(Maniam Shanmugam)
நிகுயென் வான் ட்ரோய் (Nguyen Van Troi) 24 வருடங்கள் (1940 – 1964) மட்டுமே வாழ்ந்த ஒரு வியட்நாமிய இளைஞன். அவர் அமெரிக்க – தென் வியட்நாம் கூட்டுப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு ஏறத்தாழ 56 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் இன்றும் வியட்நாமிய மக்களின் நெஞ்சில் ஒரு தேசிய வீரனாக வாழ்ந்து வருகின்றார். வயதில் மிகக் குறைந்தவரான இந்த இளைஞன் அப்படியான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு என்ன காரணம்?