(சாகரன்)
கந்தன் கருணை படுகொலை, துணுக்காய் வதை முகாம் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என பல பரிணாமங்களில் அரங்கேறி வந்த படுகொலைகளின் உச்ச கட்டமாக நடந்தேறியதே வெருகல் படுகொலை. ஆனால் முதல் மூன்று படுகொலைகளும் பொதுவெளியில் பேசப்பட்ட அளவிற்கு வெருகல் படு கொலை பேசப்படவில்லை. கூடவே இருந்து பின்பு பிரிந்து சென்ற துரோகத்திற்கு கண்டனம் என்னத்திற்கு..? என்ற நியாயமற்ற பார்வையும், கிழக்கிற்கு கிடைத்த கொலைப் பரிசு என்ற பிரதேசவாதமும், வெருகல் என்ற மறைவான காட்டுப்பகுதியிற்குள் நடைபெற்ற கொலைகள் என்ற சூழலும் இதனை அதிகம் அம்பலப்படுத்தும் நிலையில் இருந்த கருணா பிரிவின் கருணாவிற்கு ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் என்ற பல காரணிகள் இதற்கு காரணமாக இருந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு இரு தினங்களில் மக்களின் விடிவிற்காக போராட வந்த போராளிகள் சகோதரப்படுகொலை வடிவில் அதிகம் அரகேற்றிய நிகழ்வு இதுதான்.