ஸ்கன்டிநேவியன் நாடுகளைப் போல் மக்கள் நல அரசுகளை நிறுவ முற்படுகின்றதா நியூசிலாந்து.?

பூர்வீக குடியினரின் கலை பண்பாடுகள் மொழியின் வளர்சிகளை மேவிய ஆங்கில மொழி மதம் என்பனவற்றை திணித்தனர் இங்கும். இவர்களின் இச் செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த பூர்வீகக் குடியினர் 1987 இல் தான் தமது தாய்மொழியான மஓறியை அரச கரும மொழியாக முடிந்துள்ளது.

நியூசிலாந்து விவசாயம், தொழிற்சாலைகளில் உற்பத்தி, சுற்றால்துறை போன்றவற்றை தமது முக்கிய வருமானத் துறையாக கொண்டுள்ளனர்.

பசுபிக் சமுத்திரத்தில் உலக வரைப்படத்தில் தென் கிழக்கு மூலையில் அவுஸ்திரேலியா கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் நாடு நியூசிலாந்து உண்மையில் வெகு தொலைவல் உள்ள நாடு தென் துரவத்திற்கு அண்மையில் அமைந்திருக்கும் நாடு
மலையும் அதனை; சார்ந்த ஆறுகளும் சம தரையுடன் கூடிய பசுமையான நாடு. பூச்சியத்திற்கு கீழ் செல்லாத அதே வேளை அதிக வெப்பத்தை கொடுக்கும் வெப்ப வலய நாடுகளுக்கும் உரிய வெப்பநிலையையும் கொண்டிராத நாடு.

மூன்று ஆண்டு காலம் மட்டும் ஆட்சிக் காலத்தை கொண்டிருக்கும் அரசியலமைப்பை உடைய நியூசிலாந்தில் 2017 ஆண்டுத் தேர்தலில் சிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையை பெற முடியாவிட்டாலும் இடதுசாரி கட்சிகளான ஏனைய இரு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்துக் கொண்டது.


அவரின் ஆட்சிக்காலத்து செயற்பாடுகள் சிறப்பாக கடந்த வருடம் தீவிரவாதிகளின் வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீதான் தாக்குதலைக் கையாண்ட விதத்திலும் ,அண்மைய கோவிட் 19 பெரும் தொற்றையும் கையாண்ட விதத்தில் மக்களிடம் பெற்ற பெரு ஆதரவால் மீண்டும் 2020 தேர்தலில் அமோக வெற்றியீட்டினார்.

பசுமைக் கட்சியுடன் அரசாங்கத்தை அமைத்த நியூசிலாந்து பிரதமர் ஆர்டன் நியூசிலாந்தில் அரசாங்கத்தை அமைக்க பசுமைக் கட்சியுடன் ஒப்பந்தமொன்றில் அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி தற்போது கைச்சாத்திட்டுள்ளது. இரண்டு அமைச்சுகள் வழங்குவதாகத் கூறியதுடன் அக்கட்சிக்கு மேலும் சுதந்திரம் வழங்கும் வகையில் விரிவான துறைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் பெரிய தேர்தல் வெற்றியை கடந்த மாதம் தனது மத்திய இடதுசாரிக் கொள்கைகளையுடைய தொழிலாளர் கட்சிக்கு பிரதமர் ஆர்டன் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், ஆளுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு பிரதமர் ஆர்டனுக்கு தேவையில்லை என்றபோதும், மக்களின் ஆதரவை கட்டியெழுப்ப கட்சிகள் எதிர்பார்க்கின்ற நிலையில் நியூசிலாந்தில் கூட்டணிகள் வழமையானதாகக் காணப்படுகின்றன.
கடந்த மாதத் தேர்தலுக்கு முன்னராக பசுமைக் கட்சி, நியூசிலாந்து முதலாவது கட்சியுடன் ஆளுங் கூட்டணியொன்றில் தொழிலாளர் கட்சி இருந்திருந்தது.

அண்மையில் பிரித்தானி நிறுவனம் ஒன்று நடாத்திய உலகின் ஆளுமை மிக்க பெண்கள் என்பதில் முதன்மை இடத்தையும் தனதாக்கிக் கொண்டார். தொடர்ந்தும் கோவிட் 19 இன் இரண்டாவது அலையையும் சிறப்பாக கையாண்டு வருகின்றார்.
இவரின் செயற்பாடுகள் நியூசிலாந்தும் உலகின் மகிழ்ச்சிகரமான ஸ்கன்டிநேவியன் நாடுகளான பின்லாந்து, சுவீடன், நோர்வே, டென்மார்க் போன்று தன்னை கட்டியமைத்து வருகின்றதா என்ற நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருக்கின்றது