இன்னும் சொல்லப்போனால் அது தலித்துக்களிடையேயும் ஒரு பிரிவினருடைய கட்சி என்றே பார்க்கப்படுகிறது. சிறுத்தைகளின் கோட்பாடு சாதி ஒழிப்பு வர்க்க விடுதல பெண்விடுதலை தமிழ் தேசியம் ஏகாதிபத்திய எதிர்ப்பு என பன்முகங்களை கொண்டிருப்பினும் ஒரு குறிப்பிட்ட சாதியை பிரதினிதுத்துவப்படுத்தும் கட்சியாகவே உணரப்படுகிறது. இந்த சாதிய மன நிலை மிகப்பெரும் சவால். நாம் ஒரு கிராமத்தில் எமது கொடிக்கம்பத்தை நாட்டக்கூட முடிவதில்லை. திமுக , அதிமுக, காங்கிரஸ் , பா ஜ க ,கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் பறக்கலாம். ஆனால் எமது கொடி பறக்கக்கூடாது. இது தான் நிலமை.
சாதிய சிந்தனையை வைத்துக்கொண்டு பிரிந்திருக்கும் சமூகம் தமிழனாக ஒற்றுமை பட முடியாது என்றார். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனையில் சாதியபிரிவினையின் தாக்கத்தை பார்க்க தவறுகிறார் என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் பன்முகத்தனமையே ஜன நாயகத்தின் அடி நாதம் என்பதை மிக ஆணித்தரமாக சொல்லும் திருமா விடுதலை புலிகளை விமர்சனம் ஏதுமின்றி முழுமையாக ஏற்றுக்கொள்வது முரணாகவே படுகிறது . தமிழீழ தேசிய விடுதலையை ஆதரிப்பதென்பது கூட பிரச்சனை இல்லை.
என்ன இருப்பினும் திருமாவளவனை அவரது தலித்திய சிந்தனைகளுக்காக இலங்கை தமிழர் அழைத்து கௌரவித்தது இதுவே முதல் தடவை. உணர்ச்சி அரசியலை கையிலெடுக்காமல் ஆழமான தலித்திய சிந்தனைப்பார்வை கொண்ட ஒரு ஆழுமை திருமா என்பதில் கேள்வி இல்லை. விம்பம் அவரை அழைத்தது ஒரு வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வே.
Siva Murugupillai //……..பன்முகத்தனமையே ஜன நாயகத்தின் அடி நாதம் என்பதை மிக ஆணித்தரமாக சொல்லும் திருமா விடுதலை புலிகளை விமர்சனம் ஏதுமின்றி முழுமையாக ஏற்றுக்கொள்வது முரணாகவே படுகிறது . தமிழீழ தேசிய விடுதலையை ஆதரிப்பதென்பது கூட பிரச்சனை இல்லை…..// – இது திருமாவிடம் மட்டும் அல்ல பல தி.க.வினரிடமும் சிறப்பாக பெரியார் தி.க விடமும் ஏன் தா. பாண்டியன் வீரசந்தானவரையிலும் ஏற்பட்ட தவறான கண்ணோட்டம். இதற்கு சிவத்தம்பி போன்றவர்களின் ‘உயிர் பய’ அரசியலும் காரணம். இதுவும் ஈழத் தமிழர் போராட்டம் மௌனிப்புடன் நின்று போனதற்கு காரணம். இன்னமும் இது பற்றி சுயபார்வை தொடரந்த தெளிவு இவர்களிடமும் எம்மவர் பலரிடமும் ஏற்படவில்லை. எனவே நாம் கடக்க வேண்டிய பாதை வெகு தூரமாகவே அமைகின்றது