அ. வரதராஜப்பெருமாள்
(2009 ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை தற்போதைய சூழலுக்கும் பொருந்தி இருப்பதினால் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது)
உங்களின் புதிருக்கு வரதரின் விடை
உங்களின் புதிர்
இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைக்கான அதிகாரங்களை அளிப்பதில் திருப்தியற்ற ஒன்று என்று 20 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை அரசுடன் அரசியல் ரீதியில் போராடி அந்த 13வது திருத்தத்துக்கு மாற்றாக பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பொறுப்பாளியான இந்திய அரசுக்கும் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் முன்வைத்தீர்;;கள். அத்துடன் மாகாணசபையின் உத்தியோக பூர்வமான தீர்மானமாக இலங்கை அரசுக்கும் முன் வைத்தீர்கள். ஆனால். இப்போது அதே 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கலை நிறைவேற்றினால் தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்படும் என்று தமிழர்களில் ஒரு பகுதியினராலேயே கூறப்படுகிறதே! இவைகள் பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன? இவ்வாறான போக்குகள் தொடர்பான உங்கள் விளக்கம் என்ன?