(சாகரன்)
ஒரு கண்டம் அளவிற்கு விரிந்திருக்கும் வட அமெரிக்க நாடு கனடாவின் பொதுத் தேர்தல் விடிந்தால். பல இலட்சம் உழைக்கும் மக்களின் விடியலைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் உலகளாவிய காலநிலை மாற்றம் பற்றிய சுற்றுச் சூழல் போன்ற விடங்களின் போக்கை தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது முன்னிலை பெறுகின்றது. அமெரிக்கா, இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அதி தீவிர வலதுசாரிக் கொள்கையாளர்களை நாட்டின் தலைவராக மாற்றி தேர்தலைப் போன்று கனடாவையும் மாற்றியமைக்கும் பொது செயற்பாட்டிற்குள் கனடாவையும் வீழ்த்தும் பிரச்சாரங்களே உள்ள நாட்டிலும் வெளி நாட்டிலும் ஊடகச் செல்வாக்குள் செயற்பட்டு வரும் நிலையில் தேர்தலை கனடா சந்திக்கின்றது.