நகர் வீட்டில் அவரது மடியில் சடுதியாக
அவர் விடைபெற்றார்.
வீரம் விளைந்தது நாவலில் ஒஸ்திரோவ்ஸ்கி எழுதியது போல்” திடீர் நோயோ சோக விபத்தோ ஒரு மனிதரின் வாழ்விற்கு உலை வைக்கலாம் “
ஆனால் நான் வாழும் போது மனித குலத்திற்காக அர்ப்பணித்தேன் என்ற நீ பெற்றவராக மரணிக்க வேண்டும் என்பார்
தோழர் கந்தசாமி அவர்களின் வாழ்வும் மரணமும் அப்படித்தான்
வெவ்வேறு தலைமுறையினருடன் ஒரு இளைஞரின் துடிப்புடன் உரையாடும் ஆற்றல் அவரிடம் இருந்தது
கடைசி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர் தோழர் விஏகே
ஒரு இளைஞரின் சுறுசுறுப்பு அவரிடம் எப்போதும் காணப்பட்டது.
ஊரிலும் உலகளாவிய அளவிலும் வாழ்ந்த தோழர்களுக்கு இடையறாது வழிகாட்டல் ஆலோசனை கடிதங்களை எழுதிக் கொண்டிருப்பார் .
முதலில் தோழர்கள் பாக்கியா குமார் அவர்களின் மடிப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டு
அவரின் இறுதி நிகழ்வு புழல் முகாமில் தோழர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு புழல் ஏரிக்கு அருகே காவாங்கரை மயானத்தில் அக்கினியில் சங்கமம் நிகழ்ந்தது
1990 தோழர் பத்மநாபா தோழர்கள் படுகொலை 1991 முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இந்திய பிரசைகளும் படுகொலை . இதற்கும் பிந்திய துன்பகரமானதும் கெடுடியானதுமான சூழலில் 1992 பிற்பகுதியில் இக்கட்டான தருணத்தில் அவரது மறைவு நிகழ்ந்தது
மறைந்த தோழர் தா பாண்டியன் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தமிழகத்தின் முற்போக்காளர்கள் கலை இலக்கியவாதிகள் உறுதுணையாக நின்றார்கள்
இங்கிலாந்து ஹைட் பார்க் இடுகாட்டில் கார்ல்மார்க்ஸின் நிரந்தர உறக்கம் போல
புழல் ஏரிக்கருகில் தோழர்கள் பெருமளவு வாழ்ந்திருந்த புழல் முகாமிற்கு அருகில் கவாங்கரை மயானத்தில் தோழர் வி ஏ கே இன் பூதவுடல் அக்கினியில் சங்கமம் ஆகியது .
2024 டிசம்பர் 4 அவரது நூறாவது ஜனன தினம்
2024 இல் இலங்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் தோழர் வி ஏ கந்தசாமி அவர்களின் கனவுகள் மெய்ப்படுவதற்கான தருணங்கள். வாழ கிடைத்திருந்தால் அவர் பரவசம் அடைந்திருப்பார் அப்படியான மனம் அவரது.