(தோழர் ஸ்ரனிஸ்)
அன்னை இந்திராகாந்தி அலகாபாத்தில் 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பிறந்தார். ,இந்தியாவின் நலன்களுக்கும்,பிராந்திய நலன்களுக்கும்,உலக அமைதிக்காவும்; அயராது பாடுபட்ட மாபெரும் தலைவர் அவர். தோழர் பத்மநாபா இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை எனும் இத்தில் நவம்பர் 19, 1951 இல் பிறந்தார். இலங்கையின் பல்லின மக்களின் வளர்ச்சிக்காகவும்,பிராந்திய நலன்களுக்காகவும்,உலக அமைதிக்காகவும் அயாராது பாடுபட்ட மாபெரும் தலைவராவார்.
அன்னை இந்திராவும்,தோழர்பத்மநாபாவும் நாளும் பொழுதும் மக்களைப்ற்றியே சிந்திப்பதாலும் சாதாரண மக்கள் தொடர்பாகவும,;,அவர்களது வாழ்வின் உயர்வுக்கு அயராது பாடுபட்டதாலும்,அவர்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவோ,அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ அக்கறை கொள்ளவில்லை.அன்னை இந்திரா அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக 96 வயதைக் கடந்து தற்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன்,அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.பிரதமரின் பாதுகாப்பினை இராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறிய ஆலோசனையை,தன் உயிருக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது எண்றுணர்ந்த போதும் இந்திரா புறக்கணித்து விட்டார்.அவருடைய மெய்க்காவல் படையில் இருந்த சீக்கியர்கள் அனைவரையும் வேறிடத்துக்கு மாற்றிட வேண்டும் என்று கூறியபோது “நாம் சமயச் சார்பற்றவர்கள் அல்லவா” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.அவருடைய நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு ஆலோசகரான ஆர்.என்.காப்,இந்திராவின் மாளிகையில் புழங்குமிடம் பாதுகாப்பற்றதாய் இருப்பதால்,முன்புறத்தில் உள்ள தோட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.அந்த யோசனையையும் இந்திரா ஏற்றுக்ககொள்ளவில்லை.பிரதமரின் பாதுகாப்பு வளையத்திற்குள் ஓரிடத்தில் இரண்டு சீக்கியர்களைப் பணியமர்த்தக் கூடாது என்று காவ் உத்தரவிட்டிருந்தார்.ஆனால் இந்திராகாந்தி அவர்களின் கொலையாளிகளில் ஒருவனாகிய சத்வந்த் சிங்,தன் சதிவேலைக்கு துணையான பியாந்த் சிங்குடன் சேர்ந்து இருப்பதற்கு எவ்வித சிரமமும் இன்றி அனுமதி பெற்றுவிட்டான்
தோழர்பத்மநாபாவின் பாதுகாப்பு தொடர்பாக பல தோழர்கள் அக்கறை கொண்டு அவரிடம் பேசிய போதெல்லாம் ஒற்றை வரியில் “நோ புரோப்பளம்” என்று கூறுவார்.கொஞ்சக்காலம் அவர் கும்பகோணத்தில் இருந்தபோது சைக்கிளை எடுத்துக்கொண்டு தன்னந்தனியாக கும்பகோணத்தில் உள்ள சிவபுரம் எனும் கிராமத்துக்கு அங்கு தங்கியிருந்த தோழர்களை பார்க்க செல்வார். இடைவழியில் அக்கிராம சிறுவர்கள் றோட்டில் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களுடன் சோந்து ஒரு சிறுபிள்ளைபோல் பேசுவார்.அவர் தனது பாதகாப்பு தொடர்பாக என்றும் அக்கறை கொண்டதில்லை மாறாக அவரது தோழர்கள் பாதுகாப்பு தொடர்பாக கூறியவற்றை ஏதாவது சொல்லி சமாளித்துவிடுவார்
.சென்னையில் அவர் தங்கிருந்த காலத்தில் புலிகளில் உளவாளியான சாந்தன் என்பவன் இலங்கையில் இருந்து “படிப்பதற்காக வந்ததாகவும். தனக்கு யாரையும் தெரியாது” என்றும் கூறியதால் ஈ.பி,ஆர்.எல்.எப் தோழர்கள் அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியும் செய்து தங்குமிடம்,சாப்பாடும் போடடுள்ளனர் இது சாந்தனுக்கு மிகவும் வசதியாக போனது. இறுதியில் அவன் கொடுத்த தகவல்களால் புலிகள் தோழர் தோழர் பத்மநாபாவை கொன்றார்கள்.
அன்னை இந்திரா,தோழர் பத்மநாபா ஒரே நாளில் பிறந்த காரணத்தினாலோ என்னவோ அவர்களின் பல செயற்பாடுகள் பொருந்தமாய் காணப்பட்டது.
சாதாரண மக்களின் வாழ்கை மேம்பாடு. மனிதர்களை மதிக்கும் பண்பு, தாங்கள் சாந்திருந்த கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சி உறுப்பினர்களின் நலன் என்பனவற்றில் அக்கறையுடன் செயற்பட்டார்கள்.
தோழர் பத்மநாபா அன்றே இலங்கையின் வடக்கு-கிழக்கில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக ஆழந்த கருத்துக்களுடன் செயல்பட்டார். இதன்காரணமாகவே அவர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார்.அன்று மௌனமாக இருந்தோர் இன்று இந்திய தலையீடு பற்றி பிரஷ்தாபிப்பது காலம் கட்நத ஞானம்; என்றே பார்க்க தோன்றுகிறது.
இன்று பலர் கடந்தகாலங்களை விடுங்கள் இனி நடப்பதைப்பார்ப்போம் என தங்கள் வசதிக்கேற்றாப்போல் பேசிவருகிறார்கள். வரலாறுகளை மறக்கச்சொல்வது வேடிக்ககையாகத்தான் உள்ளது.
இவர்களது பிறந்த தினத்தில் அவர்களது கருத்துக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் மீண்டும் ஒரு தடைவை நினைத்துப்பார்ப்போம்.