
(சாகரன்)
இலங்கை தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் சம உரிமை பெற்று வாழவில்லை. பேரினவாதம் இனப் படுகொலைகளை கடந்த காலத்தில் நடாத்தி இதன் தொடர்சியாக தனது பேரினவாத சிந்தனையில் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை அழிப்பதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றது. இதற்கு எதிரான சாத்வீக போராடங்களும், ஆயுதப் போராடங்களும் நடைபெற்றன. பலன்… கிடைத்தது என்னமோ சட்டரீதியான அதிகாரப் பரவலாக்கலுக்கு 13ம் திருத்தச் சட்டமும் இதன் அடிப்படையில் அமைந்த மாகாண சபையும் தான்.