அவருக்கு எப்படியும் பெப்ரவரி கடைசிப் பகுதியிலோ அல்லது மார்ச்மாதத்திலேதான் இந்த தொற்று ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறான நோயாளிகளுக்கு கொரோணா ஏற்பட்டால் ஆபத்து அதிகமென ஜனவரியிலேயே பேசத்தொடங்கிவிட்டோம். ஆனால் அப்போது யாரும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. அப்போதே பரவலாக பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் இவர் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து விலகியிருந்து தன்னைக் காப்பாற்ற நினைத்திருந்திருக்கலாம்.
இவரது உறவினர்கள், அவரை வேலை செய்ய அனுமதிக்காமல் விட்டிருக்கலாமே என இப்போது அழுவார்கள்.
உண்மையில் இது அவர்களின் பிழையல்ல. இறந்தவரின் பிழையுமல்ல.
அப்போது இதுபற்றிய விழிப்புணர்வுகள் மக்கள்மட்டத்தில் சேர்ந்திருக்கவில்லை. அரசாங்கம் இப்போதுபோல் ஊரடங்கு போடாவிட்டாலும் கொரோணா பரவுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அறிவித்தல் விட்டிருக்கலாம். பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அரசியல்வாதிகளும், பிரபலமானவர்களும் பேசியிருக்கலாம்.
நாங்கள் இங்கே எழுதுவது சில ஆயிரம்பேரோடு மட்டுப்படுத்தப்படுகிறது.
அப்படி அவர்கள் செய்திருந்தால் அந்தநோயாளிக்கோ, உறவினர்களுக்கோ ஆபத்து நிலமை புரிந்து இது தடுக்கப்பட்டிருக்கலாம். ஆகவே இது தடுக்கப்பட்டிருக்கக்கூடிய மரணம்.
ஆனால் தவறு இறந்தவர்மீதோ, உறவினர்மீதோ இல்லை.
ஆனால் இனிமேல் இப்படியொரு மரணம் நடந்தால் நிச்சயம் தவறு உறவினர்கள் மீதே.
வயதானவர்களுக்கும், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த நோய் இலகுவாகத் தொற்றி மரணத்தை ஏற்படுத்தலாமென போதியளவு விளக்கம் கொடுத்தாகிவிட்டது. இதன்பிறகும் அவர்களுக்கு தொற்று ஏற்படும் விதமாக நீங்கள் நடந்தால், அவர்களின் மரணத்தின் பிறகு நீங்கள் குற்ற உணர்ச்சியில் காலம் கடத்தவேண்டிவரும்.
ஆகவே கவனமாக வீட்டில் இருங்கள்!